சாம்பியன்ஸ் டிராபி 2025: அணிகளை வழிநடத்தும் கேப்டன்கள் யார் யார்? லிஸ்ட் இதோ!

சாம்பியன்ஸ் டிராபி 2025 அடுத்த மாதம் 19ஆம் தேதி தொடங்குகிறது. 

7 ஆண்டுகள் கழித்து நடைபெறவிருக்கும் சாம்பியன்ஸ் டிராபி அடுத்த மாதம் 19ஆம் தேதி முதல் மார்ச் 9ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான அனைத்து அணிகளும் தயாராகி வரும் நிலையில், பாகிஸ்தானை தவிர்த்து மற்ற அணிகள் அனைத்தும் தங்களது அணிகளை அறிவித்துள்ளது. இந்நிலையில், சாம்பியன்ஸ் டிராபியில் விளையாட உள்ள அணிகளின் கேப்டன்கள் யார் யார் என்பதை இங்கு பார்ப்போம். 

1 /8

நடைபெற இருக்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணியை ரோகித் சர்மா வழிநடத்த உள்ளார். இவரது கேப்டன்ஸியில் கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பையை இந்திய அணி வென்றது. 

2 /8

ஆஸ்திரேலியா அணியை பேட் கம்மின்ஸ் வழிநடத்த உள்ளார். இவரது கேப்டன்ஸியில் ஆஸ்திரேலியா அணி 2023 ஒருநாள் உலக கோப்பையை வென்றது. மேலும், நடக்கவிருக்கும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு அந்த அணி தகுதி பெற்றுள்ளது. 

3 /8

பாகிஸ்தான் அணி நிர்வாகம் இதுவரை சாம்பியன்ஸ் டிராபிக்கான அணியை அறிவிக்கவில்லை. இருப்பினும் தற்போது வெள்ளை பந்து போட்டிகளில் கேப்டனாக இருக்கும் முகமது ரிஸ்வானே சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தான் அணியை வழிநடத்த அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

4 /8

டெம்பா பவுமா தென் ஆப்பிரிக்கா அணியை வழிநடத்த உள்ளார். இந்த அணி 2024 டி20 உலக கோப்பையின் இறுதி போட்டி வரை சென்றதும், டெம்பா பவுமா கேப்டன்ஸியில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறியதும் குறிப்பிடத்தக்கது. 

5 /8

நியூசிலாந்து அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான மிட்செல் சான்ட்னர் வர இருக்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அந்த அணியை வழிநடத்துகிறார். இது அவருக்கு கேப்டனாக விளையாடும் முதல் ஐசிசி தொடராகும்.

6 /8

பேட்ஸ்மேனும் விக்கெட் கீப்பருமான ஜோஸ் பட்லர் வர இருக்கும் சாம்பியன்ஸ் டிராபியில் இங்கிலாந்து அணியை வழிநடத்த உள்ளார். இவரது கேப்டன்ஸியில் இங்கிலாந்து அணி விளையாடிய கடைசி இரண்டு ஐசிசி தொடரிலும் சறுக்கல்களை கண்டது.

7 /8

ஹஷ்மதுல்லா ஷாஹிதி வர இருக்கும் சாம்பியன்ஸ் டிராபியில் ஆப்கானிஸ்தான் அணியை வழிநடத்த உள்ளார். கடந்த இரண்டு ஐசிசி தொடரில் ஆப்கானிஸ்தான் அணி சிறப்பாக செயல்பட்டது குறிப்பிடத்தக்கது. 

8 /8

நஸ்முல் ஹொசைன் சாண்டோ வர இருக்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் வங்கதேசம் அணியை வழிநடத்த உள்ளார்.