Weekly Horoscope: பிப்ரவரி 24 ம் தேதியுடன் துவங்கும் வாரம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. மகா சிவராத்திரி கொண்டாடப்பட உள்ள இந்த வாரத்தில், சில ராசிகளுக்கு சுப பலன்கள் கிடைக்கும் என்றும், அதே சமயம் சில ராசிகளுக்கு சாதகமாக இருக்காது எனவும் ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.
வார ராசிபலன்: மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிகளுக்கும் பிப்ரவரி 24ம் தேதியுடன் துவங்கும் இந்த வாரம் எப்படி இருக்கும் என்பதை ஜோதிடர்கள் கணித்துள்ளதை அறிந்து கொள்ளலாம். இந்த வாரம் சில ராசிகளுக்கு சாதகமான பலன்களும் சில ராசிகளுக்கு பாதகமான பலன்களும் கிடைக்கலாம்.
மேஷம்: புதிய வருமான வழிகள் உருவாகும். வாரத்தின் தொடக்கத்தில் அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். உத்யோகத்தில் முன்னேற்றம் ஏற்படும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் ஆசியைப் பெறுவீர்கள். எனினும், சில பொருளாதார ஏற்ற தாழ்வுகள் ஏற்படும். எனினும் எளிதாக சமாளித்து விடலாம். சூரியனை வணங்குவது பலன் தரும்.
ரிஷபம்: ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்வது நல்லது. வாரத்தின் தொடக்கத்தில் காயங்கள் ஏற்படலாம். நீங்கள் சில பிரச்சனைகளில் சிக்கலாம். சூழ்நிலைகள் பாதகமாக இருக்கும். ஆனால், வார இறுதியில் நிலைமையில் முன்னேற்றம் ஏற்படும். சனிதேவரை வணங்குவதால், இன்ன்னல்கள் நீங்கி இன்பம் பிறக்கும்.
மிதுனம்: வாரத்தின் தொடக்கத்தில் எதிர்பாரத பண வரவு கிடைக்கும். வேலை வாய்ப்பு நன்றாக இருக்கும். வாரத்தின் நடுப்பகுதி பிரச்சனைகள் நிறைந்ததாக இருக்கும். எனினும், இறுதியில் நிலைமை மேம்படும். வேலையை மாற்றும் முயற்சியில் வெற்றி பெறலாம். முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். காளி தேவியை தொடர்ந்து பூஜிக்கவும்
கடகம்: சுவாரஸ்யங்கள் நிறைந்த வாரமாக இருக்கும். எதிரிகள் தீங்கு விளைவிக்க முயற்சிப்பார்கள், ஆனால் இறுதி வெற்றி உங்களுடையதாக இருக்கும். பணியிடத்தில் சில சவால்கள் இருக்கலாம், ஆனால் உங்கள் கடின உழைப்பால் நிலைமை மேம்படும். குடும்ப வாழ்க்கையில் சில பதட்டங்கள் இருக்கலாம், ஆனால் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு சாத்தியமாகும்.
சிம்மம்: நிதி நிலைமை மேம்படும், ஆனால் அதிகப்படியான செலவுகளைத் தவிர்க்கவும். குடும்ப வாழ்க்கையில் அமைதியும் மகிழ்ச்சியும் இருக்கும், உறவுகளில் இனிமையும் இருக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும், ஆனால் இதயம் தொடர்பான பிரச்சனைகளை தவிர்க்க, வழக்கமான உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான உணவுமுறையை பின்பற்றவும். நீல நிற பொருட்களை தானம் செய்வது உங்களுக்கு நல்ல பலன் தரும்.
கன்னி: உங்கள் திறமை மேம்படும். நீங்கள் ஒரு புதிய திறனைக் கற்றுக்கொள்ள விரும்பினால், இந்த நேரம் சாதகமாக இருக்கும். வணிகத்தில் முதலீடு செய்வது லாபத்தைத் தரும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்கும். மேலும் குடும்ப உறுப்பினர்களுடன் மறக்கமுடியாத தருணங்களை செலவிட உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். அன்னதானங்கள் பலன் தரும்.
துலாம்: தொழிலில் புதிய வாய்ப்புகள் அமையும். பணியிடத்தில் உங்கள் சிந்தனை மற்றும் உத்தி பாராட்டப்படும். நிதி நிலைமை சாதாரணமாக இருக்கும், ஆனால் சேமிப்பில் கவனம் செலுத்துங்கள். குடும்ப வாழ்க்கையில் நல்லிணக்கம் இருக்கும். வீட்டில் சாதகமான சூழல் இருக்கும். ஆரோக்கியம் சீராக இருக்கும், ஆனால் மன அமைதிக்கு யோகா மற்றும் தியானம் செய்யுங்கள். சனிதேவரை வணங்குவது பலன் தரும்
விருச்சிகம்: உத்தியோகத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உள்ளன, உங்கள் கடின உழைப்பு பலன் தரும். பணியில் உங்கள் பங்கு முக்கியமானதாக இருக்கும், மேலும் உங்கள் தலைமையை சக ஊழியர்கள் ஏற்றுக்கொள்வார்கள். புத்திசாலித்தனமாக முதலீடு செய்யுங்கள், ஏனெனில் அவசர முடிவுகள் நஷ்டத்தை ஏற்படுத்தும். குடும்ப வாழ்க்கையில் சில பதட்டங்கள் இருக்கலாம். ஆனால் பரஸ்பர புரிதல் மற்றும் பேச்சுவார்த்தை மூலம் அனைத்து பிரச்சனைகளும் தீர்க்கப்படும். . நீல நிற பொருட்களை தானம் செய்வது உங்களுக்கு நல்ல பலன் தரும்.
தனுசு: உங்களுக்கு புதிய வாய்ப்புகள் வந்து சேரும். உங்கள் தொழிலில் வெற்றி கிடைக்கும், தன்னம்பிக்கை அதிகரிக்கும். பணியிடத்தில் உங்கள் யோசனைகள் பாராட்டப்படும். பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்கும். வருமானம் அதிகரிப்பதற்கான அறிகுறிகள் வலுவாஅக் தென்படுகின்றன, நீங்கள் புதிய முயற்சியைத் தொடங்க விரும்பினால், இதுவே சரியான நேரம். நீல நிற பொருட்களை தானம் செய்வது உங்களுக்கு நல்ல பலன் தரும்.
மகரம்: பணியிடத்தில் உங்கள் கடின உழைப்பின் பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் உள்ளன, உங்கள் முயற்சிகள் பாராட்டப்படும். வணிகத்தில் முதலீடு லாபகரமாக இருக்கும், ஆனால் புதிய திட்டங்களை செயல்படுத்துவதற்கு முன் முழுமையான ஆராய்ச்சி செய்யுங்கள். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்கும், குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். அன்னை துர்கையை வணங்கி தரிசனம் செய்வது வாழ்க்கையில் வெற்றிகளைக் கொடுக்கும்.
கும்பம்: மனதில் பல விஷயங்கள் ஓடி கொண்டே இருக்கும். ஆரோக்கியம், வேலை, தொழில், வியாபாரம் எல்லாம் நன்றாக இருக்கும். வாரத் தொடக்கத்தில் புதிய வருமானங்கள் உருவாகும். நதேவையற்ற செலவுகள் ஏற்படலாம். இறுதியில், பதட்டம் மற்றும் அமைதியின்மை அதிகரிக்கலாம். சனிபகவானை தரிசனம் செய்வது உங்களுக்கு சாதகமாக இருக்கும்.
மீனம்: ஆரோக்கியம் பாதிக்கப்படும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் ஆசியைப் பெறுவீர்கள். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். பொருளாதார ரீதியாக வலுவாக இருக்கும். கடைசியில் மனம் கவலையாகவே இருக்கும். முடிவில் மனம் கலங்கிவிடும். மஞ்சள் நிற பொருட்களை வைத்திருப்பது உங்களுக்கு சாதகமான பலன்களை கொடுக்கும்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.