“கண்ணை இழுத்து வைத்து தைச்சிட்டேனா?” விஷால் உடல் நலக்குறைவு குறித்து பேசிய பாலா!

Bala Talks About Actor Vishal : நடிகர் விஷால், சமீபத்தில் கை நடுக்கத்துடன் பேசிய வீடியோ வைரலானதை தொடர்ந்து அதற்கு காரணம் இயக்குநர் பாலாதான் என சொல்லப்பட்டது. இதையடுத்து, இதற்கு நடிகர் பாலா பதிலளித்திருக்கிறார். இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம். 

Written by - Yuvashree | Last Updated : Jan 20, 2025, 11:38 AM IST
  • விஷால்-பாலா கூட்டணியில் உருவான அவன் இவன் படம்
  • கை நடுக்கத்துக்கு காரணம் பாலாவா?
  • அவரே சொன்ன பதில்!!
“கண்ணை இழுத்து வைத்து தைச்சிட்டேனா?” விஷால் உடல் நலக்குறைவு குறித்து பேசிய பாலா! title=

Bala Talks About Actor Vishal : சில நாட்களுக்கு முன்னர் மதகஜராஜா படத்தின் பிரமோஷன் விழா நடைபெற்றது. அதில் நடிகர் விஷால் அதிக காய்ச்சலுடன் வந்ததால் அவருக்கு கை நடுக்கம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. இதற்கிடையில் ஒரு சிலர் விஷாலின் இந்த நிலைக்கு காரணம் இயக்குனர் பாலாதான் எனக்கூறினர். இதற்கு பாலாவே தன் பாணியில் பதிலளித்திருக்கிறார்.

விஷால்-பாலா கூட்டணியில் உருவான படம்: 

10 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் திரை உலகின் முக்கிய நடிகராக இருந்தவர், விஷால். 2011 ஆம் ஆண்டு விஷால், ஆர்யா நடிக்க பாலாவின் இயக்கத்தில் உருவான படம் அவன் இவன். இந்த படம் பெரிய வெற்றியை பெறவில்லை என்றாலும், ரசிகர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதில் விஷால், மாறுகண் கொண்ட கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படம் முழுவதுமே அவர் மாறுகண் உள்ளது போலவே கண்களை வைத்திருந்தார். இதனால் அவர் அடுத்தடுத்து நடித்த சில படங்களிலும் அவரது கண்களில் பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

சுமார் 14 வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்ட இந்த படத்தை எடுத்து விஷாலும் பாலாவும் வேறு எந்த படத்திலும் கைகோர்க்கவில்லை. இந்த படம் வெளிவந்த சமயத்திலேயே, விஷால் பாலாவை வற்புறுத்தி இப்படி நடிக்க வைத்ததாக கூறப்பட்டது.

விஷாலின் கைநடுக்கம்..

12 ஆண்டுகளுக்கு முன் உருவான மதகஜராஜா படம், அந்த சமயத்தில் தயாரிப்பு நிறுவனத்தின் நிதி பிரச்சனை காரணமாக வெளியிடப்படாமல் போனது. இதையடுத்து, அந்த பிரச்சனைகள் எல்லாம் முடிவடைந்து பொங்கலுக்கு படம் வெளியானது. இதற்கான பிரமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் விஷால் கலந்து கொண்டார். அப்போது மைக் பிடித்து பேசிய அவர் கை நடுக்கத்துடனும், குரலில் தடுமாற்றத்துடனும் காணப்பட்டார். அந்த மேடையிலேயே அவருக்கு அதிகளவில் வைரல் காய்ச்சல் இருப்பதாகவும், அதையெல்லாம் தாண்டி இப்படத்திற்காக அவர் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாகவும் கூறப்பட்டது.

ஆனாலும் சமூக வலைத்தளங்களில் சிலர், பாலாதான் விஷாலின் இந்த நிலைக்கு காரணம் என்றும், அவன் இவன் படத்தில் விஷாலை மாறு கண் கொண்டவர் போல காட்டுவதற்காக, அவரது கண்களை பாலா தைத்து விட்டதாகவும் வதந்திகளை பரப்பினர். இதற்கு பாலா சமீபத்திய விழா ஒன்றில் பதிலளித்து இருக்கிறார்.

பாலாவின் பதில்: 

பாலா-அருண் விஜய் கூட்டணியில் உருவான வணங்கான் திரைப்படம், வெளியாகி வெற்றி பெற்றது. இதற்கான நன்றி தெரிவிக்கும் விழா, சமீபத்தில் நடைபெற்றது. இதில் “விஷாலுக்கு இப்படி உடல்நிலை சரியில்லாமல் போனதற்கு காரணம் நீங்கள் தான் என கூறுகிறார்களே இதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?”என பாலாவிடம் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு அவர், “நான் என்ன பதில் சொல்வது? டாக்டர் செர்டிபிகேட் வேணா வாங்கி கொடுக்கலாம். யாரோ என்னிடம் நான் அவரது கண்ணை இழுத்து வைத்து தைத்து விட்டேன் என்றெல்லாம் கூறினார்கள். அவரவர்களுக்கு தோன்றுவதை அவரவர் பேசுவர். அதையெல்லாம் கண்டுக்க கூடாது” என்று சிரித்துக்கொண்டே கூறினார்.

விஷாலுக்கு என்னதான் ஆச்சு?

நடிகர் விஷால், தனது 30 களில் கச்சிதமான உடற்கட்டுடன் இருந்தார். தற்போது உடல் எடை மெலிந்து, பேச்சில் பல தடுமாற்றங்களை சந்தித்து வருகிறார். இதற்கு பாலா காரணம் இல்லை என்றாலும், இவர் இளம் வயதில் எடுத்துக்கொண்ட சில பழக்கங்களால் இது போன்ற நிலை ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

மேலும் படிக்க | விஷாலுக்கு என்ன ஆச்சு? கை நடுக்கம், குரலில் தடுமாற்றம்..இதுதான் காரணம்!

மேலும் படிக்க | மதகஜராஜா கொடுத்த தைரியம்! விஷால் நடிக்க இருக்கும் அடுத்தடுத்த படங்கள்..லிஸ்ட் இதோ!

 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News