ஒரு கட்டத்தில் தற்கொலை செய்து கொள்ள நினைத்தேன் - பா ரஞ்சித் ஆவேசம்!

குருசோமசுந்தரம், சஞ்சனா, ஜான்விஜய் நடித்துள்ள பாட்டில் ராதா படம் வரும் ஜனவரி 24ம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது. ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

Written by - RK Spark | Last Updated : Jan 19, 2025, 05:05 PM IST
  • வரும் 24ம் தேதி வெளியாகும் பாட்டில் ராதா.
  • குருசோமசுந்தரம், சஞ்சனா நடித்துள்ளனர்.
  • பா ரஞ்சித் இந்த படத்தை தயாரித்துள்ளார்.
ஒரு கட்டத்தில் தற்கொலை செய்து கொள்ள நினைத்தேன் - பா ரஞ்சித் ஆவேசம்! title=

இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் பலூன் பிக்சர்ஸ் அருண்பாலாஜி தயாரிப்பில்  அறிமுக இயக்குனர் தினகரன் சிவலிங்கம் இயக்கியிருக்கும் படம் பாட்டில் ராதா. இந்த படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். குருசோமசுந்தரம், சஞ்சனா, ஜான்விஜய், மாறன் மற்றும் பலர் நடித்திருக்கும் இப்படம் வரும் ஜனவரி 24 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது. இந்நிலையில் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் படக்குழுவினரோடு சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர் வெற்றிமாறன், லிங்குசாமி, அமீர், மிஸ்கின் கலந்துகொண்டனர்.

மேலும் படிக்க | சயிப் அலிகானின் மருத்துவ செலவு..இவ்வளவுதானா? என்னங்க சொல்றீங்க!!

இந்த விழாவில் பேசிய லிங்குசாமி, இந்த படம் தமிழில் மிகச்சிறந்தபடமாக இந்த காலகட்டத்திற்கு தேவையான ஒருபடமாக வந்திருக்கிறது. ஜனரஞ்சகமாக அதேசமயம் கருத்துள்ள படமாக இருக்கிறது. இந்தப்படம் அரசாங்கத்திற்கு போடும் மனு போல. அவசியமானதொரு படம். இந்தப்படம் பெரும்வெற்றியடையும் என்றார். இந்த விழாவில் பேசிய அமீர், இந்த கதையைப்போல குடி நோயால் பாதிக்கப்பட்ட மனிதர்களைப்பற்றி நான் ஒரு படம் இயக்குவதாக இருந்தேன். அதற்காக கள ஆய்வுகள் செய்தும் வைத்திருந்தேன். பாட்டில் ராதாவை பார்த்த பிறகு இனி அந்த படம் செய்தால் பாட்டில் ராதா பார்த்து எடுத்ததைபோல இருக்கும். எனவே அதை எடுக்கப்போவதில்லை. குடி நோயாளிகளைப் பற்றி இவ்வளவு சிறப்பாக இனி யார் படம் எடுத்தாலும் அது பாட்டில் ராதா படத்தை விட சிறப்பாக எடுக்கமுடியாது. இந்தப்படம் தமிழில் மிகச்சிறந்தபடம் என்றார்.

இந்த நிகழ்வில் பேசிய மிஸ்கின், பாட்டில் ராதா திரைகதை எழுதப்பட்ட விதம் மிகச்சிறப்பானது. முதல் படத்திலேயே இவ்வளவு சிறப்பாக எழுதி எடுத்திருக்கும் இயக்குனர் தினகரன் சிவலிங்கத்திற்கு பாராட்டுக்கள். அதுவும் இப்படி ஒரு கதைகளத்தை எழுதியதற்கு என் பாராட்டுக்கள். இந்தப்படத்தில் நடித்திருக்கும் நடிகர்கள் நடிப்பை பார்த்து வியந்துவிட்டேன். குறிப்பாக குருசோமசுந்தரம் நடிப்பில் மிரட்டிவிட்டார். மொத்தமாக படக்குழுவுக்கு என் அன்பும் பாராட்டும். இப்படிப்பட்ட படங்களை தயாரிக்கும் ரஞ்சித்துக்கு என் அன்புகள் என்றார்.

இந்த நிகழ்வில் பேசிய வெற்றிமாறன், பாட்டல் ராதா திரைப்படம் நன்றாக எழுது மிக நேர்த்தியாக எடுக்கப்பட்டபடம், இந்தப்படத்தின் முதல் பாதி சிரிக்கவும், இரண்டாம் பாதி சிந்திக்கவும் வைக்கும். கூடவே இந்த சமூகத்திற்கு இப்போதைய காலகட்டத்திற்கு அதுவும் அடிக்சனுக்கு ஆளாகியிருக்கும் இந்த சமூகத்திற்கு மிக அவசியமான படமாக வந்திருக்கிறது. இந்தப்படம் உங்களை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் என்று பேசினார்.

இந்த நிகழ்வில் பேசிய பா.இரஞ்சித், குடியால் பல குடும்பங்கள் அழிந்துபோனதை நான் கண்டிருக்கிறேன். இந்த கதையை என்னிடம் தினகர் தரும் பொழுது அதிலிருந்த உண்மைத்தன்மை என்னை வெகுவாக ஆட்கொண்டது. வசனங்களும், வாழ்வும்,  நமக்கு நெருக்கமான ஒரு உணர்வை தந்தது. தினகர் மிக அருமையாக இயக்கியிருக்கிறார். தொடர்ந்து இந்த தமிழ் சினிமாவில் அவசியமான படங்களை தர வேண்டும் என்பது நீலம் புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் விருப்பம்.  இன்னும் நல்ல படங்கள் , பொழுதுபோக்கோடு சமூகக்கருத்துள்ளபடங்கள் தொடர்ந்து உருவாக்கிக் கொண்டே இருப்போம். பாட்டில் ராதா உங்களை ரசிக்கவைப்பதோடு உங்களுக்கான ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் படமாக இருக்கும்.

தற்கொலை செய்து கொள்ள நினைத்தேன்

பள்ளி, உணவு, உடைகள் போன்றவற்றை எல்லாம் எங்களுக்காக என் அப்பா செய்து இருக்கிறார். எங்களை கவனித்துக் கொள்வதில் அப்பா கடுமையாக உழைத்தார். ஆனால் சில நேரங்களில் அப்பா மது அருந்தும்போது ​​அவர் மிகவும் வித்தியாசமாக நடந்து கொள்வார். இது எனது அம்மாவை மிகவும் வருத்தமடைய செய்தது. இதை பார்த்து 12 ஆம் வகுப்பு படிக்கும் போது தற்கொலை செய்து கொள்ளலாம் என்று நினைத்தேன். குடிப்பவர்கள் சொந்த கட்டுப்பாட்டை இழக்க நேரிடும் என்பதை பிறகு தான் உணர்ந்தேன். எனது அப்பா நன்றாக வாழ ஆசைப்பட்டார். ஆனால் மிகவும் நோய்வாய்ப்பட்டு இறந்துவிட்டார் என்று பா ரஞ்சித் கூறினார்.

மேலும் படிக்க | பிக்பாஸ் 8: டைட்டில் வின்னருக்கு கிடைக்கப்போகும் பரிசு என்ன? இவ்வளவு பெரிய தொகையா!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News