NEEK vs Dragon Which One Is Good : பிப்ரவரி 21ஆம் தேதியான இன்று டிராகன் மற்றும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் ஆகிய படங்கள் இரண்டும் வெளியாகி இருக்கிறது. இந்த இரு படங்களுமே ரசிகர்கள் மத்தியில் அதிகம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியவை ஆகும். இந்த இரு படங்கள் குறித்தும், இவை இரண்டில் எது நன்றாக இருக்கிறது என்பது குறித்தும் இங்கு பார்ப்போம்.
டிராகன் திரைப்படம்:
அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம், டிராகன். இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்திருக்கிறார். ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்தில் பிரதீப்புடன் அனுபமா பரமேஸ்வரன், கயடு லோகர், ஜார்ஜ் மரியன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். கெளதம் வாசுதேவ் மேனனும் இதில் முக்கிய பாத்திரமாக வருகிறார். இந்த படத்தின் டிரைலர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்து.
நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்:
தனுஷின் எழுத்து மற்றும் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம், நிலவுக்கு என்மேல் என்னடி கோபம். இந்த படத்தில் தனுஷின் உறவினர் பவிஷ் நாயகனாக அறிமுகமாகி இருக்கிறார். அனேகா, மாத்யூ தாமஸ் உள்ளிட்டோர் இந்த படத்தின் முக்கிய கதாப்பாத்திரங்களாக நடித்திருக்கின்றனர். இந்த படத்தின் டிரைலரை பார்க்கும் போது இது இளைஞர்கள் கொண்டாடும் ஒரு டிராமாவாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
இரண்டில் எது நல்லாயிருக்கு?
பிரதீப் ரங்கனாதன் செய்யும் சில விஷயங்கள் பார்ப்பதற்கு தனுஷ் போலவே இருப்பதாக சிலர் கூறுகின்றனர். இதனால் இந்த இரு படங்களையும் சிலர் போட்டி படங்களாக பார்த்தனர். இந்த நிலையில், இவை இரண்டில் எந்த படம் நன்றாக உள்ளது என்பது குறித்த கருத்துகளும் இணையத்தில் எழுந்துள்ளது.
#Dragon - BLOCKBUSTER#NEEK - Below Average
— (@PrasathVjSiva) February 21, 2025
நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தின் காட்சியமைப்புகள் நன்றாக இருந்தாலும், படத்தின் கதை ஈர்க்கும் வகையில் இல்லை என கூறப்படுகிறது. அது மட்டுமன்றி, இந்த படத்தில் நடித்திருப்பவர்கள் அனைவருமே புது முகங்களாக இருக்கின்றனர். சிலர் நடிக்க முயற்சி மட்டுமே செய்கின்றனர். அது மட்டுமன்றி படத்தின் முதல் பாதி ரொம்ப போர் ஆக இருப்பதாகவும், இரண்டாம் பாதி அதற்கு மேல் இருப்பதாகவும் படம் பார்த்தவர்கள் கூறி வருகின்றனர்.
டிராகன் படத்திற்கு காலையில் இருந்து பாசிடிவான விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளன. படம் முழுக்க நகைச்சுவை நிறைந்திருப்பதாகவும், இளைஞர்கள் கொண்டாடும் வகையிலான காட்சிகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
Drag(W)ON #Dragon - Blockbuster
— Christopher Kanagaraj (@Chrissuccess) February 21, 2025
#DRAGON – A highly entertaining first half with an emotionally gripping second half. Pradeep shines, Mysskin’s character is well-written . Packed with surprises, it’s a superbly crafted entertainer.
Another #BLOCKBUSTER for PRADEEP after Lovetoday. pic.twitter.com/w9paN1tVjX
— Suresh (@isureshofficial) February 21, 2025
இரண்டில் எதை பார்க்கலாம்?
இரண்டு படங்களுமே பல்வேறு கடின உழைப்புகளுக்கு பின் எடுக்கப்பட்ட படம்தான். இரண்டையும் தியேட்டருக்கு சென்று பார்க்க வேண்டும். இருப்பினும், நண்பர்களுடன் ரகளை செய்து பார்க்க விரும்பினால் முதலில் டிராகன் படத்தை பார்க்கலாம் என ரசிகர்கள் தெரிவிக்கின்றனர். அதே போல நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தை பார்த்தவர்கள் உங்கள் காதலுக்குரியவருடன் இந்த படத்திற்கு செல்லாம் என்கின்றனர்.
மேலும் படிக்க | NEEK Movie Review: நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்: திரை விமர்சனம்..
மேலும் படிக்க | Dragon vs NEEK : ஒரே நாளில் வெளியான 2 பட ட்ரைலர்கள்! எது நல்லா இருக்கு?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ