Radhika Apte Breast Milk Photo Controversy : இந்திய அளவில் பிரபல நடிகையாக விளங்கி வருபவர் ராதிகா ஆப்தே. இவர், சர்ச்சைக்குறிய விஷயங்களுக்கு பெயர் போனவர். அப்படி, இவர் சமீபத்தில் வெளியிட்டுள்ள போட்டோவாலும் ஒரு சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். இது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம்.
தமிழில் வெகு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் ரசிகர்கள் மனங்களில் நல்ல இடத்தை பெற்றிருப்பவர் ராதிகா ஆப்தே. இவரை பலரும் கபாலி படத்தில் பார்த்திருப்போம். ஆனால், இதற்கு முன்னரே அவர் பல சர்ச்சைக்குரிய கதாப்பாத்திரங்களில் நடித்து பிரபலமானவர்.
ராதிகா ஆப்தே:
நடிகை ராதிகா ஆப்தே, இந்தியில் பிரபலமாக வலம் வரும் நடிகையாக விளங்கி வருகிறார். 2005ஆம் ஆண்டு முதல் பாலிவுட் திரையுலகில் ஆக்டிவாக இருக்கும் இவர், பல படங்களில் நடித்திருக்கிறார். இவருக்கு தமிழில் புகழை தேடித்தந்த படம் கபாலி. இதற்கு முன்னர் ஆல் இன் ஆல் அழகு ராஜா, தோனி உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். இதனால் தென்னிந்திய அளவில் பெரிய பிரபலமான நடிகையாகவும் விளங்கி வருகிறார்.
ஒரு கையில் தாய்ப்பால்-மறு கையில் சரக்கு..
ராதிகா பெனடிக்ட் டெய்லர் என்பவரை 2012ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஒரு பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தையை பார்த்துக்கொள்வதோடு அல்லாமல் விருது விழாக்களில் கலந்து கொள்வது, வெப் தொடர்களில் நடிப்பது மற்றும் படங்களில் நடிக்கும் வேலைகளையும் ராதிகா பார்த்து வருகிறார்.
சமீபத்தில் BAFTA விருது விழா நடைப்பெற்றது. இதில் ராதிகா ஆப்தேவும் முக்கிய விருந்தினராக கலந்து கொண்டார். இதன் பிறகு இவர் வெளியிட்ட போட்டோதான் தற்போது இணையத்தில் பேசு பொருளாக மாறியிருக்கிறது.இந்த போட்டோவில் அவர் ஒரு கையில் ஷாம்பைன் கிளாசுடனும் (வெளிநாட்டு மது), இன்னொரு கையில் தாய்ப்பால் பிழியும் பாட்டிலுடனும் (Breast Milk) இருக்கிறார். இந்த பதிவில் அவர் இந்த விருது விழாவிற்கு இடையில் பிரெஸ்ட் மில்கை சேமிக்கும் பணியில் ஈடுபட்டதாக கூறியிருக்கிறார். இதற்காக தனக்கு உதவிய நட்டாஷா என்ற பெண்ணுக்கும் அவர் நன்றி தெரிவித்திருகிறார்.
இது போன்ற காலக்கட்டத்தில் புதிதாக குழந்தை பெற்ற தாய்மார்கள் தங்களுக்கான நேரம் எடுத்துக்கொள்ள வாய்ப்பே கிடைப்பதில்லை என்றும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
ஆதரவும் எதிர்ப்பும்:
ராதிகாவின் இந்த பதிவிற்கு கீழ் அவருக்கு ஆதரவாகவும் எதிராகவும் பல்வேறு கமெண்டுகள் வந்துள்ளன. ஒரு சிலர் இந்த புகைப்படம் புரட்சிகரமாக இருப்பதாக கமெண்ட் செய்துள்ளனர். ஒரு சிலர் “தாய்மை ரொம்ப புனிதமானது, அதையெல்லாம் இப்படி கொச்சை படுத்தாதீங்க” என்று கூறியிருக்கின்றனர். ஒரு சிலர், இப்படி குழந்தைக்கு பால் கொடுக்கும் போது ஆல்கஹால் எடுத்துக்கொள்வது உங்களுக்கும் நல்லதல்ல, குழந்தைக்கும் நல்லதல்ல என்று கூறி வருகின்றனர். ஆனால், இவை எதற்கும் செவி சாய்க்காமல் ராதிகா தன் வேலையை பார்த்துக்கொண்டு இருக்கிறார்.
மேலும் படிக்க | சர்ச்சை வீடியோவில் இருப்பது உண்மையில் ஓவியா தானா? வெளியான அதிர்ச்சி தகவல்!
மேலும் படிக்க | ஓவியா to த்ரிஷா..வீடியோ லீக் சர்ச்சையில் சிக்கிய தமிழ் நாயகிகள்! லிஸ்ட் பெருசு..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ