Dharmendra Pradhan MK Stalin: சமக்ரா சிக்ஷா திட்டத்தின் கீழ் நிதி வழங்க முதலமைச்சர் வலியுறுத்திய நிலையில், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதில் கடிதம் எழுதி உள்ளார்.
Tamil Nadu Today News Updates: ஸ்டாலின் எழுதிய கடிதம் கூட்டாச்சிக்கு எதிரானது
தர்மேந்திர பிரதான் எழுதிய அந்த கடிதத்தில்,"பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் எழுதிய கடிதம் கூட்டாட்சிக்கு எதிரானதாக உள்ளது. தேசிய கல்விக் குழுவுடன் இணைந்தது தான் சமக்ரா சிக்ஷா திட்டம் ஆகும். கல்வியை அரசியல் ஆக்க வேண்டாம்.
Highly inappropriate for a State to view NEP 2020 with a myopic vision and use threats to sustain political narratives.
Hon’ble PM @narendramodi ji’s govt. is fully committed to promote and popularise the eternal Tamil culture and language globally. I humbly appeal to not… pic.twitter.com/aw06cVCyAP
— Dharmendra Pradhan (@dpradhanbjp) February 21, 2025
குறுகிய மனப்பான்மையுடன் புதிய தேசிய கல்விக் கொள்கையை பார்ப்பது சரியல்ல. தமிழ் மொழி கலாச்சாரத்தை உலக அளவில் எடுத்துச் செல்வதில் பிரதமர் மோடி உறுதியாக உள்ளார். தேசிய கல்விக் கொள்கையில் ஒரு மாநிலத்தில் மற்றொரு மொழியை திணிப்பது என்ற கேள்வியே கிடையாது" என குறிப்பிட்டுள்ளார்.
Tamil Nadu Today News Updates: தர்மேந்திர பிரதான் விளக்கம்
அரசியல் காரணங்களை விட மாநில அரசு கல்வி மேம்பாட்டுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என தேசியக் கல்விக் கொள்கை 2020 (NEP 2020) குறித்து விளக்கம் அளித்து முதலமைச்சர் ஸ்டாலினுக்கு, ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடிதம் எழுதி உள்ளார்.
அந்த கடிதத்தில்,"மாநிலத்தின் மானியக் கல்வி மற்றும் சமுதாய முன்னேற்றத்திற்காக, மிகுந்த மரியாதையுடனும் பொறுப்புணர்வுடனும் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். மாணவர்களின் எதிர்காலம் மற்றும் நாட்டின் கல்வி அமைப்பை மேம்படுத்த மாநில அரசாங்கம் அரசியல் பிரச்சனைகளை தாண்டி, மாணவர்களை அறிவு, திறன்கள் மற்றும் வாய்ப்புகளால் வளப்படுத்தும் கல்விக் கொள்கைகளை முன்னுரிமையாக எடுத்துக்கொள்ள வேண்டும். தேசியக் கல்விக் கொள்கை (NEP) 2020 ஒரு சாதாரணமான மாற்றம் அல்ல; இது இந்தியக் கல்வி அமைப்பை உலகளவில் உயர்த்தும் பார்வை கொண்டதாகும்" என குறிப்பிட்டுள்ளார்.
Tamil Nadu Today News Updates: புதிய கல்விக் கொள்கையின் முக்கியத்துவம்
தேசியக் கல்விக் கொள்கை 2020 மொழிக்கான முக்கியத்துவத்தை தர்மேந்திர பிரதான் குறிப்பிட்டுள்ளார். அதில்,"தேசிய கல்விக் கொள்கை 2020-இன் முக்கிய அம்சம், இந்தியாவின் மொழிக்கல்விக்கு கொடுக்கப்படும் மதிப்பாகும். மாணவர்களுக்கு அவர்களின் தாய்மொழியில் தரமான கல்வி வழங்குவதை இது உறுதி செய்கிறது. தமிழ் ஒரு அடையாளம் மட்டுமல்ல, அது இந்தியாவின் தேசிய மரபுச் சொத்து என்பதை வலியுறுத்துகிறது.
Tamil Nadu Today News Updates: மொழி திணிப்பு இல்லை
மொழி திணிப்பு இல்லை, தவறான புரிதலுக்கு இங்கே இடமில்லை. மாநில அரசின் சில தவறான கருத்துக்களை நிவர்த்தி செய்ய விரும்புகிறேன். எந்த மொழியையும் மாநிலங்கள் மீது திணிப்பதற்கான எந்த நோக்கமும் இல்லை. மாணவர்கள் விரும்பும் மொழியில் கல்வி தொடரலாம். இந்திய மொழிகள் மறுக்கப்படாமல், மறுபடியும் புத்துயிர் பெறுவதற்கான ஒரு முயற்சியாக புதிய கல்விக் கொள்கை 2020 செயல்படுத்தப்பட்டுள்ளது" என்றார்.
Tamil Nadu Today News Updates: 'மும்மொழி கொள்கை முக்கியம் - பிழையை போக்க வேண்டும்'
இந்தியாவின் கல்விக் கட்டமைப்பின் முதுகெலும்பு என மூன்று மொழிக் கொள்கையை குறிப்பிடும் தர்மேந்திர பிரதான்,"1968-ல் அறிமுகப்படுத்தப்பட்ட மூன்று மொழிக் கொள்கை, தொடர்ந்து வழக்கத்தில் செயல்படுத்தப்படவில்லை என்பதே வரலாற்றுப் பிழையாகும். இந்த பிழையை சரிசெய்வதே புதிய கல்விக் கொள்கை 2020-இன் நோக்கம். தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளுக்கும் கல்வியில் உரிய இடத்தை வழங்கும் முயற்சி இது. தமிழகத்தின் கல்வி முன்னேற்றம் மற்றும் எதிர்காலம். தமிழ்நாடு கல்வி மற்றும் சமூக முன்னேற்றத்தில் முன்னோடியாக இருந்தது. சமூக நீதிக்காகவும், கல்வியில் மறுப்புரிமைக்காகவும், சமூக முன்னேற்ற இயக்கங்களில் முக்கியப் பங்கு வகித்துள்ளது" என அதில் எழுதி உள்ளார்.
மேலும், புதிய கல்விக் கொள்கையை வரலாற்று வாய்ப்பு என குறிப்பிடும் தர்மேந்திர பிரதான்," தேசிய கல்விக் கொள்கை 2020க்கு எதிராக நிலவும் அரசியல் எதிர்ப்பு, மாணவர்களை, ஆசிரியர்களை மற்றும் கல்வி நிறுவனங்களை வளர்ச்சியில் இருந்து விலக்குகிறது.
Tamil Nadu Today News Updates: 'கல்வி முன்னேற்றத்தை பின்தள்ளாதீர்கள்'
தேசிய கல்விக் கொள்கை என்பது மாநிலங்களுக்கு தங்களது தேவைகளைப் பொறுத்து நடைமுறைப்படுத்த தனி உரிமை அளிக்கிறது. கல்வி வளர்ச்சிக்காக மத்திய அரசு வழங்கும் திட்டங்கள், மாநில அரசின் முன்னேற்றத்திற்கு பயன்படும். PM SHRI பள்ளிகள் தேசிய கல்விக் கொள்கை 2020-ன் சிறந்த உதாரணமாக செயல்படுத்தப்பட்டுள்ளன. தேசிய கல்விக் கொள்கை 2020-க்கு எதிராக அரசியல் செய்ய வேண்டாம். மாநில அரசு, தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ தவறாக சித்தரித்து, கல்வி முன்னேற்றத்தை பின்தள்ளாதீர்கள்.
இந்த கொள்கை எந்த மொழியையும் திணிக்கவில்லை. பல அரசியல் கட்சிகள் ஆட்சியில் உள்ள மாநிலங்களும் தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ செயல்படுத்தி வருகின்றன. இந்த கொள்கை மாணவர்களின் எதிர்காலத்திற்காக உருவாக்கப்பட்ட ஒரு கல்வி மாற்றம். தமிழக அரசுக்கு ஒரு வேண்டுகோள். மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, கல்வியின் தரம் உயர, தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ நேர்மறையாக அணுகுங்கள்" என எழுதி உள்ளார்.
Tamil Nadu Today News Updates: ரூ.5 ஆயிரம் கோடியை இழக்கும் தமிழ்நாடு
மேலும்,"அறிவியல் கல்வியில் கவனம் செலுத்தும் PM SHRI பள்ளிகளை செயல்படுத்தாததால் தமிழ்நாடு ரூ.5 ஆயிரம் கோடியை இழக்கிறது. அரசியல் வேறுபாட்டைக் கடந்து, குறுகிய மனப்பான்மையுடன் செயல்பட வேண்டாம் என நான் கேட்டுக்கொள்கிறேன்" என தர்மேந்திர பிரதான் பேசி உள்ளார். இது தமிழ்நாடு அரசியல் தளத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க | முடிந்தால் அண்ணா சாலைக்கு வர சொல்லுங்க - அண்ணாமலைக்கு உதயநிதி சவால்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ