ஒரே நேர்கோட்டில் வரும் 7 கோள்கள்... எப்போது, எங்கு பார்க்கலாம்? - அடுத்து 2040இல் தான்

7 Planets Aligning In The Sky: சூரிய குடும்பத்தின் 7 கோள்களும் வானில் ஒரே நேர்கோட்டில் வர இருக்கின்றன. அதை எங்கு, எப்போது, எப்படி காணலாம் என்பதை இங்கு தெரிந்துகொள்ளுங்கள்.

Written by - Sudharsan G | Last Updated : Feb 21, 2025, 09:46 AM IST
  • பிப்.28ஆம் தேதி இந்த அரிய நிகழ்வை பார்க்கலாம்.
  • பல கோள்களை வெறும் கண்களால் பார்க்கலாம்.
  • சில கோள்களை டெலஸ்கோப் மூலமே பார்க்கலாம்.
ஒரே நேர்கோட்டில் வரும் 7 கோள்கள்... எப்போது, எங்கு பார்க்கலாம்? - அடுத்து 2040இல் தான் title=

7 Planets Aligning In The Sky: 2025ஆம் ஆண்டு, லீப் வருடம் இல்லை, எனவே, இந்த பிப்ரவரி மாதம் 28 நாள்களே உள்ளன. அந்த வகையில், இந்தாண்டு பிப்ரவரி 28ஆம் தேதி மிகவும் சிறப்பான ஒன்றாக திகழ்கிறது.

7 கோள்களும் ஒரே நேர்கோட்டில்...

ஆம், வரும் பிப். 28ஆம் தேதி நமது சூரிய குடும்பத்தின் 7 கோள்களும் வானில் ஒரே நேர்கோட்டில் வர இருக்கின்றன. இதனை பூமியில் இருந்தே நாம் வெறும் கண்களில் பார்க்க முடியுமாம்.

இனி 2040க்கு பின்னர் தான்...

இந்த அரிய வானியல் நிகழ்வு அடுத்து 2040ஆம் ஆண்டில்தான் நிகழும் என்கின்றனர் விஞ்ஞானிகள். கோள்களின் அணிவகுப்பு கடந்த மாதமே தொடங்கியதாக கூறப்படும் நிலையில், வரும் பிப். 28ஆம் தேதி உச்சத்தை அடைந்து 7 கோள்கள் நேர்கோட்டில் சந்திக்க இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

வெறும் கண்களால் பார்க்கலாம்

சூரிய குடும்பத்தின் புதன் (Mercury), வெள்ளி (Venus), செவ்வாய் (Mars), வியாழன் (Jupiter), சனி (Saturn), யுரேனஸ், நெப்டியூன் உள்ளிட்ட 7 கோள்கள் வானத்தில் ஒரே நேர்கோட்டில் வருகின்றன. நான்கு அல்லது அதற்கும் மேற்பட்ட கோள்கள் இதுபோன்ற ஒரே நேர்கோட்டில் வருவது இயல்பானதில்லை என்றும் இது நடப்பது அரிது என்றும் நாசா கூறுகிறது. இதன் சிறப்பே இதனை நீங்கள் வெறும் கண்களாலும் பார்க்கலாம் என்பதுதான்.

கோள்களின் அணிவகுப்பு

சூரிய குடும்பத்தில் உள்ள கோள்கள், சூரியனைச் சுற்றி ஒரே கோட்டில் அதாவது எக்லிப்டிக் (ecliptic) எனப்படும் தளத்தில் சுற்றி வருகின்றன. எனவே தான், சூரிய குடும்பத்தின் கோள்கள் எப்போதும் ஒரு கோட்டில் எங்காவது தோன்றுவதை பார்க்க முடிகிறது. இந்த நிகழ்வுகள், பொதுவானவை தான். இவை "கோள்களின் அணிவகுப்பு" என்றும் அழைக்கப்படுகிறது.

இந்தியாவில் கோள்களின் அணிவகுப்பை எப்போது பார்க்கலாம்?

7 கோள்களின் அணிவகுப்பை நீங்கள் பிப். 28ஆம் தேதி அன்று மாலை சூரிய அஸ்தமனத்திற்கு பின் 45 நிமிடங்களில் இருந்து கண்டு ரசிக்கலாம் என்கின்றனர் ஆய்வாளர்கள். சூரியன் மறைந்த பின்னர் புதன் (Mercury), வெள்ளி (Venus), செவ்வாய் (Mars), வியாழன் (Jupiter) ஆகிய கோள்களை நீங்கள் வெறும் கண்களால் பார்க்கலாம். ஆனால், சனி (Saturn), யுரேனஸ், நெப்டியூன் உள்ளிட்ட கோள்கள் நீங்கள் வெறும் கண்களால் பார்க்க இயலாது. நல்ல பைனாக்குலர் கொண்டோ அல்லது டெலஸ்கோப் கொண்டோ நீங்கள் அவற்றை பார்க்கலாம்.

இந்தியாவில் கோள்களின் அணிவகுப்பை எங்கு பார்க்கலாம்?

சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு, வெள்ளி கிரகத்தை நீங்கள் மேற்கு திசையில் பார்க்கலாம். அதேபோல் செவ்வாய் கிரகத்தை தெற்கு பார்க்கலாம். வரும் மார்ச் மாதத்தில் செவ்வாய் கிரகம் இன்னும் நன்றாக தெரியும் என்றும் கூறப்படுகிறது. வியாழன் கிரகம் தென்மேற்கு பகுதியில் பார்க்கலாம். 

வருடத்தின் தொடக்கத்தில் சனி கிரகத்தை உங்களால் நன்றாக பார்க்க முடியும். பிப்ரவரி மாதத்தின் பிற்பகுதியில் அதனை அவ்வளவு எளிதில் கண்டறிய முடியாது. யுரேனஸை நீங்கள் வெறும் கண்களால் பார்க்கலாம் என்றாலும் நல்ல அடர்த்தியான இருள் கொண்ட வானத்திலேயே உங்களால் அதனை பார்க்க முடியுமாம். வானத்தில் மேற்கு - தென்மேற்கு பகுதியில் இந்த கோளை நீங்கள் பார்க்கலாம் என்கின்றனர் ஆய்வாளர்கள். நெப்டியூனை பார்க்க டெலஸ்கோப் அவசியம்.

இந்தியாவில் கோள்களின் அணிவகுப்பை எப்படி பார்க்கலாம்?

பிப். 28ஆம் தேதி மேற்கு - தென்மேற்கு பகுதியில் புதன் (Mercury) கோளை உங்களால் பார்க்க முடியும். ஆனால், நீங்கள் தெளிவான வானத்தில் மட்டுமே இதனை பார்க்க முடியும். பிப்.28ஆம் தேதி வீட்டின் மொட்டமாடிக்கு சென்று 7 கோள்களை ஒன்றாக பார்க்கலாம் என்ற ஆசையுடன் சென்றால் ஏமாற்றமே மிஞ்சும். முன்னர் கூறியது போல் புதன், செவ்வாய், வெள்ளி, வியாழன் ஆகிய கோள்களை வெறும் கண்களால் பார்க்கலாம். மற்ற மூன்றையும் பார்ப்பது கடினம். 

இந்தியாவிலும் இந்த கோள்களின் அணிவகுப்பை நன்றாக காணலாம். பல்வேறு நகரங்களில் இதனை தெளிவாக காணலாம். பல்வேறு நகரங்கலில் உள்ள பிர்லா கோளரங்கம் போன்ற வானியல் சார்ந்த இடங்களில் இருக்கும் டெலஸ்கோப் மூலமும் இந்த அணிவகுப்பை நீங்கள் காணலாம். வெளிச்சம் அதிகம் இல்லாமல் இருள் சூழ்ந்த பகுதிகளில், காற்று மற்றும் ஒளி மாசுபாடு இல்லாத பகுதிகளில், வானத்தை பார்ப்பதில் எவ்வித தடங்கலும் இல்லாத பகுதிகளில் நீங்கள் இந்த கோள்களின் அணிவகுப்பை கண்டு ரசிக்கலாம். 

மேலும் படிக்க | Unveiling India Quiz Competition: மாணவர்கள் தங்கள் திறமையையும் அறிவையும் வெளிப்படுத்த ஒரு தளம்

மேலும் படிக்க | Unveiling India Quiz: மாநில சாம்பியன்ஷிப் சுற்றின் முதல் எபிசோடில் 4 அணிகள் போட்டி

மேலும் படிக்க | மொத்தம் 32,438 பணியிடங்கள்.. விண்ணப்பிக்காதவர்களுக்கு ரயில்வே கொடுத்த குட் நியூஸ்!
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News