NPS கணக்கு வைத்திருக்கும் நபர் இறந்தால் நாமினிக்கு ஓய்வூதியம் கிடைக்குமா?

NPS New Rules: என்பிஎஸ் கணக்கு வைத்திருப்பவரின் மரணத்திற்குப் பிறகு கணக்கு என்ன ஆகும்? உறுப்பினரால் பரிந்துரைக்கப்பட்ட நாமினிக்கு ஓய்வூதியம் கிடைக்குமா? இது குறித்த தகவல்களை இங்கே காணலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 20, 2025, 03:26 PM IST
  • NPS கணக்கு வைத்திருப்பவர் இறந்தால் என்ன நடக்கும்?
  • என்பிஎஸ் உறுப்பினருக்கு நாமினி இல்லையென்றால் கணக்கு என்ன ஆகும்?
  • நாமினி இல்லாத நபரின் பணத்தைப் பெறுவதற்குத் தேவையான ஆவணங்கள் என்ன?
NPS கணக்கு வைத்திருக்கும் நபர் இறந்தால் நாமினிக்கு ஓய்வூதியம் கிடைக்குமா? title=

NPS New Rules: ஓய்வூதிய திட்டமான தெசிய ஓய்வூதிய அமைப்பு, அரசு ஊழியர்களுக்கான ஒரு சிறந்த, பாதுகாப்பான மற்றும் நம்பகமான சேமிப்பு திட்டமாக உள்ளது. என்பிஎஸ் உறுப்பினர்கள் இந்த திட்டத்தின் ழுமையான தகவல்களையும் விவரங்களையும் அறிந்து வைத்திருக்க் வேண்டியது மிக அவசியமாகும். என்பிஎஸ் -இன் சில முக்கிய அம்சங்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.

National Pension System: தேசிய ஓய்வூதிய முறை

என்பிஎஸ் NPS -இல் பணம் எடுக்கும் விதிகளின் கீழ், கணக்கு வைத்திருப்பவர் இறந்தால், முழுத் தொகையும் பரிந்துரைக்கப்பட்ட நாமினிக்கு வழங்கப்படுமா? அதாவது NPS தொகையின் 100% நாமினிக்கு மாற்றப்படுமா? நாமினி அந்தத் தொகையை எப்படி பெறுவது? நாமினி இல்லை என்றால் கணக்கு என்ன ஆகும்?

பணி ஓய்வுக்குப் பிறகு அனைவரும் வசதியான வாழ்க்கையை வாழ விரும்புகிறார்கள். அப்படி வாழ பணியில் இருக்கும் போதே அதற்கான திட்டமிடலை செய்ய வேண்டியது மிக அவசியமாகும். 2004 ஆம் ஆண்டு மத்திய அரசால் தொடங்கப்பட்ட தேசிய ஓய்வூதிய முறை (NPS), இதில் ஊழியர்களுக்கு உதவும். இது பாதுகாப்பான ஓய்வூதியத்திற்கான சிறந்த ஒரு  திட்டமாக பார்க்கப்படுகின்றது. 

என்பிஎஸ் கணக்கு வைத்திருப்பவரின் மரணத்திற்குப் பிறகு கணக்கு என்ன ஆகும்? உறுப்பினரால் பரிந்துரைக்கப்பட்ட நாமினிக்கு ஓய்வூதியம் கிடைக்குமா? இது குறித்த தகவல்களை இங்கே காணலாம்.

NPS Investment: என்பிஎஸ் முதலீட்டின் வகைகள்

தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் (NPS) இரண்டு வழிகளில் முதலீடு செய்யலாம்:

Tier 1: டயர்-1 கணக்கு - ஓய்வூதியக் கணக்கு.
Tier 2: டயர்-2 கணக்கு - தன்னார்வ கணக்கு.

டயர் 1 இல், மொத்த முதலீட்டுத் தொகையில் 60% தொகையை ஓய்வுக்குப் பிறகு (60 வயதிற்குப் பிறகு) எடுக்கலாம். மீதமுள்ள 40% ஆனுவிட்டி, அதாவது வருடாந்திரத் தொகையை வாங்கப் பயன்படுகிறது.

NPS கணக்கு வைத்திருப்பவர் இறந்தால் என்ன நடக்கும்?

NPS கணக்கு வைத்திருப்பவர் ஓய்வு பெறுவதற்கு முன்பு இறந்துவிட்டால், முழுத் தொகையும் பரிந்துரைக்கப்பட்ட நாமினிக்கு வழங்கப்படும். இந்த தொகை NPS கார்பஸின் 100% தொகையாகும். நாமினி இந்த தொகையை மொத்தமாகவும் பெற்றுக்கொள்ளலாம், அல்லது, ஓய்வூதியமாகவும் பெறலாம். நாமினி ஓய்வூதியத்தைப் பெற தீர்மானித்தால், அவர், ஒரு வருடாந்திர சேவை வழங்குநரைத் தேர்ந்தெடுத்து தொடர்புடைய படிவத்தை நிரப்ப வேண்டும்.

என்பிஎஸ் உறுப்பினருக்கு நாமினி இல்லையென்றால் கணக்கு என்ன ஆகும்?

NPS கணக்கு வைத்திருப்பவர் யாரையும் நாமினியாக பரிந்துரைக்கவில்லை என்றால், கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட தொகை சட்டப்பூர்வ வாரிசு அல்லது குடும்ப உறுப்பினருக்கு வழங்கப்படும்.

நாமினி இல்லாத நபரின் பணத்தைப் பெறுவதற்குத் தேவையான ஆவணங்கள் என்ன?

என்பிஎஸ் உறுப்பினர் எந்த ஒரு நாமினியையும் பரிந்துரைக்கவில்லை என்றால், உறுப்பினரின் சட்டப்பூர்வ வாரிசு, வாரிசு சான்றிதழை வழங்க வேண்டும். இது வருவாய்த் துறையிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். சரிபார்ப்பிற்குப் பிறகு, தொகை சட்டப்பூர்வ வாரிசுக்கு மாற்றப்படும். 

பணத்தைத் திரும்பப் பெறும் செயல்முறைக்கு, சட்டப்பூர்வ வாரிசு www.npscra.nsdl.co.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் உள்ள இறப்பு பணம் எடுக்கும் படிவத்தை (Death Withdrawal Form) நிரப்ப வேண்டும். தேவையான ஆவணங்களில் பின்வருவன அடங்கும்:

- வாரிசு உரிமைச் சான்றிதழ்
- KYC ஆவணங்கள்
- என்பிஎஸ் உறுப்பினரின் இறப்புச் சான்றிதழ்
- வங்கி கணக்குச் சான்று

மேலும் படிக்க | PPF முதலீடு... ஓய்வு காலத்தில் மாதம் ரூ.48,000 பென்ஷன் பெறலாம்

மேலும் படிக்க | 8வது ஊதியக்குழு: தாறுமாறாக உயரப்போகும் அடிப்படை ஊதியம், ஊழியர்கள் காட்டில் பணமழை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News