ஒலியில் இருக்கும் பேய்! தமிழ் சினிமாவில் வித்தியாச முயற்சி! எப்படி இருக்கிறது ட்ரைலர்?

ஆதி நாயகனாக நடிக்க லக்‌ஷ்மிமேனன் நாயகியாக நடித்துள்ள சப்தம் படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என நான்கு மொழிகளில் ஒரே நேரத்தில் வரும் 2025 பிப்ரவரி 28 ஆம் தேதி ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.

Written by - RK Spark | Last Updated : Feb 20, 2025, 02:25 PM IST
  • அறிவழகன் இயக்கத்தில் உருவாகி உள்ள சப்தம்.
  • நடிகர் ஆதி கதாநாயகனாக நடித்துள்ளார்.
  • வரும் 28ம் தேதி படம் வெளியாகிறது.
ஒலியில் இருக்கும் பேய்! தமிழ் சினிமாவில் வித்தியாச முயற்சி! எப்படி இருக்கிறது ட்ரைலர்? title=

7G Films நிறுவனம் சார்பில் 7G சிவா தயாரிப்பில், ஈரம் படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு இயக்குநர் அறிவழகன், நடிகர் ஆதி வெற்றிக்கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் “சப்தம்”. காமெடி ஹாரர் படங்களுக்கிடையில் ஒரு இனிமையான மாற்றமாக, ஒலியை மையமாக வைத்து, இதயத்தை அதிரவைக்கும் ஹாரர் திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது. வரும் 2025 பிப்ரவரி 28 ஆம் தேதி ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினர் கலந்துகொள்ளப் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இந்நிகழ்வினில் ஓளிப்பதிவாளர் அருண் பத்மநாபன் பேசியதாவது, இயக்குனர் அறிவழகன் சாருடைய ஈரம் திரைப்படத்தில் நான்  உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்றினேன். அதன் பிறகு தான் நான் ஒளிப்பதிவாளராக பணிபுரிய ஆரம்பித்தேன். எனது முதல் படமான “மகாமுனி” திரைப்படத்தை பார்த்து, அறிவழகன் சார் என்னை இந்த  படத்திற்கு ஒளிப்பதிவாளராக மாற்றினார். அதற்கு அவருக்கு நன்றிகள். இந்த திரைப்படம் எனது வாழ்நாளில் எனக்கு கிடைத்த மிக முக்கியமான படம்.  இது போல ஒரு படம் மீண்டும் அமைவது கடினம். இந்த படத்திற்காக குழுவாக இணைந்து  கடினமான உழைப்பை  வழங்கியுள்ளோம்.  இந்த படத்தில் ஹீரோ சார் முதல், படக்குழுவினர் அனைவரும் முழு ஒத்துழைப்பையும் வழங்கினர். இந்த குழுவோடு பயணித்தது மிக்க மகிழ்ச்சி.

மேலும் படிக்க | ஜெயிலர் 2 படத்தின் வில்லன் இவர்தான்!! யாரும் எதிர்பார்க்காத ஒருவர்..

இயக்குனர் அறிவழகன் பேசியதாவது, நீண்ட இடைவேளைக்குப் பிறகு, என்னுடைய படம் தியேட்டருக்கு வருகிறது. ஈரம் படத்தில் தண்ணீரை வைத்து புதுமை செய்தது போல், இப்படத்தில் சவுண்ட் வைத்துச் செய்யலாம் என்ற போது, நிறைய சவால்கள் இருந்தது. ஈரம் படம் இப்போது வரை டெக்னிகலாக பாராட்டப்படும் படம். தண்ணீரில் ஹாரர் எனும் போது, அந்த ஆவியின் உருவத்தைக் காட்டுவது, மிக எளிதாக இருந்தது. ஆனால் சவுண்டை வைத்து பேயை காட்டுவது எப்படி என, கதை எழுதும் போதே சவாலாக இருந்தது. சவுண்டில் தியேட்டரில் டால்ஃபி சவுண்ட் புரமோ வருமல்லவா, அந்த குவாலிட்டியை திரையில் கொண்டு வர திட்டமிட்டோம். 7G Films நிறுவனம் 7G சிவா இப்படத்திற்கு மிக உறுதுணையாக இருந்தார், இந்தப்படத்தின் பட்ஜெட் பெரிதான போது, இந்தப்படத்தின் டெக்னிகல்களை புரிந்து கொண்டு, இப்படத்திற்கு முழு ஆதரவாக நின்றார்.

அவர்கள் ஏற்கனவே டிஸ்டிரிபூசனில் இருந்ததால் படத்தினை பற்றிய முழு புரிதல் அவரிடம் இருந்தது. படம் கேட்கும் அனைத்து செலவுகளையும் செய்யுங்கள் என்றார். அவரால் தான் இந்தப்படம் இந்த அளவு தரத்துடன் வந்துள்ளது அவருக்கு என் நன்றி. மேலும் என் தொழில் நுட்ப கலைஞர்களும் மிக உதவியாக இருந்தார்கள். ஆடியோகிராஃபர் உதயகுமார் என்னுடன் பல காலமாக வேலை பார்த்து வருகிறார். எடிட்டர் சாபு, ஒளிப்பதிவாளர் அருண், இசையமைப்பாளர் தமன் எல்லோரும் இணைந்து இந்தப்படத்தை உருவாக்கி இருக்கிறோம். மற்ற ஹாரர் படத்திலிருந்து இந்தப்படத்தில் என்ன வித்தியாசம்? ஹாரரில் பல ஜானர்கள் இருக்கிறது எல்லாவற்றிற்கும் ஒரு காரணம் இருக்க வேண்டும் என்று நினைப்பவன் நான். ஈரம் படம் உங்களை ஒரு அனுபவத்திற்குள் கொண்டு சென்றது போல, இந்தப்படம் மிக வித்தியாசமான அனுபவமாக இருக்கும். ஒளிப்பதிவாளர் இந்தப்படத்தில் புளூ டோன் வைக்கலாம் என்றார், அது  மிக வித்தியாசமாக இருக்கும். சாபு ஜோசப் அவரும் இப்படத்தில் நிறைய புதுமைகள் செய்துள்ளார்.

படத்தில் என் வியூ தவிர அவரோட வியூ எப்படி இருக்கிறது எனப் பார்ப்பேன், அதில் அவர் கடினமாக உழைத்துள்ளார். அவருக்கு நன்றி. விவேகா என் எல்லாப்படங்களிலும் வேலை பார்த்துள்ளார், இந்தப்படத்திலும் பாடல்கள் நன்றாக இருக்கும். ஆர்ட் டைரக்டர் மனோஜ் மிக வித்தியாசமான செட்டை அமைத்துத் தந்தார். சவுண்ட் உதயகுமார் சார், பல விசயங்கள் புதுமை செய்துள்ளார். அவர் நிறைய பெரிய படங்கள் செய்து வருகிறார். இந்தப்படத்தில் எங்கே சவுண்ட் வேண்டும், எங்கு வேண்டாம் என நிறைய விவாதித்தோம். அதை மிகக் கச்சிதமாக செய்துள்ளார். ரொம்ப நாட்களாக ஆதி சாரும் நானும் வேலை செய்ய, பேசி வந்தோம், இந்தப்படத்தை கதை சொன்னவுடன் செய்யலாம் என்றார், அவர் தயாரிப்பில் ஃபர்ஸ்ட் காப்பியில் இப்படத்தைச் செய்துள்ளேன், தமனை நிறையத் தொந்தரவு செய்துள்ளேன், ஆனால் அதை எல்லாம் கடந்து, அவர் பின்னணி இசை வரும் போது பிரமிப்பாக இருந்தது. நாம் நினைத்த கதையை ஒருவர் நம்பி உள்ளே வர வேண்டும், அது தான் எனக்கு கம்ஃபடபிள், ஆதி என்னை நம்பி உள்ளே வந்தார். இந்தப்படம் மிகவும் வித்தியாசமான ஹாரர் அனுபவமாக இருக்கும். என் நேர்மை தான் என்னை இங்கு கொண்டு வந்துள்ளது என நம்புகிறேன், இந்தப்படம் எல்லோருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும் நன்றி.

நடிகர் ஆதி பேசியதாவது, இந்த மேடை மிக முக்கியமானது. "சப்தம்" என் நண்பர்களிடம் இந்தப்படம் பற்றி சொல்லும் போது ஏன் ஹாரர் எனக் கேட்பார்கள், ஹாரர் என்றாலே கொஞ்சம் கீழாக பார்க்கும் பார்வை இருக்கிறது, அப்போ ஈரமும் ஹாரர் தானே என்பேன், ஈரம் சூப்பராக இருக்கும் என்று பாராட்டுவார்கள். அது ஹாரரில் வித்தியாசமாக இருக்கும் என்று பாராட்டுவார்கள், அது தான் அறிவழகன் சார், அவர் இயக்கத்தில் ஈரம்  மாதிரி இன்னொரு படம் கிடைக்குமா? என நினைத்துள்ளேன், அதை மீண்டும் அறிவழகன் எனக்குத் தந்துள்ளார். இந்தப்படத்தில் பாராநார்மல் இன்வஸ்டிகேட்டராக நடித்துள்ளேன்,  இது முழுக்க முழுக்க இந்த டீமின் படம், அவர்கள் உழைப்பு தான் முழுப்படமும். ஹாலிவுட் படம் மாதிரி என அடிக்கடி சொல்வோம் ஆனால் இங்கு நம்ம சினிமாவை ஹாலிவுட்டை தாண்டிய தரத்தில் உருவாக்கியிருக்கும் படம் தான் சப்தம். கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.

மேலும் படிக்க | மீண்டும் இணையும் ஜிவி பிரகாஷ் - திவ்ய பாரதி! அதுவும் இந்த படத்திலா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News