Uttar Pradesh Crime News: படங்களை மிஞ்சும் அளவுக்கு உத்தர பிரதேசத்தில் நடந்த ஒரு சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட நிலையில், அவருக்கு நடந்த கொடுமைகளை அவரது 4 வயது மகள் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார். அப்படி என்ன தான் நடந்தது என்ற திக் திக் பின்னணியை காணலாம்.
உத்தர பிரதேசம் மாநிலத்தில் 27 வயதான சோனாலி என்ற பெண் கடந்த திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார். அவர் தற்கொலை செய்து கொண்டதாக பேசப்பட்ட நிலையில், அவரது 4 வயது மகள் வரைந்த ஓவியம் இந்த வழக்கின் போக்கையே புரட்டிப்போட்டுள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு சந்தீப் என்பவருடன் சோனாலிக்கு திருமணம் நடந்துள்ளது. திருமணம் நடந்ததில் இருந்தே சோனாலியை பல வகையில் சந்தீப் தொல்லை செய்து வந்துள்ளார். திருமணத்தின் அன்று 20 லட்சம் ரூபாயை வரதட்சணையாக கொடுத்துள்ளார் சோனாலியின் தந்தை சஞ்சீவ் திரிபாதி. ஆனாலும் தொடர்ந்து கார் வேண்டும், பணம் வேண்டும் என கேட்டு மகளை மாப்பிள்ளை மற்றும் அவரது குடும்பத்தார் கொடுமை படுத்தி வந்துள்ளார்.
மகளுக்கு நடக்கும் துயரம் குறித்து அப்போதே சஞ்சீவ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் இரு வீட்டாரும் சமரசம் ஆனதால் மீண்டு அந்த கொடூரனின் வீட்டுக்கு வாழச் சென்றுள்ளார் சோனாலி. அதன்பிறகு பெண் குழந்தைக்கும் அவர் தாயாகி இருக்கிறார்.
சோனாலிக்கு பிரசவம் ஆனதும் மருத்துவமனையிலேயே பெண் குழந்தை என்றதும் குழந்தையைக் கூட பார்க்காமல் சென்றுள்ளனர் சந்தீப் மற்றும் அவரது குடும்பத்தினர். அதன்பிறகு சில மாதங்கள் கழித்து மீண்டும் மனைவி மற்றும் மகளை அழைத்துக் கொண்டு சென்றுள்ளார் சந்தீப். ஆனால் இதன் பிறகு தான் மனைவியை அடித்து துன்புறுத்திவது, மோசமாக நடத்துவது என அராஜகம் செய்துள்ளார்.
இப்படிப்பட்ட சூழலில் தான் கடந்த திங்கட்கிழமை சோனாலியின் தந்தைக்கு ஒரு போன் கால் சென்றுள்ளது. அதில் அவரது மகள் தற்கொலை செய்துகொண்டதாக கூறியுள்ளனர். அதன்பிறகு மகளின் வீட்டுக்கு சென்றபோது அவரது உடல் பிரேத பரிசோதைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது. நிச்சயம் இது தற்கொலை இல்லை என்பதை அறிந்த பெண்ணின் தந்தை, போலீசை அணுகியுள்ளார்.
இதற்கு நடுவே சோனாலியின் 4 வயது மகள் தனது தாயை, தந்தை அடிப்பது போன்ற ஒரு ஓவியத்தை வரைந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண்ணின் குடும்பத்தினர் போலீசில் சொல்லியுள்ளனர். அதன்பிறகு அந்த சிறுமியிடம் விசாரித்த போது, அவர் சொன்ன தகவல்கள் தான் அனைவரையும் அதிர செய்துள்ளது.
அப்பா அம்மாவை அடித்ததாகவும், நீ சாக வேண்டும் என சொன்னதாகவும், அதன்பிறகு சிறிது நேரத்தில் அம்மா அசைவற்று போனதாகவும் கூறியுள்ளார் சிறுமி. அசைவற்று இருந்த தனது அம்மாவை அப்பா இழுத்துச்சென்றதாகவும் தெரிவித்துள்ளார்.
எப்போதும் அப்பா இப்படி தான் அம்மாவை அடித்து மோசமாக நடந்துகொள்வார் என்றும், தனக்கு இப்படி தான் நடக்கும் என்றும் மிரட்டியதாகவும் கூறியபடி கண்கலங்கியுள்ளார் சிறுமி.
இந்த தகவல்களை அடுத்து போலீசார் சோனாலியின் கணவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே வழக்கின் அடுத்த கட்ட விசாரணை தொடங்கும். பெண்ணின் மரணத்தில் 4 வயது மகள் வரைந்த ஓவியம் வழக்கின் போக்கையே மாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க - Viral Video: ஒரு பக்கம் குழந்தை.. மறுபுறம் கூட்டம்.. வைரலான பெண் காவலர் வீடியோ
மேலும் படிக்க - ரயிலுக்கும் தண்டவாளத்துக்கும் இடையே சிக்கிய நபர்!! பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ