அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு குட் நியூஸ்..! குளிர்கால படி வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவு

Tamil Nadu government | அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு குளிர்கால படி வழங்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

Written by - S.Karthikeyan | Last Updated : Feb 18, 2025, 01:00 PM IST
  • தமிழ்நாடு அரசு வெளியிட்ட குட் நியூஸ்
  • அரசு ஊழியர்கள், ஆசிரியர் கோரிக்கை நிறைவேற்றம்
  • இனி குளிர்கால மற்றும் மலைவாழ் படி கிடைக்கும்
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு குட் நியூஸ்..! குளிர்கால படி வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவு title=

Tamil Nadu government Good News | ஈரோடு மாவட்டம், தாளவாடி. கடம்பூர் மற்றும் பரிகூர் மலை பகுதிகளில் பணியாற்றும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு குளிர்கால படி வழங்க வேண்டும் என 40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தனர். இந்த கோரிக்கையை தமிழ்நாடு அரசு நிறைவேற்றியுள்ளது. அதன்படி, தாளவாடி. கடம்பூர் மற்றும் பரிகூர் மலை பகுதிகளில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு குளிர்கால படி வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் செய்திக்குறிப்பில், ஈரோடு மாவட்டம் - தாளவாடி. கடம்பூர் மற்றும் பரிகூர் ஆகிய இடங்கள் ஏற்கனவே மலைப்பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அம்மலைப்பகுதிகளில் பணிபுரியும் ஆசிரியரிகள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு மலைவாழ்படி மற்றும் குளிர்காலப்படி வழங்கப்படாமல் இருந்தது. எனவே, தாளவாடி, கடம்பூர் மற்றும் பர்கூர் ஆகிய மலைப்பகுதிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மலைவாழ்படி மற்றும் குளிர்காலப் படி வழங்கிட வேண்டி அரசிற்கு கோரிக்கை விடுத்தனர்.

அவர்களது கோரிக்கையை ஏற்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான அரசால், தாளவாடி, கடம்பூர் மற்றும் பர்கூர் மலைப்பகுதிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு மலைவாழ் படி மற்றும் குளிர்காலப்படி வழங்கிட அண்மையில் அரசாணை வெளியிடப்பட்டது. 

தங்களது கோரிக்கையை நிறைவேற்றியதற்காக நன்றி தெரிவிக்கும் வகையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை 17.2.2025 தலைமைச் செயலகத்தில், அங்கீகரிக்கப்பட்ட தாளவாடி, கடம்பூர், பர்கூர் மலைப்பகுதி அனைத்து ஆசிரியர். அரசு மற்றும் பொதுத்துறை ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநிலத்தலைவர் திரு.அ.சு.சரத் அருள்மாரன், பொதுச் செயலாளர் திருத-குருமூர்த்தி, பொருளாளர் திரு.தா.ஜோசப் பாஸ்டர், துணைப் பொதுச் செயலாளர் திரு.செ.அருண்குமார், துணைத் தலைவர் திருநராஜா, மாநில செய்தி தொடர்பாளர் திரு.கு.தேவராஜ் ஆகியோர் சந்தித்து தாளவாடி, கடம்பூர் மற்றும் பர்கூர் ஆகிய மலைப்பகுதிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு மலைவாழ்படி மற்றும் குளிர்காலப்படி வழங்கியமைக்காக தங்களது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.

இதனை தொடர்ந்து சரத் அருள்மாறன் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது பேசிய அவர், ஈரோடு மாவட்டம் தாளவாடி, கடம்பூர் , பர்கூர் போன்ற மலைப்பகுதிகளில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு மலைவாழ் மற்றும் குளிர்கால படி ஊதியம் 48 ஆண்டுகளாக வழங்கப்படாமல் இருந்தது, கடந்த 2021 தேர்தலின் போது மலைவாழ் ஊழியர்களுக்கான படி ஊதியம் வழங்கப்படும் என முதல்வர் வாக்குறுதி அளித்திருந்தார். தொடர்ச்சியாக முதல்வரிடம் படி ஊதியம் வழங்க வேண்டி கோரிக்கையும் வைத்திருந்தோம். இந்நிலையில் முதல்வர் 48 ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்றி  அரசாணையை வெளியிட்டுள்ளார். அதற்காக முதல்வரை சந்தித்து எங்களின் கூட்டமைப்பு சார்பில் நன்றி தெரிவித்துள்ளோம் என கூறினார். 

மேலும் படிக்க | எடப்பாடிக்கு தைரியம் இருந்தால் இத செஞ்சு காட்டுங்க - சவால் விட்ட முன்னாள் எம்பி!

மேலும் படிக்க | ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கு குறைந்த விலையில் மருந்துகள்! தமிழக அரசு மெகா திட்டம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News