புதிய 50 ரூபாய் நோட்டை வெளியிடும் RBI .. இனி பழைய 50 ரூபாய் நோட்டு செல்லுமா?

புதிய 50 ரூபாய் நோட்டு: 50 ரூபாய் நோட்டு தொடர்பாக ஒரு முக்கிய செய்தி வெளியாகியுள்ளது. விரைவில் புதிய 50 ரூபாய் நோட்டு சந்தையில் காணலாம். இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ராவின் கையொப்பம் கொண்ட புதிய 50 ரூபாய் நோட்டுகளை விரைவில் வெளியிடும் என்று RBI கூறியுள்ளது.  

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 16, 2025, 05:19 PM IST
  • புதிய 50 ரூபாய் நோட்டைப் பற்றிய முக்கிய தகவல்
  • சஞ்சய் மல்ஹோத்ரா 2024 டிசம்பர் மாதத்தில் RBI ஆளுநராக பொறுப்பேற்றார்.
  • சந்தையில் ரூ.6,691 கோடி மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுகள்.
புதிய 50 ரூபாய் நோட்டை வெளியிடும் RBI .. இனி பழைய 50 ரூபாய் நோட்டு செல்லுமா? title=

புதிய 50 ரூபாய் நோட்டு: 50 ரூபாய் நோட்டு தொடர்பாக ஒரு முக்கிய செய்தி வெளியாகியுள்ளது. விரைவில் புதிய 50 ரூபாய் நோட்டு சந்தையில் காணலாம். இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ராவின் கையொப்பம் கொண்ட புதிய 50 ரூபாய் நோட்டுகளை விரைவில் வெளியிடும் என்று RBI கூறியுள்ளது.

புதிய நோட்டுகளின் வடிவமைப்பு

RBI ஒரு அறிக்கையில், "புதிய நோட்டுகளின் வடிவமைப்பு மகாத்மா காந்தி (புதிய) தொடரின் 50 ரூபாய் நோட்டுகளைப் போலவே இருக்கும்" என்று கூறியது. புதிய ரூ.50 நோட்டுகள் வெளியீட்டுக்குப் பிறகும், அனைத்து பழைய ரூ.50 நோட்டுகளும் சட்டப்பூர்வமாக செல்லும் எனவும், நோட்டுகளை மாற்ற தேவையில்லை எனவும் RBI வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு கூறுகிறது. ஏனெனில் பழைய நோட்டுகளும் புதிய நோட்டுக்களுடன் இணைந்து நடைமுறையில் இருக்கும் .அனைத்து 50 ரூபாய் நோட்டுகளும் செல்லுபடியாகும் நாணயமாகவே இருக்கும்

புதிய 50 ரூபாய் நோட்டைப் பற்றிய முக்கிய தகவல்

மகாத்மா காந்தி (புதிய) தொடரின் 50 ரூபாய் நோட்டின் அளவு 66 மிமீ x 135 மிமீ மற்றும் அதன் அடிப்படை நிறம் ஒளிரும் நீலம் என்பது கவனிக்கத்தக்கது. நோட்டின் பின்புறத்தில் தேருடன் கூடிய ஹம்பியின் படம் உள்ளது. இது நாட்டின் கலாச்சார பாரம்பரியத்தை சித்தரிக்கிறது.

பணவியல் கொள்கை குழு கூட்டம்

ரிசர்வ வங்கியின் ஆளுநராக இருந்த சக்திகாந்த தாஸ் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், மல்ஹோத்ரா 2024 டிசம்பர் மாதத்தில் பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. ரிசர்வ் வங்கி ஆளுநராக நியமிக்கப்பட்ட பிறகு, சென்ற வாரத்தில் நடந்த தனது முதல் பணவியல் கொள்கை குழு கூட்டத்தில், மல்ஹோத்ரா ரெப்போ விகிதத்தை 6.5 சதவீதத்திலிருந்து 6.25 சதவீதமாக 25 அடிப்படை புள்ளிகள் குறைப்பதாக அறிவித்தார்.

மேலும் படிக்க | இந்தோனேஷியா முதல் ஹங்கேரி வரை... ரூபாயின் மதிப்பு அதிகம் உள்ள சில நாடுகள்

2000 ரூபாய் நோட்டுகளில் 98.15 சதவீதம் திரும்ப வந்தன

நாட்டில் 2000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டு ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. ஆனால் மக்கள் இன்னும் ஆயிரக்கணக்கான கோடி மதிப்புள்ள இந்த நோட்டுகளை வைத்திருக்கிறார்கள். சமீபத்தில் ரிசர்வ் வங்கி இவை தொடர்பான அப்டேட் ஒன்றை வெளியிட்டது. ஜனவரி 31, 2025 ஆம் தேதிக்குள், 98.15 சதவீத 2000 ரூபாய் இளஞ்சிவப்பு நோட்டுகள் வங்கி முறைக்குத் திரும்பியுள்ளதாகவும், இன்னும் ரூ.6,577 கோடி மதிப்புள்ள நோட்டுகள் மக்களிடம் உள்ளன என்றும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது. 

சந்தையில் ரூ.6,691 கோடி மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுகள்

கடந்த 2024 டிசம்பர் 31 ஆம் தேதி வரையிலான ரிசர்வ் வங்கி தரவுகளின்படி, ரூ.6,691 கோடி மதிப்புள்ள நோட்டுகள் சந்தையில் இருந்தன. மே 19, 2023 அன்று, சுத்தமான நோட்டுக் கொள்கையின் கீழ், நாட்டின் புழக்கத்தில் உள்ள ரூ.2000 நோட்டுகளை திரும்பப் பெறுவதாக மத்திய வங்கி அறிவித்தது.

மேலும் படிக்க | மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைக்காவிட்டால் என்னவாகும்? இழப்பு மக்களுக்கு தான்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News