ரகசியமாக போதைப் பொருள் விற்பனை குறித்து புகார் அளிக்க தமிழ்நாடு அரசு செயலி ..!

Tamil Nadu Government Mobile App | போதைப் பொருள் விற்பனை குறித்து ரகசியமாக புகார் அளிக்க தமிழ்நாடு அரசு மொபைல் செயலியை அறிமுகம் செய்துள்ளது. புகார் அளித்தவரின் ரகசியம் காக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Written by - S.Karthikeyan | Last Updated : Feb 15, 2025, 07:32 AM IST
  • போதைப் பொருள் புகார் அளிக்கலாம்
  • ரகசியம் காக்கப்படும் என அறிவிப்பு
  • தமிழ்நாடு அரசு செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
ரகசியமாக போதைப் பொருள் விற்பனை குறித்து புகார் அளிக்க தமிழ்நாடு அரசு செயலி ..! title=

Tamil Nadu Government Mobile App | தமிழ்நாடு அரசு மாநிலம் முழுவதும் போதைப் பொருள் பயன்பாட்டை முழுமையாக தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புகளுக்குப் பிறகு போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக பள்ளிக் கல்லூரிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. சேலம் மாவட்டத்தில் போதைப் பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்ட ஆட்சியர் தலைமையில் சிறப்பு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், போதைப்பொருள் விற்பனை குறித்து புகார் அளிக்க தமிழ்நாடு அரசு சார்பில் சிறப்பு செயலி ஒன்றையும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

இது குறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி வெளியிட்டுள்ள அறிவிப்பில், போதையில்லா தமிழ்நாடு கைப்பேசி செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. போதைப் பொருள், பிற போதைப்பொருட்கள், தடை செய்யப்பட்ட புகையிலைப்பொருட்கள் போன்ற போதைப்பொருள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக போதைப்பொருள் இல்லா தமிழ்நாடு என்ற கைப்பேசி செயலி கடந்த 11. 01. 2025 அன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

மேலும் httrs.admin.druzfree.tn.com என்ற இணையதளம் மூலம் இதற்கான தீர்வுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் 'போதைப்பொருள் இல்லா தமிழ்நாடு கைப்பேசி செயலியின் பயன்பாடு குறித்து மாணவர்களிடம் தெரிவிப்பதற்காக வருகின்ற 18.02.2025 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரி முதல்வர்கள் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிமுக பயிற்சிக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த செயலி மூலம் புகார் அளிக்கும் நபர்களின் அடையாளம் இரகசியமாக வைக்கப்படும். 

மேலும் இந்த செயலி மூலம் பெறப்படும் புகாரின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து வெளிப்படையாக தெரிந்து கொள்ள 1இயலும் இதுகுறித்து கண்காணிப்பதற்காக மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர்? துணை ஆய்வாளர் கண்காணிப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளனர்" என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க - தமிழ்நாடு விவசாயிகளுக்கு குட் நியூஸ்..! சூப்பரான வாய்ப்பை மிஸ் செய்ய வேண்டாம்

மேலும் படிக்க - PM Kisan: 19வது தவணை யாருக்கு கிடைக்கும், யாருக்கு கிடைக்காது? செக் செய்வது எப்படி?

மேலும் படிக்க - தமிழ்நாடு விவசாயிகளுக்கு குட் நியூஸ் -பயிர் காப்பீடு அறிவிப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News