EPFO அதிரடி: 7 மடங்குக்கு மேல் அதிகரிக்கும் மாத ஓய்வூதியம், எப்போது அறிவிப்பு?

EPFO Big Udate: மோடி அரசாங்கம் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டமான UPS-ஐ அங்கீகரித்ததிலிருந்து, தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் PF ஊழியர்களும் தங்கள் ஓய்வூதியத் தொகையும் அதிகரிக்க வேண்டும் என கோரி வருகிறார்கள்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 14, 2025, 11:47 AM IST
  • இபிஎஃப் உறுப்பினர்களுக்கு முக்கிய செய்தி.
  • வரும் மாதங்களில் காத்திருக்கும் அறிவிப்புகள் என்ன?
  • மாத ஓய்வூதியம் எவ்வளவு அதிகரிக்கும்?
EPFO அதிரடி: 7 மடங்குக்கு மேல் அதிகரிக்கும் மாத ஓய்வூதியம், எப்போது அறிவிப்பு? title=

EPFO Pension: இபிஎஃப் உறுப்பினர்களுக்கு முக்கிய செய்தி உள்ளது. வரும் மாதங்களில் மத்திய அரசு பல வித அறிவிப்புகளை வெளியிடலாம் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக அடுத்த நிதியாண்டு துவக்கம் முதல், அதாவது ஏப்ரல் 2025 முதல் பல முக்கிய மாற்றங்கள் நிகழவுள்ளன. இவை இபிஎஃப் உறுப்பினர்களின் வசதிகளை அதிகரிக்கும் என எதிர்பார்க்கபப்டுகின்றது.

EPF Members: இபிஎஃப் உறுப்பினர்களின் கோரிக்கை

மோடி அரசாங்கம் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டமான UPS-ஐ அங்கீகரித்ததிலிருந்து, தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் PF ஊழியர்களும் தங்கள் ஓய்வூதியத் தொகையும் அதிகரிக்க வேண்டும் என கோரி வருகிறார்கள். அரசாங்கம் விரைவில் குறைந்தபட்ச EPS தொகையை ரூ.7,500 ஆக உயர்த்த வேண்டும் என்று PF ஊழியர் அமைப்புகள் கோருகின்றன. தற்போது குறைந்தபட்ச ஓய்வூதியத் தொகை மாதத்திற்கு ரூ.1,000 ஆக உள்ளது.

Employee Pension Scheme: ஊழியர் ஓய்வூதியத் திட்டம்
 
இபிஎஃப் உறுப்பினர்கள் EPS -இன் மூலம் ஓய்வூதியம் பெறுகின்றனர். இபிஎஃப் சந்தாதாரர்கள் மாதா மாதம் தங்கள் ஊதியத்தில் 12% -ஐ இபிஎஃப் கணக்கில் பங்களிக்கிறார்கள். இதே அளவு தொகையை நிறுவனமும் அளிக்கின்றது. பணியாளர்கள் அளிக்கும் தொகை மொத்தமாக இபிஎஃப் கணக்கிற்கு (EPF Account) செல்கிறது. நிறுவனம் அளிக்கும் தொகையில் 3.67 சதவீதம் இபிஎஃப் கணக்குக்கும் 8.33 சதவீதம் இபிஎஸ் கணக்குக்கும் செல்கின்றது. குறைந்தபட்ச சேவை காலம் 10 ஆண்டுகள் உள்ள ஊழியர்கள் மட்டுமே ஓய்வூதியப் பலன்களுக்குத் தகுதியுடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Minimum Monthly Pension: குறைந்தபட்ச மாத ஓய்வூதியம்

ஊழியர் அமைப்புகள் நீண்ட காலமாக இந்தக் கோரிக்கையை முன்வைத்து வருகின்றன. புதிய நிதியாண்டுக்கு முன்னர் இது குறித்து அரசாங்கம் ஒரு பெரிய அறிவிப்பை வெளியிடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிஎஃப் ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியத் தொகை அதிகரிக்கப்பட்டால், அது ஒரு பெரிய பரிசாக இருக்கும். இருப்பினும், இதுவரை இது பற்றி அரசு தரப்பிலிருந்து அந்த வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரவில்லை. எனினும், இதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும், விரைவில் இதில் ஒரு முடிவு எடுக்கப்படும் என்றும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

EPS Pension: இபிஎஸ் ஓய்வூதியம்

58 வயதிற்குப் பிறகு மாதா மாதம் ஓய்வூதியப் பலனைப் பெறலாம். தற்போது, ​​ஏராளமான மக்கள் பணியாளர் ஓய்வூதியத் திட்டத்தின் (EPS) பயனைப் பெறுகின்றனர். குறைந்தபட்ச ஓய்வூதியத் தொகை அதிகரிக்கப்பட்டால், அது பல ஓய்வூதியதாரர்களுக்கு பெரும் நிவாரணத்தை அளிக்கும். 

EPF Interest Rate: இபிஎஃப் வட்டி விகிதம்

அரசாங்கம் விரைவில் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO ​​உடன் ஒரு கூட்டத்தை நடத்தி PF ஊழியர்களுக்கான வட்டித் தொகையை அறிவிக்கும் என கூறப்படுகின்றது. EPFO -வின் மத்திய அறங்காவலர் குழு கூட்டம் பிப்ரவரி கடைசி வாரத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கூட்டத்தில், PF உறுப்பினர்களுக்கான வட்டி விகிதம் அங்கீகரிக்கப்படலாம். இந்த முறை வட்டித் தொகையை 0.10 சதவிகிதம் அதிகரித்து 8.35 சதவீதமாக அரசு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்கின்றது. தற்போது பிஎஃப் ஊழியர்களுக்கு 8.25 சதவீத வட்டி வழங்கப்பட்டி வருகிறது.

மேலும் படிக்க | 8வது ஊதியக்குழு: மெகா ஊதிய உயர்வு.... பியூன் முதல் அதிகாரிகள் வரை, யாருக்கு எவ்வளவு கிடைக்கும்?

மேலும் படிக்க | PM Kisan: 19வது தவணை யாருக்கு கிடைக்கும், யாருக்கு கிடைக்காது? செக் செய்வது எப்படி?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News