எச்சரிக்கை... மாரடைப்பை ஏற்படுத்தும் வைட்டமின் குறைபாடுகள்... தீர்வைத் தரும் சில உணவுகள்

இன்றைய ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் தவறான உணவுப் பழக்கம் காரணமாக, மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஆபத்து கணிசமாக அதிகரிக்கிறது. இதயத்திற்கு செல்லும் நரம்புகளில் அடைப்பு ஏற்படுவதால் மாரடைப்பு அபாயம் அதிகரிக்கிறது.

முதியவர்களை விட, இளைஞர்கள் மத்தியில் இதய நோய்கள் மற்றும் மாரடைப்பு சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில், சில வைட்டமின்களின் குறைபாடு மாரடைப்பு அபாயத்தையும் அதிகரிக்கிறது என்கின்றனர் நிபுணர்கள். இந்நிலையில், மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கும் வைட்டமின் எது என்பதை தெரிந்து கொள்வோம்.

1 /7

வைட்டமின் டி குறைபாடு மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கிறது என எச்சரிக்கின்றனர் நிபுணர்கள். வைட்டமின் டி எலும்புகளுக்கு இன்றியமையாதது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் சில சமீபத்திய ஆய்வுகள் இதய ஆரோக்கியத்திற்கு வைட்டமின் டி மிகவும் முக்கியமானது என்பதைக் உறுதிபடுத்தியுள்ளது. வைட்டமின் டி குறைபாடு உயர் இரத்த அழுத்தம் பிரச்சனையை ஏற்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.   

2 /7

வைட்டமின் பி12 குறைபாடு நரம்புகளையும் மூளை ஆரோக்கியத்தையும் ஏற்படுத்தும் என்பது அனைவரும் அறிந்து விஷயம். அதே நேரத்தில்,  வைட்டமின் பி12 குறைபாடு காரணமாக இதயத் துடிப்பு மற்றும் இரத்த அழுத்தம் அதிகரிப்பதால், பக்கவாதம் மற்றும் மாரடைப்பு ஏற்படும் ஆபத்து அதிகரிக்கிறது என்கின்ரனர் நிபுணர்கள்

3 /7

மாரடைப்பிலிருந்து பாதுகாக்கும் வைட்டமின்கள்: மாரடைப்பைத் தடுக்க வைட்டமின் டி, வைட்டமின் பி6, வைட்டமின் கே, வைட்டமின் பி12 மற்றும் வைட்டமின் பி9 ஆகியவை மிகவும் முக்கியம். இந்த வைட்டமின்களின் குறைபாடு மாரடைப்பை ஏற்படுத்தும். இதய நோயிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள இந்த வைட்டமின்களை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

4 /7

பழங்களில்,  ஆப்பிள், ப்ளாக்பெர்ரி, ஸ்ட்ராபெர்ரி, ப்ளூபெர்ரி, ஆரஞ்சு திராட்சை மற்றும் மாதுளை ஆகியவற்றை தினமும் உட்கொள்வது மாரடைப்பில் இருந்து காத்துக் கொள்ள உதவும். இந்த பழங்களில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின்கள் உட்பட பல ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன. 

5 /7

இதயத்தை வலுப்படுத்த சாப்பிட வேண்டிய உணவுகள்:  இதயத்தை வலுப்படுத்த, நார்ச்சத்து மிக்க உணவுகளை டயட்டில் சேர்த்துக் கொள்ள வேண்டும். நார்ச்சத்துக்காக நீங்கள் முளை கட்டிய பயறு வகைகள், பழுப்பு அரிசி, குயினோவா, ஓட்ஸ் போன்றவற்றை உட்கொள்ளலாம். நார்ச்சத்து உட்கொள்வது உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கிறது.

6 /7

இதயத்தை வலுவாக வைத்திருக்க நார்ச்சத்து தவிர, மெக்னீசியம் மற்றும் பொட்டாசியத்தையும் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். அவை இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்பத்துகின்றன. இந்த தாதுக்களில் உள்ள குறைபாடுகள் உயர் இரத்த அழுத்தம், இதய நோய் மற்றும் தசை பலவீனம் உள்ளிட்ட உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.

7 /7

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது