EPFO Upate: UAN -ஐ ஆக்டிவேட் செய்தல் மற்றும் ஆதார் இணைப்பிற்கான கடைசி தேதி இப்போது பிப்ரவரி 15 ஆக நீட்டிக்கப்பட்டுள்ளது. இதை ஆன்லைனில் செய்வதற்கான எளிய செயல்முறையை இந்த பதிவில் காணலாம்.
EPFO ELI UAN Activation: இபிஎஃப் உறுப்பினர்கள் பிப்ரவரி 15 ஆம் தேதிக்குள் UAN -ஐ ஆக்டிவேட் செய்து வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். இல்லையெனில் சில நமைகளை பெறமுடியாமல் போகலாம். இதை ஆன்லைனில் எப்படி செய்வது? இது குறித்த முழு விவரங்களையும் இங்கே காணலாம்.
ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) யுனிவர்சல் கணக்கு எண்ணை (UAN) செயல்படுத்துவதற்கான, அதாவது ஆக்டிவேட் செய்வதற்கான கடைசி தேதி சமீபத்தில் மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனுடன், வேலைவாய்ப்பு இணைக்கப்பட்ட ஊக்கத் திட்டத்தின் (ELIS) கீழ் வங்கிக் கணக்கை ஆதாருடன் இணைப்பதற்கான கடைசி தேதியும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
,UAN என்பது 12 இலக்க எண். EPFO அதன் உறுப்பினர்களுக்கு அதை வழங்குகிறது. இந்த தனித்துவமான எண்ணை செயல்படுத்தி, இபிஎஃப் உறுப்பினர்கள் (EPF Members) அதன் ஆன்லைன் சேவைகளைப் பெறலாம்.
வருங்கால வைப்பு நிதி கணக்கை நிர்வகித்தல், பாஸ்புக்கைப் பார்ப்பது, பணம் எடுப்பது மற்றும் முன்பணம் பெறுவதற்கான கோரிக்கைகளை தாக்கல் செய்தல் மற்றும் க்ளெய்ம்களைக் கண்காணித்தல் போன்ற EPFO -வின் டிஜிட்டல் சேவைகளுக்கான அணுகல் இப்போது ஆன்லைனில் கிடைக்கிறது. இதனால் உறுப்பினர்களுக்கான சேவைகள் விரைவாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் வழங்கப்படுகின்றன.
காலக்கெடு நீட்டிக்கப்பட்டது: UAN -ஐ ஆக்டிவேட் செய்தல் மற்றும் ஆதார் இணைப்பிற்கான கடைசி தேதி முதலில் நவம்பர் 30, 2024 ஆக இருந்தது. இது முதலில் டிசம்பர் 15, 2024 வரை நீட்டிக்கப்பட்டது. பின்னர் ஜனவரி 15, 2025 வரை நீட்டிக்கப்பட்டது. இப்போது கடைசி தேதி பிப்ரவரி 15, 2025 என மாற்றப்பட்டுள்ளது.
இதற்கு முதலில் EPFO உறுப்பினர் போர்ட்டலுக்கு செல்லவும். 'Important Links' என்பதில் 'Activae UAN' என்பதைக் கிளிக் செய்யவும். உங்கள் UAN, ஆதார் எண், பெயர், பிறந்த தேதி, ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் ஆகியவற்றை உள்ளிடவும். ஆதார் OTP மூலம் சரிபார்க்கவும்.
இதற்குப் பிறகு அங்கீகார PIN மற்றும் மொபைலில் பெறப்பட்ட OTP ஐ உள்ளிடவும். செயல்படுத்தப்பட்ட பிறகு, உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு கடவுச்சொல் அனுப்பப்படும். அதன் உதவியுடன், உங்கள் கணக்கை அணுகலாம்.
வேலைவாய்ப்பு தொடர்பான ஊக்கத்தொகை திட்டம் நாட்டில் வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் முயற்சியாகும். இதன் கீழ், இரண்டு ஆண்டுகளில் இரண்டு கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.2 கோடி பட்ஜெட் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த நிதியாண்டில் EPFO ரூ.2,05,932.49 கோடி மதிப்புள்ள 5.08 கோடி க்ளெய்ம்களை தீர்த்து வைத்துள்ளதாகவும், இது அதன் வரலாற்றில் மிக உயர்ந்த தொகை என்றும் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் மன்சுக் மண்டவியா தெரிவித்தார். 203-24 நிதியாண்டில் ரூ.1,82,838.28 கோடி மதிப்புள்ள 4.45 கோடி க்ளெய்ம்களை EPFO செட்டில் செய்தது. இந்த நிதியாண்டில் அது உயர்ந்து முந்தைய சாதனையை இந்த அமைப்பு முறியடித்துள்ளது.
தானியங்கி முறையில் க்ளெய்ம்கள் தீர்க்கபப்டுவதன் மூலம், இபிஎஃப் பரிமாற்ற செயல்முறையில் நிறுவனங்களின் தேவை குறைக்கப்பட்டுள்ளது. ப்ரொஃபைலில் இபிஎஃப் சந்தாதாரர்கள் (EPF Subscribers) சுயவிவரங்களை சுயமாகப் புதுப்பிக்கும் விருப்பம் இப்போது வழங்கப்பட்டுள்ளதால், இன்னும் அதிகபட்ச எண்ணிக்கையிலான க்ளெய்ம்களை வேகமாக செட்டில் செய்ய முடியும் என்று மத்திய அமைச்சர் கூறினார்.
இது தவிர நிராகரிப்பு விகிதமும் குறைந்துள்ளது. 1.11% வழக்குகள் மட்டுமே முதலாளி / நிறுவனகளால் நிராகரிக்கப்பட்டன. 0.21% வழக்குகள் அலுவலகத்தால் நிராகரிக்கப்பட்டன.
இந்த மாற்றங்களின் உதவியுடன், உறுப்பினர்களின் புகார்களும் பிரச்சனைகளும் குறைந்துள்ளன. இது EPFO மீதான உறுப்பினர்களின் நம்பிக்கையையும் ஆழப்படுத்தியுள்ளது.