Apaar Card: இன்னமுமா 10,12ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழை பத்திரமா வச்சிருக்கீங்க? இனி தேவையே இல்லை!

அபார் கார்டு என்றால் என்ன? மணவர்களுக்கு அது எப்படி உதவுகிறது? அபார் எண் பெறுவது எப்படி என்பதை இங்கு பார்க்கலாம். 

நம்மில் பலர் இன்னும் நமது 10 மற்றும் 12ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்களை பத்திரமாக பாதுகாத்து வருவோம். பாதுகாப்பது முக்கியம்தான். ஆனால் அதற்கான மாற்று வழியையும் நாம்  தெரிந்து வைத்திருக்க வேண்டும் அல்லவா. அது குறித்து இத்தொகுப்பில் பார்க்கலாம். 

1 /7

வாக்காளர் அட்டையை போல இந்தியா முழுவதும் உள்ள மாணவர்களை அடையாளப்படுத்த அபார் ஐடி கார்டு அமல்படுத்தப்பட்டது. 

2 /7

இந்த அபார் கார்டு மத்திய அரசால் 2020ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்டது. அபார் கார்டு என்றால் தானியக்க நிரந்தர கல்விக்கணக்கு(Automated Permanent Academic Account Registry) என்று அர்த்தம். One Nation, One Student ID Card முன்னெடுப்பின்படி இந்த அபார் கார்டு வழங்கப்படுகிறது. 

3 /7

இந்த APAAR Card மாணவர்களின் கல்வி தொடர்பான அனைத்து தகவல்களையும் சேமித்து அவற்றை எளிதாக்க உதவுகிறது. 

4 /7

பள்ளி முதல் கல்லூரி வரை பெறும் மதிப்பெண் சான்றிதழ்கள், உதவித்தொகை உள்ளிட்ட அனைத்து விவரமும் சேகரிக்கப்படும். 

5 /7

அகாடமி பேங்க் ஆஃப் கிரெடிட்ஸ் அதிகாரப்பூர்வ இணையத்தளத்திற்கு செல்லவும். பின்னர் My Account பிரிவில் Student விருப்பத்தை தேர்ந்தெடுக்கவும். 

6 /7

உங்கள் ஆதார் மற்றும் விவரங்களை உள்ளீடவும். இதையடுத்து படிவத்தை சமர்ப்பிக்கவும். படிவத்தை சமர்ப்பித்த பிறகு அபார் அடையாள அட்டை உருவாக்கப்படும்.   

7 /7

இதையடுத்து, டாஷ்போர்டில் உள்ள APAAR Card Dowload-யை கிளிக் செய்யவும். பின்னர் அதை பதிவிறக்கம் செய்துக் கொள்ளவும். குறிப்பாக ஆதார் அட்டையில் இருக்கும் பெயரையே அகாடமிக் பேங்க் ஆஃப் கிரெடிட்ஸில் கொடுக்க வேண்டும். அதாவது இரண்டும் ஒன்றாக இருக்க வேண்டும்.