Reasons Why We Should Not Drink Water While Eating : நாம் சாப்பிடும் போது தண்ணீர் குடிக்க கூடாது என பலர் சொல்ல கேட்டிருப்போம். அது ஏன் தெரியுமா?
Reasons Why We Should Not Drink Water While Eating : தண்ணீர் என்பது அனைவருக்கும் அவசியமான ஒன்றுதான். ஆனால், சாப்பிடும் போது தண்ணீர் குடித்தால் மட்டும், அதை செய்யக்கூடாது என பெரியவர்கள் சொல்ல கேட்டிருப்போம். ஒன்று, சாப்பிட்டு முடித்ததற்கு சில நிமிடங்களுக்கு பின்னர், அல்லது முன்னர் தண்ணீர் குடித்து விட வேண்டும் என சிலர் கூறுவர். பிறர் இப்படி கூறுவதற்கு என காரணம் தெரியுமா? இதற்கு பின்னால் இருக்கும் காரணங்கள் க்குறித்து இங்கு பார்ப்போம்.
உணவு சாப்பிடும் போது தண்ணீர் குடிப்பது, வயிற்று அமிலம் மற்றும் செரிமான நொதிகளை நீர்த்துப்போகச் செய்கிறது. இதனால், செரிமானம் மெதுவாகும்.
சாப்பிடும்போது அதிகமாக தண்ணீர் குடிப்பது, உணவின் இயற்கையான செரிமானத்திற்கு இடையூறை ஏற்படுத்தும். இதனால் வயிறு உப்பசம் ஏற்படும், அசௌகரியமாக இருக்கும்.
தண்ணீர் வயிற்றின் அளவை பெரிதாக்கும். இது உணவுக்குழாயில் அழுத்தத்தை ஏற்படுத்தி, அமில ரிஃப்ளக்ஸ் அல்லது நெஞ்செரிச்சலை ஏற்படுத்தலாம்.
நாம் சாப்பிடும்போது தண்ணீர் குடிப்பதால், உணவு விரைவாக வயிற்றில் சென்று இன்சுலின் சுரப்பை அதிகப்படுத்தலாம். இதனால் உடல் எடை அதிகரிக்கும் என்று மருத்துவ சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
சாப்பிடும் போது தண்ணீர் குடிப்பதால் வயிற்றின் pH மற்றும் செரிமானத் திறன் மாறலாம். இதனால், சில ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதில் தடைகள் ஏற்படலாம்.
சாப்பிடும்போது தண்ணீர் குடிப்பதால், வயிறு நிரம்பியது போன்ற உணர்வு தற்காலிகமாகத்தான் இருக்கும். ஆனால் இதனால் உண்மையாக பசி நிறையாது. இதனால், பின்னர் அதிகமாக சாப்பிட வேண்டும் என்பது போன்ற பசியுணர்வு ஏற்படலாம்.
உணவு சாப்பிடும் போது அதிகப்படியான தண்ணீர் குடிப்பதால் வயிறு வீக்கம், அஜீரணம் மற்றும் வாயுத்தொல்லைளும் உருவாகலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். (பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)