காஷ்மீர் டூர் போக ஆசையா? சென்னை - காஷ்மீர் இடையே சுற்றுலா ரயில்.. முழு விவரம் இதோ!

கோடை விடுமுறையை முன்னிட்டு சென்னையில் இருந்து காஷ்மீருக்கு சுற்றுலா ரயில் இயக்கப்படவுள்ளது. 

பலருக்கு காஷ்மீர் சென்று சுற்றிப் பார்க்க வேண்டும் என்ற ஆசை நீண்ட நாட்களாக இருக்கும். ஆனால் அவர்களிடம் சரியான திட்டம் இருக்காது. ஆதாவது காஷ்மீர் மட்டுமே செல்லலாமா அல்லது காஷ்மீருடன் சேர்த்து வேறு இடங்களையும் பார்த்துவிட்டு வரலாமா? அப்படி விரும்பினால் எங்கெல்லாம் செல்லலாம் என்ற திட்டம் சரியாக இருக்காது. இந்த நிலையில், ரயில்வே துறையே உங்களை திட்டங்கள் மற்றும் ஆசைகளை நிறைவேற்ற முயற்சிக்கிறது. அது குறித்து இங்கு பார்க்கலாம். 

1 /6

கோடை விடுமுறையில் காஷ்மீருக்கு சுற்றுலா செல்ல ரயில்வே துறை சிறப்பு ரயில் இயக்குகிறது. 

2 /6

ஏப்.2ஆம் தேதி இயக்கப்பட உள்ள இந்த ரயில் திருவனந்தபுரத்தில் இருந்து புறப்படுகிறது.

3 /6

அங்கிருந்து கொல்லம், கோட்டயம், எர்ணாகுளம், போத்தனூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, பெரம்பூர், கூடுர், நெல்லூர், குண்டூர் வழியாக செல்லும். 

4 /6

15 நாட்கள் பயணத்தில் ஆக்ரா, டெல்லி, அமிர்தசரஸ், ஸ்ரீநகர் மற்றும் காஷ்மீரில் உள்ள குல்மார்க், சோன்மார்க் ஆகிய பகுதிகளில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களை பயணிகள் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

5 /6

மொத்தம் 650 பயணிகள் இந்த ரயிலில் பயணம் மேற்கொள்ளலாம்.  நபர் ஒருவருக்கு 41600 முதல் 65500 வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பயண கட்டணம் கிடையாது. 

6 /6

இந்த சுற்றுலாவிற்கு செல்ல விரும்புபவர்கள் www.tourtimes.in என்ற இணையதளம் வாயிலாகவோ அல்லது 7305858585 என்ற எண் வாயிலாகவோ முன்பதிவு செய்துகொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.