2024-25 ஆண்டில் 5 கோடி க்ளைம்களுக்கு ஒப்புதல்... PF க்ளெய்ம் நிலையை அறியும் எளிய வழி

EPF Withdrawal Rules: பொதுவாக ஊழியர்களின் PF கணக்கில் சேர்ந்திருக்கும் தொகை பணி ஓய்வுக்கு பிறகு எடுக்கப்படுகிறது. இருப்பினும், சில நேரங்களில் சில அவசர தேவை அல்லது எதிர்பாராத தேவைகளுக்காக ஓய்வுக்கு முன்னரே பணத்தை எடுக்கலாம்.

PF என்னும் வைப்பு நிதி சம்பளம் பெறும் ஊழியர்களுக்கான அரசின் சேமிப்புத் திட்டம். இந்தியாவில் பணியில் உள்ள அனைவர்களுக்கும் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO அமைப்பில் PF கணக்குகள் இருக்கும்.

1 /9

EPFO  அமைப்பில் உள்ள லட்சக்கணக்கான உறுப்பினர்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், க்ளெய்ம் செட்டில்மெண்ட் செயல்முறையை எளிதாக்குவதற்கு EPFO ​​அவ்வப்போது விதிகளை மாற்றி அல்லது திருத்தி அமைக்கும். 

2 /9

மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் மன்சுக் மண்டாவியா, ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) அதன் வரலாற்றில் முதல் முறையாக 5 கோடி க்ளைம்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு இலக்கைத் தாண்டி ஒரு வரலாற்று மைல்கல்லை எட்டியுள்ளது என்று அறிவித்துள்ளார்

3 /9

2024-25 நிதியாண்டில், EPFO ​​ரூ. 2,05,932.49 கோடி மதிப்புள்ள 5.08 கோடி கிளைம்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன என்றும், இது முந்தைய 2023-24 நிதியாண்டில் தீர்க்கப்பட்ட ரூ.1,82,838.28 கோடி மதிப்புள்ள 4.45 கோடி க்ளெய்களை  விட அதிகமாகும் என மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் தெரிவித்தார்.

4 /9

EPFO சீர்திருத்தங்கள்: க்ளெய்ம் செட்டில்மெண்ட் செயல்முறைகளை மேம்படுத்தவும் உறுப்பினர்களிடையே குறைகளைக் குறைக்கவும் EPFO ​​அமைப்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள சீர்திருத்தங்கள் காரணமாக இந்த குறிப்பிடத்தக்க சாதனை சாத்தியமானது என்று மாண்டாவியா எடுத்துரைத்தார்.

5 /9

உங்கள் EPFO ​​க்ளெய்ம் நிலையை ஆன்லைனில் எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதை அறிந்து கொள்ளலாம். இந்தியா முழுவதும் உள்ள எந்த EPFO ​​அலுவலகங்களிலும் க்ளெய்ம் கோரிக்கையை சமர்ப்பித்த EPF உறுப்பினர்கள்/சந்தாதாரர்கள்/ஓய்வூதியதாரர்கள் தாங்கள் சமர்ப்பிக்கப்பட்ட க்ளெய்ம்  நிலையைக் கண்காணிக்க முடியும்.

6 /9

EPFO வலைத்தளத்தைப் பார்வையிட்டு "Know your Claim Status" பக்கத்திற்குச் செல்லவும். உங்கள் க்ளெய்மிற்கு ஒப்புதல் வழங்க வேண்டிய EPF அலுவலகம் உங்களுக்குத் தெரிந்தால், அலுவலக கீழ்தோன்றும் பட்டியலில் இருந்து அதைத் தேர்ந்தெடுக்கவும்.

7 /9

அலுவலகத்தைத் தேர்ந்தெடுக்கும்போது, ​​கட்டாய பிராந்தியக் குறியீடு மற்றும் அலுவலகக் குறியீடு அந்தந்தப் பெட்டிகளில் தானாகவே நிரப்பப்படும். மூன்றாவது பெட்டியில் நிறுவனக் குறியீட்டை உள்ளிடவும். இது அதிகபட்சம் 7 இலக்கங்களைக் கொண்டிருக்கலாம்.

8 /9

பின்னர் அதிகபட்சம் 7 இலக்கங்களைக் கொண்ட உங்கள் பிஎஃப் கணக்கு எண்ணை உள்ளிடவும். க்ளெய்ம் நிலையைப் பெற சமர்ப்பி என்பதைக் கிளிக் செய்யவும். இதன் மூலம் உங்கள் பிஎஃப் கணக்கு க்ளெய்ம் நிலையை அறியலாம்.

9 /9

EPFO-வின் எளிமைப்படுத்தப்பட்ட விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, இப்போது 8%  க்ளெய்களுக்கு மட்டுமே உறுப்பினர் மற்றும் முதலாளியின் சான்றளிப்பு தேவைப்படுகிறது. குறிப்பிடத்தக்க வகையில், 48% கோரிக்கைகள் முதலாளி தலையீடு இல்லாமல் உறுப்பினர்களால் நேரடியாகச் சமர்ப்பிக்கப்படுகின்றன. என்பது குறிப்பிடத்தக்கது.