EPFO Higher Pension: உயர் ஓய்வூதிய விண்ணப்ப நிலையை அறியும் எளிய முறை

EPS உறுப்பினர்கள் அதிக ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்க அனுமதிக்கும் உச்ச நீதிமன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு, தகுதியுள்ள தனியார் துறை ஊழியர்களிடையே மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தியது.

 

கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினால், நாட்டில் EPFO ​​திட்டத்தில் உள்ளவர்கள் அதிக ஓய்வூதியத்தைப் பெற விண்ணப்பிக்க தொடங்கினார்கள். இந்த முடிவைத் தொடர்ந்து, EPFO ​​விதிகளை ஏற்படுத்தி, உயர் ஓய்வூதியத்தின் பலன் கிடைக்க நடவடிக்கை எடுக்க தொடங்கியது.

 

1 /10

EPF Higher pension: உயர் EPS ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் விண்ணப்ப்பித்த உறுப்பினர்களின் ஊதிய விவரங்களைச் செயல்படுத்தி பதிவேற்றுவதற்கான பணியை முதலாளிகள் ஜனவரி 31, 2025 என்ற காலக்கெடுவிற்குள் முடிக்க வேண்டும் என ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு ( EPFO ) காலக்கெடு நிர்ணயித்திருந்தது.

2 /10

ஜனவரி 28 நிலவரப்படி, EPFO ​​1,65,621 விண்ணப்பதார்களுக்கு, அதிக ஓய்வூதிய தகுதிக்குத் தேவையான மீதமுள்ள தொகையை டெபாஸிட் செய்யுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், 21,885 உயர் ஓய்வூதியம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

3 /10

EPFO ​​என்னும் ஊழியர் ஓய்வூதிய நிதி அமைப்பு 21,885 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு அதிக ஓய்வூதியத்திற்கான உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. மேலும், 1.65 லட்சம் தகுதியுள்ள உறுப்பினர்களுக்கு அதிக ஓய்வூதியம் பெறுவதற்கான கூடுதல் தொகையை டெபாசிட் செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளது என்று நாடாளுமன்றத்திற்கு தெரிவிக்கப்பட்டது.

4 /10

EPF உயர் ஓய்வூதியம் பெற கோரிய 17.48 லட்சம் விண்ணப்பங்களில், ஜனவரி 28, 2025 நிலவரப்படி, அதிக ஓய்வூதியத் தகுதிக்கான நிலுவைத் தொகையை டெபாசிட் செய்ய 1,65,621 விண்ணப்பதார்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்று மக்களவையில் நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணையமைச்சர் ஷோபா கரந்த்லாஜே தெரிவித்தார்.

5 /10

EPFO உயர் ஓய்வூதிய விண்ணப்ப நிலையை அறிய https://unifiedportal-mem.epfindia.gov.in/memberInterfacePohw/ என்ற முகவரிக்கு சென்று, ‘Track Status of EPS Higher Pension Applications’ என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.

6 /10

பின்னர் அடுத்த பக்கத்தில், அதே டேபின் கீழ் 'Click Here' என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இதில் நீங்கள் மூன்று ஆப்ஷன்கள் மூலம் சரிபார்க்கலாம். 1. ஒப்புதல் எண்; 2.UAN; 3. PPO எண். பின்னர் கேப்ட்சா குறியீட்டை நிரப்பவும்

7 /10

ஓய்வூதிய விண்ணப்பத்தின் முன்னேற்றம்: ஒப்புதல் பெட்டியைத் தேர்வுசெய்து 'Get OTP' என்பதை தேர்ந்தெடுத்து, OTP எண்ணை உள்ளிட்டால், இதன் மூலம், உங்கள் உயர் இபிஎஸ் ஓய்வூதிய விண்ணப்பத்தின் முன்னேற்றத்தை நீங்கள் எளிதாகக் கண்காணிக்கலாம்.  

8 /10

EPFO அமைப்பு, சரிபார்ப்பு/கூட்டு விருப்பத்திற்கான ஆன்லைன் விண்ணப்பங்களைத் தாக்கல் செய்வதற்கான செயல்பாட்டினை உருவாக்கியது. 2023, பிப்ரவரி 26ம் தேதி அன்று உறுப்பினர்கள்/ஓய்வூதியதாரர்கள்/முதலாளிகளுக்கு ஆன்லைன் வசதி நீட்டிக்கப்பட்டது. பின்னடர் இது ஜூலை 11, 2023 வரை நீட்டிக்கப்பட்டது.  

9 /10

கூட்டு விண்ணப்பத்திற்கான காலக்கெடு: முதலாளிகள் அதிக ஓய்வூதியத்திற்கான கூட்டு விண்ணப்பத்தை அனுப்புவதற்கான தேதி செப்டம்பர் 30, 2023 வரை நீட்டிக்கப்பட்டது, பின்னர் மே 31, 2024 வரை நீட்டிக்கப்பட்டது.

10 /10

அதிக ஓய்வூதியம்: பின்னர், அதிக ஓய்வூதியத்திற்கான விண்ணப்பங்களை ஜனவரி 31, 2025 க்குள் அனுப்ப அனைத்து முதலாளிகளுக்கும் கடைசி வாய்ப்பு வழங்கப்பட்டது.