பழைய தங்க நகையை விற்க திட்டமா... சரியான விலை கிடைக்க உடனே இதை செய்யுங்க!

Gold Jewelry Hallmarking: உங்களின் பழைய தங்க நகைகளுக்கு ஏற்ற விலை கிடைக்க, அதற்கு நீங்கள் ஹால்மார்க்கிங் செய்ய வேண்டும். பழைய நகைகளுக்கு ஹால்மார்கிங் செய்வது எப்படி என்பதை இங்கு காணலாம்.

916 ஹால்மார்க் முத்திரை கொண்ட 22 கேரட் தங்க நகைகளுக்கே நகை கடைகளில், தங்கத்தின் சந்தை விலை கிடைக்கும். மற்ற 18 கேரட், 14 கேரட் தங்களுக்கு போதிய அளவில் விலை கிடைக்காது. பழைய நகைகளில் BIS ஹால்மார்க் முத்திரை இருக்காது. எனவே, நீங்கள் உங்கள் தங்க நகை எத்தனை கேரட் என்பதை கண்டறிந்து ஹால்மார்க்கிங் செய்ய வேண்டியது அவசியமாகும்.

 
1 /8

தங்கம் வாங்குவது வீட்டிற்கு நல்லது என்ற நம்பிக்கை பல ஆண்டுகளாக இந்திய மண்ணில் நீடித்து வருகிறது. பெரும்பான்மையானோர் அதனை பின்பற்றி வருகின்றனர். ஏனென்றால், தங்கத்தின் மதிப்பும் ஒவ்வொரு ஆண்டும் உயர்ந்து வருகிறது. தேவைப்படும் நேரத்தில் தங்கத்தை அடமானம் வைத்தோ, விற்றோ உங்களின் தேவையை பூர்த்தி செய்துகொள்ளலாம்.   

2 /8

அதேபோல், தங்க நகைகள் பழையதாகிவிட்டாலும், அதனை விற்று, அதில் வரும் பணத்தை வைத்து புதிய டிசைன்களில் நகைகள் வாங்கும் பழக்கத்தையும் சிலர் வைத்துள்ளனர். ஆனால், பழைய நகைகளில் இருக்கும் பெரிய பிரச்னையே ஹால்மார்க்கிங் தான். ஆம், பழைய தங்க நகைகள் பெரும்பாலும் ஹால்மார்க் செய்யப்பட்டிருக்காது.  

3 /8

தற்போது தங்க நகைகள் அனைத்தும் ஹால்மார்க் செய்யப்பட்டு வருகிறது. பழைய நகைகளில் ஹால்மார்க் இல்லை என கூறி, விலையை குறைக்கும் வழக்கமும் சில நகைக்கடைகளில் இருக்கிறது. எனவே, இந்த மோசடியில் சிக்காமல் தப்பிப்பதற்கு ஒரு வழி இருக்கிறது.

4 /8

அதாவது, உங்களின் பழைய நகைகளை முதலில் ஹால்மார்க்கிங் செய்ய வேண்டும். இதன்மூலம், உங்கள் தங்கம் எத்தனை கேரட் என்பதை கண்டறிந்து, அதற்கு ஏற்ற விலையை நீங்கள் பெறலாம். இதுகுறித்து இங்கு விரிவாக காணலாம்.

5 /8

ஹால்மார்க்கிங் என்பது தங்கத்தின் தரத்தை குறிப்பதற்கான ஒரு சான்றாகும். BIS எனப்படும் இந்திய தர நிர்ணய ஆணையம் தான் தற்போது தங்கத்தின் தரத்தையும் ஆய்வு செய்து, அதற்கு ஹால்மார்க் முத்திரை வழங்கி வருகிறது. நகைகளில் முக்கோண வடிவில் BIS ஹால்மார்க் முத்திரை இருக்கும். அப்படி இருந்தால் அந்த நகை, சுத்தமான தங்கத்தால் செய்யப்பட்டது என்பது உறுதியாகும்.

6 /8

எனவே, முதலில் இந்திய தர நிர்ணய ஆணையத்தின் இணையதளத்திற்கு முதலில் செல்ல வேண்டும், அதில் தங்கத்தின் கேரட் அளவை அளக்கும் கருவி இருக்கும் BIS சென்டர் உங்களுக்கு அருகில் எங்கிருக்கிறது என்பதை அதில் பார்க்கலாம். 

7 /8

அந்த இயந்திரம் தங்கத்தின் மூன்று அடுக்குகள் வரை ஆராய்ந்து, அந்த தங்கம் எத்தனை கேரட் என்பதை கண்டுபிடிக்கும். பின்னர் நீங்கள் தங்க நகையில் BIS ஹால்மார்க் முத்திரையையும் பதித்துக்கொள்ளலாம். இதற்கு ஒரு நகைக்கு 45 ரூபாய் வசூலிக்கப்படும்.

8 /8

22 கேரட் தங்கம் என்றால் அதில் 91.66% தங்கம் இருக்கும், 18 கேரட் தங்கம் என்றால் 75% தங்கம் இருக்கும், 14 கேரட் தங்கம் என்றால் 58.5% தங்கம் இருக்கும். அதாவது, தங்க நகைகள் செய்வதற்கு அதில் மற்ற உலோகங்களும் சேர்க்கப்படும். உங்கள் நகைகளில் தங்கத்தின் அளவு எத்தனை கேரட் உள்ளதோ அதற்கேற்பவே பழைய நகைகளுக்கு, நகை கடைகளில் விலை கிடைக்கும்.