Free Sewing Machine Scheme Tamil Nadu | பெண்கள் இலவச தையல் எந்திரம் பெற விண்ணபிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
Tamil Nadu Government Free Sewing Machine | தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கும் இலவச தையல் எந்திரம் யாரெல்லாம் பெறலாம்? இந்த திட்டத்துக்கு எப்படி விண்ணப்பிப்பது? என்பது உள்ளிட்ட முக்கிய தகவல்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
தமிழ்நாடு அரசு பெண்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த திட்டங்களை ஒவ்வொரு மாவட்டத்திலும் செயல்படுத்துவதை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் கவனிப்பார்கள். பயனாளிகளை தேர்வு செய்து அவர்களிடம் திட்டத்தை கொண்டு சேர்ப்பதில் இவர்களே முதன்மை பணியாளர்களாகவும் இருப்பார்கள்.
அதனால், தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் திட்டங்களை ஒவ்வொரு மாவட்டத்திலும் செயல்படுத்துவது குறித்து மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பார்கள். அதன்படி பெண்களுக்கான இலவச தையல் எந்திரம் திட்டத்துக்கான அறிவிப்பை சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இந்த திட்டத்துக்கு தகுதியான பெணகள் விண்ணப்பித்து இலவச தையல் எந்திரம் பெற்றுக் கொள்ளலாம்.
சென்னை மாவட்ட ஆட்சியர் இப்போது வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் முன்னாள் படைவீரரின் மனைவி, கைம்பெண் மற்றும் திருமணமாகாத மகள்கள் இருந்தால் இந்த திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம். அவர்களுக்கு தமிழ்நாடு அரசின் இலவச தையல் எந்திரம் வழங்கப்படும்.
இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ள அறிவிப்பில், முன்னாள் படைவீரரின் மனைவி / கைம்பெண் மற்றும் திருமணமாகாத மகள்கள் இலவச தையல் இயந்திரம் பெற்றிட விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார்.
மாண்புமிகு மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் திருமதி.என்.கயல்விழிசெல்வராஜ் அவர்கள் 26.06.2024 அன்று 2025-ம் ஆண்டிற்கான பொதுத்துறை மானியக் கோரிக்கையின் போது முன்னாள் படைவீர் நலன் சார்ந்த அறிவிப்பினை வெளியிட்டார்கள்.
அதன்படி, முன்னாள் படைவீரரின் மனைவி / கைம்பெண் மற்றும் திருமணமாகாத மகள்கள் அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் குறைந்தது மூன்று மாத தையற் பயிற்சி சான்று பெற்றிருக்க வேண்டும்.
அப்படி பயிற்சி பெற்றவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்குடன் பயிற்சி வழங்கிய நிறுவனத்தால் இலவச தையல் இயந்திரம் வழங்கப்படாத நிலையில் ஒரு முறை மட்டும் தையல் இயந்திரம் பெற்றுக் கொள்ளலாம். இந்த அறிவிப்பை அமைச்சர் ஏற்கனவே வெளியிட்டுள்ளார்.
மேலும், இது தொடர்பான விவரங்களுக்கு சென்னை, சைதாப்பேட்டையில் உள்ள உதவி இயக்குநர், முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தை நேரிலோ அல்லது தொலைபேசி வாயிலாக 044-22350780 தொடர்பு கொண்டு பயனடையுமாறு சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ரஷ்மி சித்தார்த் ஜகடே கூறியுள்ளார்.