கும்ப ராசியில் உருவாகும் திரிகிரக யோகத்தினால், சில ராசிகளுக்கு வேலையில், வாழ்க்கையில், தொழிலில் பொன்னான வாய்ப்புகள் கிடைக்கும் என்றிம், இடனால் வருமானம் பெருகி, பொருளாதார நிலை மேம்படும் எனவும் ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.
சனி பெயர்ச்சி மார்ச் மாதம் நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன்னதாக, பிப்ரவரி நடுப்பகுதியில் சூரியன், புதன் மற்றும் சனி பகவான் இணைந்து திரிகிரக யோகம் உருவாகிறது, இதனால் ஜாக்பாட் பலனகளை பெறும் 5 ராசிகளை அறிந்து கொள்ளலாம்.
திரிகிரக யோகம் 2025: பிப்ரவரி 11 ஆம் தேதி, புதன் சனியின் ராசியான கும்பத்திற்கு பெயர்ச்சியாகிறார். மறுநாள் மாசி மாத பிறப்பில், சூரியனும் கும்பத்தில் நுழைகிறார். சனி ஏற்கனவே, கும்ப ராசியில் உள்ள நிலையில், சனி, புதன், சூரியன் மூன்றும் இணைந்து திரிகிரக யோகம் உருவாகிறது.
அதிர்ஷ்ட ராசிகள்: ஜோதிடத்தில் அதி முக்கியத்துவம் பெற்ற, சூரியன், சனி மற்றும் புதன் போன்ற மூன்று முக்கிய கிரகங்கள் ஒரே ராசியில் ஒன்றாக மாறுவது மிகவும் அற்புதமான தற்செயல் நிகழ்வாக கருதப்படுகிறது. இந்த சக்தி வாய்ந்த யோகத்தின் பலன் காரணமாக 5 ராசிக்காரர்களுக்கு, வேலையில், வாழ்க்கையில், தொழிலில் முன்னேற்றங்களும், வாய்ப்புகள் காத்திருக்கின்றன.
மேஷ ராசிக்காரர்களுக்கு கும்பத்தில் உருவாகும் திரிகிரக யோகம் நிதி விஷயங்களில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பணியிடத்தில் பாராட்டு, பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு. நண்பர்கள் மூலமாகவும் ஆதாயம் அடைவீர்கள். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். புதிய வாய்ப்புகளைப் பயன்படுத்தி உங்கள் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள்.
ரிஷப ராசியினருக்கு திரிகிரக யோகம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பணியிடத்தில் மரியாதை பெறுவீர்கள். வேலையில் இருப்பவர்களுக்கு மரியாதை கூடும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வேலை தேடுதல் முடியும். புதிய வீடு கிடைக்க வாய்ப்பு உண்டு. உங்கள் வீட்டிற்கு புதிய வாகனமும் வரலாம். நிதி நிலைமை மேம்படும், வாழ்க்கையில் மகிழ்ச்சி நிலவும்.
மிதுன ராசியினருக்கு புதன், சூரியன், சனி ஆகிய கிரகங்களின் திரிகிரக யோகம் காரணமாக பயண வாய்ப்புகள் உண்டு. இதனால், ஆதாயமும் கிடைக்கும். மனநலம் நன்றாக இருக்கும். வேலையில் இருப்பவர்கள் பெரிய பொறுப்புகளைப் பெறலாம். ஆன்மீக பயணத்தின் போது நீங்கள் ஒரு முக்கியமான நபரை சந்திக்கலாம். அவர் எதிர்காலத்தில் உங்களை வழிநடத்துவார். உங்கள் தொழிலில் சிறப்பான வாய்ப்புகளைப் பெறுவீர்கள்.
கன்னி ராசிக்காரர்களுக்கு கும்பத்தில் உருவாகும் மூன்று கிரகங்களின் சேர்க்கை திடீர் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளை உருவாக்குகிறது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். உயர் அதிகாரிகள் உங்களிடம் அன்பாக நடந்து கொள்வார்கள். உறவுகள் வலுவடையும். எதிரிகளுக்கு பாடம் புகட்ட முடியும். உங்கள் வேலையில், உங்கள் நிலையை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்லும் நேரம் இது. உங்களின் மதிப்பும் மரியாதையும் அதிகரித்து முன்னேறுவீர்கள்.
தனுசு ராசிக்காரர்கள் கும்பத்தில் உருவாகும் மூன்று கிரகங்களின் சேர்க்கையினால் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவார்கள். புதிய வேலைக்குத் தயாராகும் நபர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். தற்போதையை வேலையிலும், கடின உழைப்பிற்கான அங்கீகாரம் கிடைக்கும். இந்த நேரம் உங்களுக்கு மிகவும் சாதகமானது. அதை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். நிதி விஷயங்களில் உங்களுக்கு அதிக லாபம் கிடைக்கும். முன்பு செய்த முதலீடுகள் லாபகரமாக இருக்கும்.
சனி பெயர்ச்சி 2025: தற்போது கும்பத்தில் வீற்றிருக்கும் சனி பகவான் மார்ச் 29ம் தேதி மீன ராசிக்கு பெயர்ச்சியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சனி பெயர்ச்சி, ஜோதிடத்தில், மிக முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு. சனி பெயர்ச்சியின் அடிப்படையில் தான் ஏழரை நாட்டு சனி, ஜென்ம சனி, அஷ்டம் சனி, பாத சனி, விரய சனி ஆகியவை தீர்மானிக்கப்படுகின்றன.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.