மூளையின் ஆற்றலை காலி செய்யும்... சில உணவுகளும்... சில பழக்கங்களும்

நமது மூளை எப்போதும் ஆற்றலுடன் செயல்பட, அதனை நாம் நன்றாக கவனித்துக் கொள்வது அவசியம். சில ஆரோக்கியமற்ற உணவுகள் மற்றும் பழக்கவழக்கங்கள் நம் மூளையின் ஆற்றலை காலி செய்வதோடு, அதில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும்.

மூளைக்கு தீங்கு விளைவிக்கும் பழக்கவழக்கங்கள்: நம் அன்றாட வாழ்க்கையில், நம்மை அறியாமல் செய்யும் சில விஷயங்கள், கடைபிடிக்கும் பழக்கங்கள், நமது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பதோடு மட்டுமல்லாமல், மூளையை படிப்படியாக தாக்கி, அதனை மந்தமாக்கி விடுகிறது.

1 /7

நமது உடலின் மிக முக்கியமான பகுதி நமது மூளை. இது நமது சிந்தனை, உணர்ச்சிகளை கட்டுப்படுத்துகிறது. மூளையின் கட்டளைப்படி தான் உடல் இயங்குகிறது. எனவே, நாம் மன ஆரோக்கியத்தை நன்கு கவனித்துக் கொள்வது அவசியம். எனவே, மூளை ஆரோக்கியத்திலும் செயல் திறனிலும் பாதிப்பை ஏற்படுத்தும், சில பழக்கவழக்கங்களைத் தவிர்க்க வேண்டும்.  

2 /7

நமது மூளைக்கு தூக்கம் மிகவும் முக்கியமானது. நாம் ஆழ்ந்து தூங்கும்போது, ​​​​நமது மூளை தன்னைத்தானே சுத்தம் செய்து கொண்டு, ரீசார்ஜ் ஆகிறது. தூக்கமின்மை நமது மூளையின் செயல்திறனைக் குறைத்து, நினைவாற்றல், செறிவு மற்றும் கற்றல் திறனை பாதிக்கும்.  

3 /7

மன அழுத்தம் நமது மூளைக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். நாம் மன அழுத்தத்திற்கு ஆளாகும்போது, ​​​​நமது உடல் கார்டிசோல் என்ற ஹார்மோனை வெளியிடுகிறது. கார்டிசோல் நமது மூளையின் செயல் திறனை பாதிக்கும். இது நினைவாற்றல் மற்றும் கற்றல் திறனைக் குறைக்கும்.

4 /7

ஆரோக்கியமற்ற உணவுகள்: பதப்படுத்தப்பட்ட உணவுகள், துரித உணவுகள் நம் மூளைக்கு நல்லதல்ல. நமது மூளைக்கு தீங்கு விளைவிக்கும்அதிக அளவு கொழுப்பு மற்றும் சர்க்கரை தான் இதில் உள்ளது. நொறுக்குத் தீனிகளை அதிகம் உண்பது நமது மூளையில் வீக்கத்தை உண்டாக்கும். நினைவாற்றல் மற்றும் கற்றல் திறனைக் குறைக்கும்.

5 /7

தனிமை என்பது நமது மூளையை மிகவும் பாதிக்கும். தனிமையில் இருக்கும்போது மூளை சரியாக இயங்காது. தனிமை நமது மூளையில் மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வை ஏற்படுத்தும். இது நினைவாற்றல் மற்றும் கற்றல் திறனைக் குறைக்கும். எனவே, நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுங்கள்.  

6 /7

மூளை எப்போதும் ஆற்றலுடன் இயங்க, தினமும் இரவு 7-8 மணி நேரம் தூங்குங்கள். மன அழுத்தத்தைத் தவிர்க்க, யோகா, தியானம் அல்லது உடற்பயிற்சி செய்யுங்கள். ஆரோக்கியமற்ற உணவுகளை உண்பதை தவிர்த்து, ஆரோக்கியமான உணவுகளை உண்ணுங்கள்.

7 /7

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.