Favourite Zodiac Signs of Lord Shani: சனி பகவானுக்கு பிடித்த ராசிகள் எவை? யார் மீது அவர் அதிக கருணை காட்டுகிறார்? உங்கள் ராசியும் இதில் உள்ளதா?
Favourite Zodiac Signs of Lord Shani: சனி பகவான் அனைத்து கிரகங்களிலும் மிக முக்கியமான கிரகமாகவும், மிக மெதுவாக நகரும் கிரகமாகவும் உள்ளார். மனிதர்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப பலன்களை அளிக்கும் அவர் நீதியின் கடவுள் என அழைக்கப்படுகிறார். அனைத்து ராசிகளின் மீதும் அவர் சமமான அருளை பொழிந்தாலும் சில ராசிகள் அவருக்கு பிடித்தமான ராசிகளாக இருக்கின்றன. இவர்கள் மீது சனி கூடுதல் கருணை காட்டுகிறார். அந்த ராசிகளை பற்றி இங்கே காணலாம்.
அனைத்து கிரகங்களிலும் மிக முக்கிய கிரகமாக கருதப்படுபவர் சனி பகவான். தற்போது கும்ப ராசியில் இருக்கும் சனி பகவான் மார்ச் மாதம் மீன ராசியில் பெயர்ச்சி ஆவார்.
நீதியின் கடவுளான சனி பகவானுக்கு அனைவரும் ஒன்றே. அனைத்து ராசிக்காரர்கள் மீதும் அவர் சமமான அருளை பொழிகிறார். எனினும், சில ராசிக்காரர்கள் அவருக்கு மிகவும் பிடித்தவர்களாக இருக்கிறார்கள். சனி பெயர்ச்சி, ஏழரை சனி காலத்திலும் இவர்கள் பெரிய பிரச்சனைகளை சந்திப்பதில்லை. அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்கள் மீது எப்போதும் சனி பகவானின் சிறப்பு அருள் இருக்கின்றது. இவர்கள் கடின உழைப்பாளிகள். சனியின் அருளால், அவர்கள் தங்கள் அனைத்து வேலைகளிலும் வெற்றி பெறுகிறார்கள். மேலும் அவர்களின் வாழ்க்கையில் பெரிய நெருக்கடிகள் எதுவும் ஏற்படுவதில்லை. ரிஷப ராசிக்காரர்கள் செல்வத்தையும் சொத்தையும் பெருக்கி நிலையான வாழ்க்கை வாழ்வார்கள்.
துலாம்: துலாம் ராசிக்காரர்கள் சனி பகவானுக்கு மிகவும் பிடித்தமானவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் நீதிமான்கள். எப்போதும் சமூகத்தின் நலனுக்காகவே பாடுபடுகிறார்கள். அவர்களின் இயல்பு சமநிலையானது, இனிமையானது. சனி பகவான் அவர்களது கடின உழைப்பையும் நேர்மையையும் பாராட்டுகிறார். சனி பகவானின் அருளால், அவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாகவும் வளமாகவும் இருக்கிறது. இவர்களை ஏழரை சனி காலத்திலும் சனி பகவான் காத்து ரட்சிக்கிறார்.
கும்பம்: கும்ப ராசிக்காரர்கள் சனி பகவானின் அருளால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். இவர்கள் பெரும்பாலும் அறிவுசார்ந்தவர்களாகவும் சமூகத்தில் நேர்மறையான மாற்றத்தைக் கொண்டுவர பாடுபடுகிறவர்களாகவும் இருக்கிறார்கள். சனி பகவானின் அருளால் அவர்கள் நிதி மற்றும் மன வளத்தைப் பெறுகிறார்கள். அவர்களுக்கு, சனி பகவானின் அருள் குறிப்பாக தொழில் மற்றும் வணிகத்தில் வெற்றியைக் கொண்டுவருகின்றன. சனி பெயர்ச்சி காலத்திலும் இவர்களுக்கு பெரிய அளவில் சோதனைகள் வருவதில்லை.
மீனம்: மீன ராசிக்காரர்கள் எப்போதும் சனி பகவானின் ஆசிகளைப் பெறுகிறார்கள். இவர்கள் இயல்பாகவே நேர்மையானவர்கள், விவேகமுள்ளவர்கள். சனி பகவானின் அருள் அவர்களுக்கு எல்லாத் துறைகளிலும் வெற்றியையும் செழிப்பையும் தருகிறது. அவர்களின் கடின உழைப்பால் பெரும்பாலும் சனி பகவானின் அன்பைப் பெறுகிறார்கள்.
சனி பகவான் அனைத்து கிரகங்களிலும் மிகவும் மெதுவாக நகரும் கிரகமாக இருக்கிறார். இவர் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல சுமார் 2 1/2 ஆண்டுகள் ஆகும். ஆகையால், இவரது தாக்கமும் ராசிகளில் அதிகமாக இருக்கும்.
சனி பெயர்ச்சி ஆகி 3 கட்டங்களாக ராசிகளில் சஞ்சரிக்கிறார். ஏழரை சனியின் மூன்று கட்டங்கள் உள்ளன. முதல் இரண்டரை ஆண்டுகள் விரய சனி என்றும், இரண்டாவது இரண்டரை ஆண்டுகள் ஜென்ம சனி என்றும் மூன்றாவது இரண்டரை ஆண்டுகள் பாத சனி என்றும் அழைக்கப்படுகின்றன.
சனி பகவானின் அருளை பெற சனி சாலிசா, அனுமான் சாலிசா போன்றவற்றை பாராயணம் செய்யலாம். இவை தவிர, ‘நீலாஞ்ஜன ஸமாபாஸம், ரவிபுத்ரம் யமாக்ரஜம்; ச்சாயா மார்த்தாண்ட ஸம்பூதம், தம் நமாமி சனைச்சரம்’ என்ற ஸ்தோத்திரத்தையும் தினமும் சொல்லலாம்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.