சீரக தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து இங்கு பார்க்கலாம்.
தினமும் காலை எழுந்த உடன் வெறும் வயிற்றில் சீரக் தண்ணீர் குடித்தால் நமது உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கிறது. அப்படி என்ன நன்மைகள் கிடைக்கிறது. வெறும் வயிற்றில் சீரக தண்ணீர் குடித்தால் எதற்கு நல்லது என்பதை இத்தொகுப்பில் பார்க்கலாம்.
சீரகத்தில் இயற்கை எஞ்சிம்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இவை ஜீரண சக்தியை அதிகரிக்க உதவுகிறது. அதேபோல் வயிற்றுப்போக்கையும் சீராக்க உதவுகிறது.
தங்களது எடையை குறைக்க நினைப்பவர்கள் தினமும் காலை எழுந்தவுடன் சீரக குடிக்கலாம். இதன் மூலம் எடை குறையும்.
தைமோகுவினோன் போன்ற ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்த ஜீரக நீர், முகப்பரு வீக்கத்தை குறைக்க உதவுகிறது. அதேபோல் சருமத்தை பளபளப்பாக வைக்க சீரக தண்ணீர் குடிக்கலாம்.
சீரகம் வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து நிறைந்தவை. இதனை உட்கொள்வதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. அதன் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் தொற்றுநோய்களை திறம்பட எதிர்த்து போராட உதவுகிறது.
ஜீராவின் காரமினேட்டிவ் பண்புகள் வாயு, அமிலத்தன்மை மற்றும் அஜீரணத்தை குறைக்க உதவுகிறது. மேலும், நாள் முழுவதும் உங்களை உற்சாகமாக வைத்திருக்கும்.
மெக்னீசியம் போன்ற எலக்ட்ரோலைட்டுகளை கொண்டுள்ளது சீரகம். இதனை தினமும் தண்ணீர் கலந்து குடிப்பதால் நீரேற்ற அளவை பராமரிக்க உதவுகிறது.
முதலில் ஒரு கிளாஸ் தண்ணீர் எடுத்து கொண்டு அதில் 2 ஸ்பூன் சீரகத்தை போட்டு இரவு முழுவதும் ஊற வையுங்கள். காலை அந்த தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து ஆறியபின் வடிகட்டி குடிக்க வேண்டும். (பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான மற்றும் வீட்டு வைத்தியங்கள் சார்ந்து எழுதப்பட்டவை ஆகும். இதனை பின்பற்றும் முன் வாசகர்கள் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது. இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிப்படுத்தவில்லை)