பிட்ரூட்: பல்வேறு எண்ணிலடங்கா நன்மைகள் பீட்ரூடில் நிறைந்துள்ளன. இதனை வைத்து நீங்கள் வீட்டிலேயே உங்கள் முகத்தைப் பராமரிக்கலாம். இது உடலில் இரத்தத்தை அதிகரிக்கச் செய்கிறது. மேலும் இது உடல் ஆரோக்கியம் மட்டுமன்றி முகத்தின் ஆரோக்கியத்தையும் பேணிக்காக்கிறது.
பீட்ரூட்டில் வைட்டமின் பி9 உள்ளன. இது செல்கள் வளரவும் செயல்படவும் ஊக்குவிக்கிறது. இதில் உள்ள ஃபோலேட் இரத்த நாளங்களுக்கு ஏற்படும் சேதத்தைக் கட்டுப்படுத்திப் பாதுகாப்பு அளிக்கிறது. பீட்ரூட் வைத்து சருமத்தை ஆரோக்கியமாகப் பராமரிப்பது எப்படி என்பதை இங்குத் தெரிந்துகொள்வோம்.
பேஸ் மாஸ்க்: இதனைப் பயன்படுத்துவதால் சூரிய ஓளியின் கருமைகள் முகத்திலிருந்து நீங்கும் மற்றும் சருமத்தின் நிறம் மேம்படும்.
எந்தவொரு பக்கவிளைவுகளும் இல்லாமல் வீட்டிலேயே வாரத்திற்கு ஒருமுறை அல்லது இரண்டு முறை பீட்ரூட்டை சருமத்திற்கு ஃபேஸ் பேக் போன்று பயன்படுத்தலாம்.
பீட்ரூட் மற்றும் அரிசி மாவு: அரிசி மாவுடன் பீட்ரூட் சேர்த்து இரண்டையும் நன்றாக அரைத்து பேஸ்ட் போன்று உருவாக்கவும். பிறகு 10 அல்லது 15 நிமிடங்கள் கழித்து முகத்தைக் குளிர்ந்த நீரில் கழுவவும். இது சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்குகிறது.
பீட்ரூட் மற்றும் அரிசி மாவு இரண்டும் முகத்தில் இருக்கும் எண்ணெய் பிசுக்களை நீக்குகிறது. கரும்புள்ளிகளைக் குறைக்கிறது. மேலும் சருமத்தை பளபளப்பாக்குகிறது.
பீட்ரூட் மற்றும் அரிசி மாவு பேஸ்ட் தயாரிக்கும் முறை: ஒரு பீட்ரூட், இரண்டு கப் அரிசி மாவு, இரண்டு தேக்கரண்டி பால் மற்றும் இரண்டு கப் அரிசி தண்ணீர்.
பீட்ரூடை நன்றாக நருக்கிய பின் அதனை அரைத்து தேவையான பொருட்களுடன் சேர்த்துக் கலக்கிக்கொள்ளவும்.
தயார் செய்த சாற்றை நன்றாக வடிகட்டி ஒரு பாத்திரத்தில் பால் மற்றும் அரிசி மாவு இரண்டையும் கலந்து பேஸ்ட் செய்து கொள்ளவும்.
பீட்ரூட் மற்றும் அரிசி மாவு பேஸ்ட்: இதனை சருமத்திற்குப் பயன்படுத்தி வந்தால் நிறம் மேம்படும். கரும்புள்ளிகள், முகப்பருக்கள், சுருக்கம், கருவளையம் உள்ளிட்ட அனைத்தும் நீங்கும். மேலும் சருமம் ஆரோக்கியம் பெறும் மற்றும் முகம் பிரகாசமாக இருக்கும்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.