பொதுவாக கணவன்-மனைவி உறவில் சண்டை வரும் என்றாலும், சில விஷயங்கள் விரிசலை அதிகமாக்கும். எனவே விரிசலை ஏற்படுத்தும் அந்த 5 தவறுகளை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
கணவனுக்கும் மனைவிக்கும் இடையிலான பிணைப்பு மறுக்கமுடியாத தனித்துவமானது. இருப்பினும், பலமான உறவுகள் கூட சில நேரங்களில் தடுமாறலாம். பெரும்பாலும் தவறான புரிதல்கள் சண்டையை அதிகமாக்கும்.
கணவன்-மனைவி இடையேயான உரையாடல்கள் குறையும் போது இடைவெளி வளரத் தொடங்குகிறது. உரையாடல் இல்லாமை தவறான புரிதல்களுக்கு வழிவகுக்கும். எனவே தினசரி சிறிது நேரம் இருவரும் அமர்ந்து பேசுவது நல்லது.
கணவன்-மனைவிகள் தங்கள் தேவைகளையும் உணர்ச்சிகளையும் உள்ளுணர்வாகப் புரிந்து கொள்ள விரும்புகிறார்கள், ஆனால் இது நடக்காதபோது ஏமாற்றம் மற்றும் கோபத்தின் உணர்வுகள் எழலாம். எனவே ஏமாற்றம் ஏற்பட்டால் அதனை பேசி தீர்த்து கொள்ள வேண்டும்.
கணவன் மனைவி உறவில் மூன்றும் நபர் நுழைந்தாலும் பிரச்சனைகள் வரலாம். எனவே சண்டை என்றாலும் அதனை இருவருக்குள் பேசி முடிக்க வேண்டும். வெளியாட்களை சமரசம் பேச வரவைக்க கூடாது.
எந்தவொரு உறவிலும் தனிப்பட்ட இடம் இருக்க வேண்டும். கணவன் அல்லது மனைவி ஒருவரையொருவர் கட்டுப்படுத்த முயற்சிக்க கூடாது. இது உறவை பாதிக்கும்.
ஒவ்வொருவரின் வாழ்க்கை முறை வித்தியாசமானது. எனவே உங்கள் கணவன் அல்லது மனைவியை மற்றவருடன் ஒப்பிட்டு பேச கூடாது. இது உங்கள் உறவில் கசப்பை ஏற்படுத்தும்.