10 Key Announcements Budget 2025: வருமான வரி விலக்கு முதல் பெண்களுக்கு நிதி உதவி வரை மத்திய பட்ஜெட்டில் எதிர் பார்க்கப்படும் முக்கியமான 10 விஷயங்கள் என்னென்ன? முழு விவரம்.
Budget 2025 Latest Updates: வரும் 2025-2026 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கல் செய்ய உள்ள நிலையில், இந்த பட்ஜெட்டில் வெளியாக உள்ள முக்கிய அறிவிப்புகள் குறித்து மக்களிடையே கவனம் பெற்றுள்ளன.
நாட்டின் உள்கட்டமைப்பு, விவசாயம், எம்எஸ்எம்இகள் (MSMEs), ரயில்வே, சாலைகள் மற்றும் பாதுகாப்பு துறை மற்றும் பிற முக்கியமான துறைகளை மேம்படுத்த உதவும் அறிவிப்புகள் 2025-26 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் வரும் என்று எதிர் பார்க்கப்படுகின்றன. இந்த 2025 பட்ஜெட்டில் கொண்டு வரப்படும் 10 விஷயங்களை குறித்து பார்ப்போம்.
கடந்த வருடம் பட்ஜெட்டில் வருமான வரி மாற்றப்படவில்லை. இந்த வருடம் பட்ஜெட்டில் வருமான வரையில் பழைய முறையை நீக்குவதற்கான முதல் கட்ட நடவடிக்கைகள் அதாவது சில கட்டுப்பாடுகள் கொண்டு வரப்படலாம். பழைய வரி விதிப்பு முறை கொஞ்சம் கொஞ்சமாக நீக்கப்படலாம். இதில் நீங்கள் ஆண்டு வருமானம் 2.5 லட்சத்திற்கு வரி இல்லை. ஆனால் 2.5 லட்சத்திலிருந்து 5 லட்சம் வரை வருமானம் இருந்தால் 5% வரி இருக்கும். 5 லட்சத்திலிருந்து 10 லட்சம் வரை வருமானம் ஈட்டினால் 20% வரியும், 10 லட்சத்திற்கு மேல் வருமானம் ஈட்டினால் 30% வரியும் வசூலிக்கப்படும். இதில் 80C மற்றும் 80D போன்ற சலுகைகள் மூலம் வரியில் கொஞ்சம் விலக்கு பெற முடியும். அதாவது ரூ.7 லட்சம் வரை வருமானம் வாங்குபவர்கள் 80சி, 80டி போன்ற சலுகைகள் மூலம் இன்னும் அதிக விலக்குகளை பெற முடியும். இந்த வரி விதிப்பில் கடந்த முறை எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
புதிய வரி முறையில் சலுகைகள் அதிகரிக்கப்படலாம். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-2026 பட்சத்தில் வருமான வரி ஸ்லாப்பில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை செய்வார் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.10 லட்சம் வரை சம்பளம் வாங்கும் நபர்கள் வரி செலுத்துவதில் இருந்து விலக்கு பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. புதிய மாற்றம் கொண்டு வந்தால், ரூ.10 லட்சம் வரை வருமானம் ஈட்டினால் வரி கிடையாது. ரூ.15 முதல் ரூ.20 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 25% வரி ஸ்லாப்பை அறிமுகப்படுத்தப்படு எனத் தகவல். தற்போது நடைமுறையில் உள்ள புதிய வருமான வரிமுறையில் ரூ.75 லட்சத்திலிருந்து ரூ.10 லட்சம் வரை வருமானம் ஈட்டினால் 15% வரி இருக்கும். அதை மொத்தமாக விலக்கி அரசு சட்டம் கொண்டு வரலாம் என்கிறார்கள்.
இந்தமுறை யூனியன் பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கு அதிக ஒதுக்கீடு இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. புதிய வந்தே பாரத் சேவைகள், புதிய நீண்ட தூர சேவைகள், ரயில்வே சொத்துக்களை மறுசீரமைத்தல் மற்றும் உள் கட்டமைப்பு மேம்பாடு ஆகியவற்றில் மத்திய அரசு கவனம் செலுத்தும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. 2023-24 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் ரயில்வே அமைச்சகத்துக்கு ரூபாய் 24,0000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
தமிழ்நாடு மட்டுமின்றி நாடு முழுவதும் புதிய எக்ஸ்பிரஸ்வே சாலைகள் அமைப்பது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 2024 நிலவரப்படி இந்தியாவில் மொத்தம் 5173 கி.மீ (3214 மைல்) தூரம் அதிவேக நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இவை பெரும்பாலும் ஆறு வழி அல்லது எட்டு வழிசாலைகள் ஆகும். இந்த நிலையில் பட்ஜெட்டில் புதிய எக்ஸ்பிரஸ்வே அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
செல்போன், டிவி போன்ற பொருட்களின் உற்பத்திக்கான உதிரி பாகங்கள் மீதான சுங்க வரி குறைப்பு செய்யப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. அதேபோல சைக்கிள், பொம்மைகளுக்கான இறக்குமதி வரி குறைக்கப்படலாம்.
அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலைகள் வெகுவாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது லித்தியம், பேட்டரி போன்றவற்றின் இறக்குமதி வரி குறைக்கப்படலாம்.
இஸ்ரே திட்டங்கள் தொடர்பான அறிவிப்புகள், புதிய விமான நிலையங்கள் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும் என்றும் எதிர் பார்க்கப்படுகிறது.
நாடு முழுவதும் மின்சார வாகனங்களுக்கான பேட்டரி சார்ஜிங் மையங்கள் அதிகரிக்கப்படுவது தொடர்பாக அறிவிக்கப்படலாம். அதேபோல் மின்சார வாகனங்களுக்கான சலுகைகள் அதிகரிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன.
பெட்ரோல், டீசல் விலை குறைப்பு தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம். அடுத்த இரண்டு ஆண்டுகளில் பெட்ரோலில் 20% எத்தனால் கலக்கும் இலக்கை மத்திய அரசு நெருங்கி வருகிறது. அதுமட்டுமில்லாமல் தற்போது டீசலில் ஐந்து சதவீதம் எத்தனாலை (ED-5) கலக்கும் புதிய திட்டத்தை மத்திய அரசாங்கம் கையில் எடுத்துள்ளது. இது தொடர்பாக பிரதமர் மோடி கடந்த வாரம் சம்பந்தப்பட்ட அனைத்து அமைச்சகத்துடன் ஆலோசனை கூட்டத்தை நடத்தியதாகக் கூறப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலை குறையும். பொதுவாக டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு அதிகரித்து பொருட்களின் விலை குறையும் எனக் கூறப்படுகிறது.
பெண்களுக்கான திட்டங்கள் கூடுதல் நிதி ஒதுக்கப்படலாம். மிஷன் சக்தி, மாத்ரு வத்னா யோஜனா மற்றும் ஜனனி சுரக்ஷா யோஜனா போன்ற பெண்களை மையமாகக் கொண்ட திட்டங்களுக்கு அதிக நிதி உதவி வழங்கப்பட வேண்டும் என்று வலுவான கோரிக்கை உள்ளது. இதற்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்படலாம்.