8வது ஊதியக்குழு: மாறும் Fitment Factor, தாறுமாறா எகிறப்போகும் ஊதியம், ஓய்வூதியம்

8th Pay Commission: 8வது ஊதியக்குழுவில் ஊதியம் மற்றும் ஓய்வூதியம் எவ்வளவு அதிகரிக்கும்? இது பல காரணிகளை சார்ந்துள்ளது. விரிவான கணக்கீட்டை இந்த பதிவில் காணலாம்.

8th Pay Commission: 8வது ஊதியக்குழுவிற்கான அறிவிப்பு வந்தது முதல், இதில் மாறக்கூடிய சம்பள கட்டமைப்பு, ஃபிட்மெண்ட் ஃபாக்டர், ஓய்வூதியம் ஆகியவை பற்றி அதிகம் பேசப்பட்டு வருகின்றது. சம்பள கணக்கீட்டில் ஃபிட்மெண்ட் ஃபாக்டரின் முக்கிய பங்கு இருக்கும்? புதிய ஃபிட்மெண்ட் ஃபாக்டர் எவ்வளவு இருக்கும்?

1 /11

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு சமீபத்தில் ஒரு மிக நல்ல செய்தி கிடைத்தது. நீண்ட நாட்களாக கோரிக்கை இருந்துவந்த நிலையில், இறுதியாக, மத்திய அரசு 8வது ஊதியக்குழுவை அமைப்பதற்கு ஒப்புதல் அளித்தது. இந்த அறிவிப்பு மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு மிகப்பெரிய நிவாரணத்தை அளித்துள்ளது.

2 /11

8வது ஊதியக்குழுவிற்கான அறிவிப்பு வந்தது முதல், இதில் மாறக்கூடிய சம்பள கட்டமைப்பு, ஃபிட்மெண்ட் ஃபாக்டர், ஓய்வூதியம் ஆகியவை பற்றி அதிகம் பேசப்பட்டு வருகின்றது. குறிப்பாக, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் ஃபிட்மெண்ட் ஃபாக்டரில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள்.

3 /11

ஃபிட்மெண்ட் ஃபாக்டர் என்பது ஒரு பெருக்குதல் காரணியாகும். பொதுவாக அப்போது இருக்கும் அடிப்படை ஊதியத்துடன் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் பெருக்கப்பட்டு புதிய அடிப்படை ஊதியம் தீர்மானிக்கப்படுகின்றது. ஆகையால், ஃபிட்மெண்ட் ஃபாக்டரின் அளவு மிக முக்கியமானதாக கருதப்படுகின்றது. 

4 /11

8வது ஊதியக்குழுவில் 2.86 என்ற ஃபிட்மெண்ட் ஃபாக்டர் பயன்படுத்தப்படலாம் என கூறப்படுகின்றது.  இது குறைந்தபட்ச அடிப்படை ஊதியத்தை ரூ.51,480 ஆக உயர்த்த வாய்ப்புள்ளது.

5 /11

தேசிய கூட்டு ஆலோசனைக் குழுவின் (NC-JCM) செயலாளர் ஷிவ் கோபால் மிஸ்ராவும்,  8வது ஊதியக் குழு 2.86 என்ற ஃபிட்மென்ட் ஃபாக்டரை பரிந்துரைக்கும் என்று கூறியதாக முன்னர் ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. NC-JCM என்பது அரசாங்கத்திற்கும் அரசு ஊழியர்களுக்கும் இடையிலான பிரச்சினைகளைத் தீர்க்கவும் பொது சேவைகளின் செயல்திறனை மேம்படுத்தவும் பேச்சுவார்த்தை மூலம் உதவும் ஒரு ஆலோசனை தளமாகும்.

6 /11

எனினும், ஃபிட்மென்ட் ஃபாக்டர் 2.86 ஆக அதிகரிக்க வாய்ப்பில்லை என்றும் ஒரு சாரார் கூறி வருகிறார்கள். 8வது ஊதியக் குழு ஊழியர்களின் அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படியை (DA) கருத்தில் கொண்டு பிட்மென்ட் ஃபாக்டரை நிர்ணயிக்கும் என்றும் கூறப்படுகின்றது. 8வது ஊதியக்குழுவில் பிட்மென்ட் ஃபாக்டர் 1.92 முதல் 2.86 -க்குள் இருக்க வாய்ப்புள்ளதாக பரவலான கருத்து உள்ளது.

7 /11

தற்போது, ​​மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி அடிப்படை சம்பளத்தில் 53% ஆக உள்ளது. ஜனவரி 1, 2026 க்குள் இது மேலும் இரண்டு முறை அதிகரிக்கப்படும். ஜனவரி 2025 மற்றும் ஜூலை 25 என இரு தவணைகளிலும் அகவிலைப்படி 3-4% அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

8 /11

டிஏ உயர்வை 3.5% என வைத்துக்கொண்டால், ஜனவரி 2026 -க்குள் 3.5%+3.5%=7%, அதாவது அகவிலைப்படி அடிப்படை ஊதியத்தில் மொத்தம் 60% -ஐ எட்டியிருக்கும்.

9 /11

ஊதிய உயர்வு: 7வது ஊதியக் குழுவில் 14% ஊதிய உயர்வு கிடைத்தது. அப்போது 2.57 ஃபிட்மெண்ட் ஃபாக்டர் பரிந்துரைக்கப்பட்டது. இதன் அடிப்படையில் குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் ரூ.7000 -இலிருந்து ரூ.18,000 ஆக உயர்ந்தது. தற்போது, 8வது ஊதியக்குழுவில் ஃபிட்மென்ட் ஃபாக்டர் 2.86 ஆக நிர்ணயிக்கப்பட்டால், குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் தற்போதுள்ள ரூ.18,000 -இலிருந்து ரூ.51,480 ஆக அதிகரிக்கும். அதாவது ரூ.33,480 உயர்வு இருக்கும்.. 

10 /11

ஓய்வூதியதாரர்களுக்கும் நல்ல உயர்வு இருக்கும். ஓய்வூதியம் சுமார் 30% அதிகரிக்கும். ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 2.86 ஆனால், குறைந்தபட்ச ஓய்வூதியம் தற்போதுள்ள ரூ.9,000 லிருந்து ரூ.25,740 ஆக ஏற்றம் காணும்.

11 /11

பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் 8வது ஊதியக்குழுவின் மூலம் கிடைக்கக்கூடிய ஊதிய உயர்வு அல்லது ஓய்வூதிய உயர்வுக்கு எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.