8வது ஊதியக்குழு: 108% ஊதிய உயர்வு, 60% அகவிலைப்படி... அரசு ஊழியர்களுக்கு அதிரடி அப்டேட்!

8th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களின் ஊதியம் ஜனவரி 2026 -இல் எவ்வளவு உயரும்? ஓய்வூதியம் எவ்வளவு அதிகரிக்கும்? முழு கணக்கீட்டை இங்கே காணலாம்.

 

8th Pay Commission: 8வது சம்பளக் குழுவில் மோடி அரசாங்கம் மாத ஊதியத்தை 108% வரை உயர்த்தக்கூடும் என்று கூறப்பட்கின்றது. ஆனால் இதுவரை, சம்பள அமைப்பு, அகவிலைப்படி அல்லது ஃபிட்மென்ட் ஃபாக்டர் குறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் இன்னும் வரவில்லை. ஃபிட்மென்ட் ஃபாக்டர் 1.92 முதல் 2.08 -க்குள் இருக்கலாம் என கூறப்படுகின்றது. எனினும் ஒரு சாரார் இது 2.86 ஆக இருக்கும் என கணித்துள்ளனர்.

1 /11

மத்திய அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் (Pensioners) சமீபத்தில் பெரிய நல்ல செய்தி வந்தது. மத்திய அரசு 8வது ஊதியக்குழுவிற்கான ஒப்புதலை அளித்தது. ஜனவரி 1, 2026 முதல் 8வது ஊதியக்குழு அமலுக்கு வரும் என எதிர்பார்கப்படுகின்றது.

2 /11

இதைத் தொடர்ந்து மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் தங்களுக்கு கிடைக்கக்கூடிய ஊதிய உயர்வு மற்றும் ஓய்வூதிய உயர்வு குறித்த கணக்கீடுகளில் ஈடுபட்டுள்ளனர். இன்றைய பட்ஜெட் 2025 தாக்கலில் 8வது ஊதியக்குழு குறித்த இன்னும் அதிகமான தெளிவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

3 /11

7வது ஊதியக்குழு 2014 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டு 2016 ஆம் ஆண்டு அமலுக்கு வந்தது. அதன் பரிந்துரைகள் டிசம்பர் 31, 2025 அன்று முடிவடையும். ஆகையால், 8வது ஊதியக்குழு அதன் பிறகு உடனடியாக நடைமுறைக்கு வரவேண்டும். இந்த மாற்றம் சுமார் 49 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கும் 65 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கும் பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

4 /11

8வது சம்பளக் குழுவைப் பொறுத்தவரை, மோடி அரசாங்கம் மாத ஊதியத்தை 108% வரை உயர்த்தக்கூடும் என்ற ஊகங்கள் உள்ளன. ஆனால் இதுவரை, சம்பள அமைப்பு, அகவிலைப்படி அல்லது ஃபிட்மென்ட் ஃபாக்டர் குறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் இன்னும் வரவில்லை. ஃபிட்மென்ட் ஃபாக்டர் 1.92 முதல் 2.08 -க்குள் இருக்கலாம் என கூறப்படுகின்றது.

5 /11

தேசிய கூட்டு ஆலோசனை குழுவின் செயலாளர் ஷிவ் கோபால் மிஸ்ரா, 8வது ஊதியக்குழு 2.86 ஃபிட்மென்ட் ஃபாக்டரை பரிந்துரைக்கக்கூடும் என்று குறிப்பிட்டுள்ளார். இருப்பினும் சில அறிக்கைகள் அது 1.92 முதல் 2.08 -க்குள் இருக்கக்கூடும் என கூறியுள்ளன.

6 /11

சம்பள உயர்வு: ஃபிட்மென்ட் ஃபாக்டர் 2.08 ஆக நிர்ணயிக்கப்பட்டால், குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் ரூ.18,000 -இலிருந்து ரூ.37,440 ஆக அதிகரிக்கலாம். ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியம் ரூ.9,000 -இலிருந்து ரூ.18,720 ஆக அதிகரிக்கக்கூடும்.

7 /11

ஃபிட்மென்ட் ஃபாக்டர் 2.86 ஆக உயர்ந்தால், குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் ரூ.18,000 லிருந்து ரூ.51,480 ஆக உயரக்கூடும். ஓய்வு பெற்றவர்களுக்கான ஓய்வூதியம் ரூ.9,000 லிருந்து ரூ.25,740 ஆக அதிகரிக்க வாய்ப்புள்ளது. இருப்பினும், இதற்கான சாத்தியம் குறைவாகவே தெரிகிறது.

8 /11

7வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளின் படி, ஃபிட்மென்ட் ஃபாக்டர் 2.57 இல் நிர்ணயிக்கப்பட்டது. இது குறைந்தபட்ச அடிப்படை ஊதியத்தை ரூ.7,000 லிருந்து ரூ.18,000 ஆக உயர்த்தியது. டிஏ, வீட்டு வாடகை கொடுப்பனவு மற்றும் போக்குவரத்து கொடுப்பனவு ஆகியவற்றைச் சேர்த்த பிறகு, மொத்த சம்பளம் ரூ.36,020 ஐ எட்டியது.

9 /11

தற்போது, ​​மத்திய ஊழியர்களுக்கான டிஏ 53% ஆக உள்ளது. ஜனவரி 1, 2026க்குள், மேலும் இரண்டு முறை டிஏ உயர்வு ஏற்படும். பொதுவாக அகவிலைப்படி உயர்வு 3-4% இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சராசரியாக 3.5% டிஏ உயர்வு இருக்கும் என ஏற்றுக்கொள்ளப்பட்டால், ஜனவரி 1 மற்றும் ஜூலை 2025 ஆகிய இரு தவணைகளிலும் அகவிலைப்படி மொத்தமாக 7% அதிகரிக்கும்.

10 /11

அதாவது ஜனவரி 2026 -க்குள் அகவிலைப்படி 60% -ஐ எட்டும். 8வது ஊதியக்குழு அமைக்கப்பட்டவுடன் 60% அகவிலைப்படி தொகை புதிய அடிப்படை ஊதியத்துடன் சேர்க்கப்படலாம். அரசாங்கம் 1.92 முதல் 2.86 -க்குள்ளான ஃபிட்மெண்ட் ஃபாக்டரை தேர்ந்தெடுக்கலாம். மொத்தத்தில் மத்திய அரசு ஊழியர்கள் மிகப்பெரிய ஊதிய உயர்வையும், ஓய்வூதியதாரர்கள் மிகப்பெரிய ஓய்வூதிய உயர்வையும் எதிர்பார்க்கலாம்.

11 /11

பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் 8வது ஊதியக்குழுவின் மூலம் கிடைக்கக்கூடிய ஊதிய உயர்வு அல்லது ஓய்வூதிய உயர்வுக்கு எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.