பிப்ரவரி மாத கிரக பெயர்ச்சிகள்: பிப்ரவரியில் நடைபெறும் கிரகப் பெயர்ச்சி காரணமாக சில ராசிகளுக்கு பிரச்சனைகள் உருவாகும் என்று ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.
பிப்ரவரி மாதத்தில் சூரியன், செவ்வாய் உள்ளிட்ட 4 கிரகங்களின் கிரக மாற்றங்கள் எந்த எந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பாதகமான பலன்களைத் தரும் என்பதை விரிவாக அறிந்து கொள்ளலாம்.
குரு பகவானின் வக்ர நிவர்த்தியுடன் பிப்ரவரி தொடங்கும். இதன் பிறகு புதன் கும்ப ராசியில் சஞ்சரிப்பார். சூரியனும் கும்ப ராசிக்குள் நுழைவார். சூரியன் இம்முறை புத்திரன் சனியின் ராசியில் வந்து கலகம் உண்டாக்கப் போகிறார் என கணித்துள்ளனர் ஜோதிடர்கள்.
சூரியன் பெயர்ச்சிக்கு பிறகு செவ்வாய் ரிஷப ராசியில் நுழைவார். இறுதியாக, புதன் மீண்டும் தனது ராசியை மாற்றி மீன ராசிக்கு மாறுவார். இந்நிலையில் பிப்ரவரி கிரகப் பரிமாற்றத்தின் எதிர்மறையான பலன்களால் பாதிக்கப்படப் போகும் ராசிகளை அறிந்து கொள்ளலாம்.
சிம்ம ராசிக்காரர்களுக்கு, பிப்ரவரி மாத கிரக பெயர்ச்சி திருமண வாழ்க்கையில் சில பதட்டத்தை அதிகரிக்கலாம். உங்கள் மனைவியின் உணர்வுகளை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும், இல்லையெனில் உறவு பாதிக்கப்படும். இந்த நேரத்தில் நீங்கள் எந்த புதிய வேலையையும் தொடங்குவதை தவிர்க்க வேண்டும். பதவி உயர்வுக்காக சிறிது காத்திருக்க வேண்டியிருக்கும்.
விருச்சிக ராசிக்காரர்களுக்கு பிப்ரவரி மாத கிரக உங்கள் குடும்பத்தினருக்கு நேரம் ஒதுக்க வேண்டியிருக்கும். குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தேவையில்லாத செலவு செய்யாமல் மன அழுத்தத்திலிருந்து விலகி இருப்பது நல்லது.
மகர ராசியினருக்கு பிப்ரவரி கிரக பெயர்ச்சிகள் சாதகமாக இருக்காது. உங்கள் பேச்சைக் கட்டுப்படுத்த வேண்டும், இல்லையெனில் குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். இந்த நேரத்தில், எந்த விதமமான முதலீட்டையும் சிந்தனையுடன் செய்வது நல்லது. வாகனம் ஓட்டும்போது கவனமாக இருக்க வேண்டும். உங்களின் எதிர்காலத் திட்டத்தைப் பற்றி யாரிடமும் எதுவும் சொல்லாதீர்கள்.
கும்ப ராசிக்காரர்களுக்கு பிப்ரவரி கிரக பெயர்ச்சிகள் சில எலும்பு சம்பந்தமான பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். இந்த நேரத்தில், நீங்கள் உங்கள் திருமண வாழ்க்கையில் கவனம் செலுத்த வேண்டும். இந்த நேரத்தில், நீங்கள் உங்கள் மனைவியுடன் கருத்து வேறுபாடுகளைத் தவிர்க்க வேண்டும். ஒரு புதிய தொழிலைத் தொடங்க நினைத்தால், உங்கள் நிதிக் கணக்குகளில் மிகவும் நேர்மையாக இருங்கள்.
மீன ராசிக்காரர்களுக்கு பிப்ரவரி கிரக பெயர்ச்சிகள் பண விரயத்தை ஏற்படுத்தும். உங்கள் செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும், இல்லையெனில் நீங்கள் நிதி சிக்கல்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். இந்த நேரத்தில் நீங்கள் தேவையற்ற பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும், இதனால் உங்கள் நேரம் வீணாகும். உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும், மேலும் உங்கள் எதிரிகளிடமிருந்து விலகி இருக்க வேண்டும்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.