Zero Income Tax | இவர்களுக்கு மிகப்பெரிய ஜாக்பாட்.. வருமான வரி கிடையாது.. ஒன்லி ஜீரோ வரி தான்

Zero Income Tax Latest News: இன்று (பிப்ரவரி 1) மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டில், புதிய வரி முறையின் கீழ் 12 லட்சம் ரூபாய் வரை வரி விலக்கு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

Important Update On Income Tax Exemption: வருடம் ரூ.12,75000 வரைக்கும் சம்பாதிப்பவர்கள் எந்த வருமான வரியும் கட்டத் தேவையில்லை. அதுக்குறித்து விவரமாக பார்ப்போம்.

1 /8

மாதம் ஒரு லட்சம் வரை சம்பாதிக்கும் நடுத்தர வர்க்கத்தினருக்கு மிகப் பெரிய ஜாக்பாட் பரிசை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதாவது ஆண்டுக்கு ரூ.12 லட்சம் வரை வருமானம் ஈட்டும் யாருமே இனி வரி கட்டத் தேவையில்லை. அட ரூ.12 லட்சம் கூட இல்லைங்க ரூ.12,75000 வரைக்கும் சம்பாதிப்பவர்கள் எந்த வருமான வரியும் கட்ட வேண்டாம். வரி செலுத்துவோருக்கு பெரும் நிவாரணம் அளித்து அந்த குட் நியூஸ் குறித்து விளக்கமாக அறிந்துக்கொள்ளுவோம்.

2 /8

இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் பட்ஜெட்டில் பல விஷயங்கள் குறித்து பேசியிருந்தாலும், முக்கியமான ஹைலைட் விஷயம் எதுவென்றால் வருமானம் வரி விலக்கு குறித்த முக்கிய அறிவிப்பு தான்.

3 /8

பட்ஜெட் 2025 தாக்கலுக்கு முன்பு, இந்தமுறை புதிய வரி முறையில் ரூ.10 லட்சம் வரை வரி விலக்கு அளிக்கப்படலாம் எனத் தகவல்கள் வெளியான நிலையில், இன்று (பிப்ரவரி 1) மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டில், புதிய வரி முறையின் கீழ் 12 லட்சம் ரூபாய் வரை வரி விலக்கு உயர்த்தப்பட்டு உள்ளது.

4 /8

குறிப்பாக நடுத்தர வர்க்க மக்களுக்கு நிவாரம் அளிக்கும் வகையில் வரி விலக்கு அமைந்துள்ளது. குறைந்த வருமானம் உள்ளவர்கள் அனைவரும் வரி சுமையிலிருந்து தப்பிக்க முடியும். இந்த புதிய விதிமுறைகள் ஏப்ரல் 1, 2025 முதல் நடைமுறைக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

5 /8

புதிய வரியின் கீழ் அளிக்கப்பட்டு உள்ள வரி விலக்கு மூலம் ஆண்டு வருமானம் ரூ.12.75 லட்சம் வரை உள்ளவர்கள் எந்த வரியும் செலுத்த வேண்டியதில்லை. ஏனெனில், இன்று (பிப்ரவரி 1) தாக்கல் செய்த பட்ஜெட்டில், தனிநபர் வரி விலக்கு வரம்பான ரூ.12 லட்சத்துடன், நிலையான விலக்கு வரம்பான ரூ.75,000 -ஐயும் சேர்த்தால், ரூ.12,75000 வரை ஆண்டு வருமானம் உள்ளவர்கள் வருமான வரி செலுத்த வேண்டியதில்லை என்பது கவனிக்கத்தக்கது.

6 /8

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் பட்ஜெட்டில், புதிய வரி முறைக்கான பட்டியல் வெளியிடப்பட்டது. அதாவது ரூ. 4 லட்சம் வரை வரி இல்லை, ரூ.4 முதல் ரூ.8 லட்சம் வரை 5% வரியும், ரூ.8 முதல் ரூ.12 லட்சம் வரை 10% வரியும், ரூ.12 முதல் ரூ.16 லட்சம் வரை 15% வரியும், ரூ.16 முதல் ரூ.20 லட்சம் வரை 20% வரியும், ரூ.20 முதல் ரூ.24 லட்சம் வரை 25% வரியும், ரூ.24 லட்சத்தை விட அதிக வருமானம் ஈட்டினால் 30% வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

7 /8

அதேநேரத்தில் பழைய வரி விதிமுறையில் எந்த மாற்றமும் கொண்டு வரப்படவில்லை. கடந்த முறை போல, இந்தமுறையும் உள்ளது. ஆண்டு வருமானம் ரூ.2,50,000 வரை உள்ளவர்கள் எந்தவிதமான வரியும் கட்டத்தேவையில்லை. ஆனால் ரூ. 2,50,000 முதல் ரூ. 5 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்கள் 5% வரியும், ரூ. 5 லட்சம் முதல் ரூ. 10 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்கள் 20% வரியும், ரூ. 10 லட்சத்திற்கு மேல் வருமானம் ஈட்டுபவர்கள் 30% வரியும் செலுத்த வேண்டும். 

8 /8

புதிய வருமான வரி முறையில் வரிச்சலுகை அளித்திருந்தாலும், நிலையான விலக்கு தவிர வேறு எந்த வருமான வரி விலக்கும் கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது. அதேசமயம், பழைய வரி முறையில், வீட்டுக் கடன், காப்பீடு, இபிஎப் திட்டம், பிபிஎப் திட்டம், ஈக்விட்டி முதலீடு, சேமிப்புத் திட்டம், விடுப்பு அலவன்ஸ், தேசிய ஓய்வூதிய திட்டம் போன்றவற்றுக்கு வருமான வரி விலக்கு பெறலாம்.