இந்த நட்சத்திரத்தில் சனியின் பெயர்ச்சியால் சுப பலன்களை பெறப்போகும் குறிப்பிட்ட இந்த 3 ராசிகளின் வாழ்க்கை குறிப்புகளை இங்குத் தெரிந்துகொள்ளலாம்.
சனி நட்சத்திரம் 2025: ஏப்ரல் 28 அன்று சரியாகக் காலை 7:52 மணிக்கு உத்திரபாத்ரபாத நட்சத்திரத்தில் சனி நுழைகிறார். இதனால் அனைத்து ராசிகளுக்கும் நல்ல மாற்றங்கள் மற்றும் தீய விளைவுகளும் உண்டாகலாம் என்று கூறப்படுகிறது.
ஒன்பது கிரகங்களில் மிகவும் சக்திவாய்ந்த கிரகமான சனி அதன் அருளால் இந்த ராசிகளுக்கு பணமழையை பொலியவிருக்கிறது. சனியின் நிலை மாற்றம் பல்வேறு ராசிகளுக்கு ஒளிமயமான எதிர்காலமாக மாறப்போகிறது என்று ஜோதிடத்தில் கூறப்படுகிறது.
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த உத்திரபாத்ரப நட்சத்திரத்தால் பணிகளில் பதவி உயர்வு கிடைக்கும். நீண்ட நாட்கள் நிலுவையிலிருந்த பணிகள் முடிவடையும்.
கல்வித்துறையில் மகிழ்ச்சியான செய்தி வந்தடையும். தொழிலில் லாபம் பெற அதிகம் வாய்ப்பு தேடி வரும். இந்த ராசிக்காரர்களிடம் அதிகமான கடின உழைப்பு இருந்தால் நிச்சயம் நல்ல பலன் பெறுவார்கள்.
சிம்மம்: இந்த இடப்பெயர்ச்சியால் நீண்ட நாட்கள் பிரச்சனையிலிருந்த விஷயங்களுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். மாணவர்கள் படிப்பு தொடர்பான செயல்களில் வெற்றி காண்பார்கள்.
குடும்பங்கள் மீது அன்பு அதிகரிக்கும். சமூகத்தில் உங்களை அதிகம் மதிக்க தொடங்குவார்கள். குழந்தைகளிடமிருந்து நல்ல செய்திகள் வரலாம்.
ரிஷபம்: உத்திர பாத்ரபத நட்சத்திரத்தில் சனியின் இடப்பெயர்ச்சி இந்த ராசியினுக்கு பல்வேறு அதிர்ஷ்டங்களை வழங்குகிறது. எதிர்மறை தாக்கங்களிலிருந்து விடும் நேரம் வந்துவிட்டது.
ரிஷப ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையில் அனுபவித்த கஷ்டங்களுக்குச் சிறந்த முடிவை அளிப்பார்கள். செல்வம் செழிக்க அதிக வாய்ப்பு உண்டு. தொழில் ரீதியான நிதிநிலை உயரும்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.