பிறந்தாச்சு பிப்ரவரி... இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் - பணப் பிரச்னையே வராது மக்களே!

Planet Transit In February 2025: பிப்ரவரி மாதம் மூன்று கிரகங்கள் பெயர்ச்சி ஆகும் நிலையில், இந்த நான்கு ராசிகளுக்கு இம்மாதம் முழுவதும் பணமழை கொட்டும் என கூறப்படுகிறது. இதுகுறித்து இங்கு விரிவாக காணலாம்.

Planet Transit: பிப்ரவரி மாதத்தில் 28 நாள்களே உள்ளன. இந்த 28 நாள்களும் இந்த ராசிகளுக்கு சிறப்பானதாக இருக்கும்.

1 /8

பிப்ரவரி மாதம் இன்று பிறந்துள்ளது. இம்மாதம் மொத்தமே 28 நாள்கள்தான். அப்படியிருக்க, இந்த பிப்ரவரி மாதத்தில் 3 கிரகங்கள் பெயர்ச்சி ஆகின்றன. சூரியன், புதன், குரு ஆகிய கிரகங்கள் பெயர்ச்சி ஆகின்றன.

2 /8

வரும் பிப். 4ஆம் தேதி 3:09 மணிக்கு குரு பகவான் ரிஷபம் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அதேபோல், பிப். 11ஆம் தேதி புதன் கிரகம் கும்ப ராசியில் மதியம் 12:58 மணிக்கு பெயர்ச்சி ஆகிறது. பிப்.12ஆம் தேதி சூரிய பகவானும் இரவு 10:03 மணிக்கு கும்ப ராசியில் பெயர்ச்சி ஆகிறார். 

3 /8

இந்த 3 கிரகங்களின் பெயர்ச்சியால் இந்த 4 ராசிகளுக்கு பணமழை கொட்டும். எந்தெந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் உண்டாகும் என்பதை இங்கு காணலாம். 

4 /8

மிதுனம் (Gemini): தம்பதியருக்கு இந்த காலகட்டம் சிறப்பாக அமையும். குடும்ப உறுப்பினர்களிடம் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள். திருமண உறவில் பிரச்னைகள் நீங்கும். வணிகத்தில் வெற்றி கிடைக்கும். பெரிய லாபம் கிடைக்கும். தொழிலையும் விரிவுப்படுத்தலாம்.   

5 /8

கடகம் (Cancer): இந்த மாதம் கடக ராசிக்காரர்களுக்கு பெரும் நன்மையாக இருக்கும். உங்களுக்கு இந்த மாதத்தில் வெற்றியே கிடைக்கும். எதிரிகளும் உங்களிடம் சமரசத்திற்கு வருவார்கள். பணியிடத்திலும் உங்களின் வேலை பாராட்டப்படும். புதிய கார், புதிய நிலம், புதிய வீடு வாங்கும் வாய்ப்பு கிடைக்கும். பெரிய பொருளாதரா நன்மையும் ஏற்படும். 

6 /8

சிம்மம் (Leo): இந்த பிப்ரவரியில் உங்களுக்கு வளர்ச்சிதான் இருக்கும். வேலையிலும் பணி உயர்வு கிடைக்கும். சமூகத்தில் மதிப்பு உயரும். வீட்டில் சுப காரியம் நடக்கும். உங்களின் வேலையால் முதலாளிகளுக்கு மகிழ்ச்சியே உண்டாகும். புதிய கார், புதிய நிலம் ஆகியவற்றை வாங்கும் வாய்ப்பு உண்டாகும். தந்தை சொத்தில் நன்மை கிடைக்கும். 

7 /8

கும்பம் (Aquarius): பிப்ரவரியில் இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கை சிறக்கும். கல்வி மற்றும் மற்ற விளையாட்டுகளில் வெற்றியே கிடைக்கும். நல்ல செய்தி வந்து சேரும்.  புதிய தொழிலை தொடங்கலாம். முன்னேற்றம் உண்டாகும். வணிகர்களுக்கு நல்ல லாபம் உண்டாகும். குடும்ப வாழ்க்கையால் மகிழ்ச்சி ஏற்படும்.

8 /8

பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான தகவல்கள் மற்றும் கணிப்புகளின் அடிப்படையில் எழுதப்பட்டதாகும். இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிப்படுத்தவில்லை.