96 ஆண்டுகளாக ஒரு குழந்தை கூட பிறக்காத நாடு ஒன்று உள்ளது. அது பற்றி தெரிந்துக் கொள்ளலாம்.
உலகில் ஏரதாள 196 நாடுகள் உள்ளன. ஒவ்வொரு நாடுக்கும் ஒவ்வொரு தனித்துவம் இருக்கும். ஆனால் குழந்தை பிறக்காதது தான் ஒரு நாட்டுக்கு தனித்துவம் என்று சென்னால் நம்ப முடிகிறதா? ஆம் அது குறித்து தான் இத்தொகுப்பில் பார்க்கப்போகிறோம்.
உலக நாடுகள் பல்வேறு விதமான மர்ம்மான விஷயங்களை கொண்டுள்ளன. அப்படி ஒரு வித்தியாசமான விஷயத்தை கொண்ட நாடுதான் இது.
இந்த நாடு 1929 பிப்ரவரி 11 அன்று உருவாக்கப்பட்டது. ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவத்தின் அனைத்து பெரிய தலைவர்களும் இங்கு வாழ்கின்றனர். போப் இங்கே ஆட்சி செய்கிறார்.
இதுவரை இந்த நாட்டில் ஒரு குழந்தை கூட பிறக்கவில்லையாம். 96 ஆண்டுகள் கடந்தும் இதுவரை ஒரு குழந்தை கூட பிறக்காதது தான் ஆச்சிரியம்.
இந்த நாட்டில் பெயர் வாடிகன் நகரம். உலகின் மிக சிறய நாடு இதுதான். 96 ஆண்டுகளாக எப்படி குழந்தை பிறக்காமல் இருக்கும் அங்குள்ளவர்கள் கர்ப்பம் தரிக்க மாட்டார்களா? அவர்களுக்கு குழந்தை பிறக்காத என்ற பல கேள்விகள் தோன்றலாம்.
இந்த நாடு உருவான பிறகு பலமுறை மருத்துவமனை கோரப்பட்டும் ஒவ்வொரு முறையும் நிராகரிக்கப்பட்டது. இங்கு, யாராவது தீவிர நோய்வாய்ப்பட்டாலோ அல்லது ஒரு பெண் கர்ப்பம் ஆனாலோ, அவர்கள் ரோமில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்படுகிறார்கள் அல்லது அந்தந்த சொந்த நாட்டுக்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்படுகிறது.
வாடிகன் நகரத்தின் பரப்பளவு 118 ஏக்கர் மட்டுமே அனைத்து நோயாளிகளும் ரோமில் உள்ள மருத்துமனைகளுக்கு சிகிச்சைக்காக செல்ல வேண்டும். அதனால் வெளியே சென்றுவிடுகின்றனர்.
இங்குள்ள பெண்கள் கர்ப்பமானால், பிரசவ நேரன் நெருங்கும்போது, அங்குள்ள விதிகளின்படி, குழந்தையை பெற்றெடுக்கும் நேரத்தில் அங்கிருந்து வெளியே செல்ல வேண்டும். இந்த விதி மிகவும் கடுமையாக பின்பற்றப்படுகிறது.
வாடிகன் நகரில் யாருக்கும் நிரந்தர குடியுரிமை வழங்குவதில்லை. இங்கு வசிக்கும் மக்கள் அனைவரும் தங்கள் பதவிக்காலம் வரையே இங்கு இருப்பார்கள். அதுவரை தற்காலிக குடியுரிமையே பெறுவார்கள்.