நீரிழிவு நோயாளிகள்... காலை உணவில் கட்டாயம் சேர்க்க வேண்டியவையும்... சேர்க்கக் கூடாதவையும்

நீரிழிவு நோயாளிகள், தங்கள் ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருப்பது அவசியம். இல்லையென்றால், இதயம் சிறுநீரகம் கண் போன்ற முக்கிய உடல் உள் உறுப்புகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

சர்க்கரை நோயை குணப்படுத்துவது இயலாது. ஆனால் உணவு முறை மற்றும் ஆரோக்கியமான பழக்கங்கள் மூலம், ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கலாம்.

1 /8

சர்க்கரை நோயாளிகளுக்கு உணவு தேர்வு அதிக முக்கியத்துவம் பெறுகிறது. சுகர் லெவல் எதிராமல் இருக்க, குறிப்பாக அவரது காலை உணவு கவனமாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அவை நாள் முழுவதும் ஆற்றலை கொடுப்பதாக இருக்க வேண்டும்.

2 /8

ஓட்ஸ் உணவுகள்: சர்க்கரை நோயாளிகளுக்கான மிகச் சிறந்த உணவு. ஒற்றைக் கஞ்சியாகவோ, தோசையாகவோ இட்லியாகவோ செய்து சாப்பிடலாம். நார்ச்சத்து மற்றும் புரதம் நிறைந்த ஒட்ஸ், நாள் முழுவதும் ஆற்றலை அள்ளிக் கொடுக்கும்.

3 /8

புரதச்சத்தின் ஆதாரமான முட்டை, சர்க்கரை நோயாளிகளுக்கான சிறந்த உணவு. தங்களுக்கு பிடித்த வகையில், ஆம்லெட் அல்லது வேகவைத்த முட்டை என பல வகைகளில் முட்டையை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

4 /8

சிறு தானியங்கள்: குளூட்டன் அல்லாத சிறுதானியங்கள், நீரழிவு நோயாளிகளுக்கு அருமருந்து. அதிலும் ராகி என்னும் கேழ்வரகு, ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் ஆற்றல் மிக்கது. நார்ச்சத்து மற்றும் புரதம் நிறைந்த ராகியை, கஞ்சி இட்லி, தோசை என உங்களுக்கு பிடித்த வகையில் உண்ணலாம்.

5 /8

பழங்கள் நார்ச்சத்து வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் களஞ்சியங்களாக உள்ளன. குறிப்பாக ஆப்பிள், கொய்யா, பேரிக்காய், ஆரஞ்சு மற்றும் பெர்ரி பழங்கள், சர்க்கரை நோயாளிகளுக்கான சிறந்த உணவாக இருக்கும்.

6 /8

நட்ஸ் மற்றும் விதைகள்: ஆரோக்கிய கொழுப்புகள் நிறைந்த, பாதாம் வாதுமை பருப்பு உள்ளிட்ட உலர் பழங்களிலும், சியா ஆழி விதை போன்ற விதைகளிலும் சர்க்கரையை கட்டுப்படுத்தும் ஆற்றல் உள்ளது.

7 /8

சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டிய உணவுகள்: ரெடி டு ஈட் வகை உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஆகியவற்றை சர்க்கரை நோயாளிகள் நிச்சயம் தவிர்க்க வேண்டும். இவை அனைத்தும் சுகர் லெவலை எகிற வைக்கும் ஆற்றல் கொண்டவை.

8 /8

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.