கல்லூரி மாணவராக நடிக்கும் சிம்பு? STR 49 படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

சிம்பு உடனடியாக STR49 படத்தில் நடிக்க உள்ளார். தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனின் Dawn Pictures தயாரிப்பில், பார்க்கிங் படப்புகழ்  இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இப்படத்தை இயக்குகிறார்.

1 /6

சிலம்பரசன் TR பிறந்த நாளில் அறிவிக்கப்பட்ட STR49 படத்தின் அறிவிப்பு வெளியானது. தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனின் Dawn Pictures தயாரிப்பில் பார்க்கிங் பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இந்த படத்தை இயக்குகிறார்.

2 /6

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர் சிலம்பரசன் TR பிறந்த நாளில், அவரது ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் 3 படங்களின் அறிவிப்பு வெளியானது.

3 /6

STR49 படத்தின் அறிவிப்பு போஸ்டரில் சிலம்பரசன் TR திரும்பி நிற்க, “தி மோஸ்ட் வாண்டட் ஸ்டூடண்ட்” என டேக்லைன் எழுதப்பட்டுள்ளது. இந்த மிரட்டலான போஸ்டர், இணையம் முழுக்க பெரும் வரவேற்பைப் பெற்றது.

4 /6

பார்க்கிங் படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன், மாறுபட்ட களத்தில், கல்லூரி மாணவனாக விண்டேஜ் சிலம்பரசனை, அதிரடி அவதாரத்தில் அறிமுகப்படுத்தும் வகையில், அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் கமர்ஷியல் கொண்டாட்டமாக இப்படத்தை உருவாக்கவுள்ளார்.

5 /6

இப்படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.  

6 /6

கல்லூரி மாணவனாக சிம்பு நீண்ட நாட்களுக்கு பிறகு நடிக்க இருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்புஅதிகரித்துள்ளது. மாஸ்டர் படத்தில் விஜய்யின் கதாபாத்திரம் போல இதுவும் வித்தியாசமானதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.