Vidaamuyarchi Movie OTT : அஜித் நடிப்பில் வெளியாகியிருக்கும் விடாமுயற்சி படத்தின் ஓடிடி உரிமையை, எந்த நிறுவனம் பெற்றுள்ளது தெரியுமா?
Vidaamuyarchi Movie OTT : தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் குமார், விடாமுயற்சி படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார். இந்த படம், வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இதில், அஜித்திற்கு ஜோடியாக த்ரிஷா நடித்திருக்கிறார். மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்த படத்தின் ஓடிடி உரிமை குறித்த தகவலை இங்கு பார்ப்போம்.
2 ஆண்டுகளுக்கு பிறகு அஜித்தின் படம் தியேட்டரில் வெளியாகியுள்ளது. இதனை, ரசிகர்கள் திருவிழா போல கொண்டாடி வருகின்றனர். மகிழ் திருமேனி இயக்கத்தில் வெளிவந்துள்ள விடாமுயற்சி படம் முன்னரே பொங்கலுக்கு வெளியாகும் எனக்கூறப்பட்டு இப்போது பிப்ரவரி மாதத்தில் வெளியாகியிருக்கிறது.
விடாமுயற்சி படத்தில் அஜித்திற்கு ஜோடியாக த்ரிஷா நடித்திருக்கிறார். இது, இவர்கள் இணைந்து நடிக்கும் 5வது படமாகும். இந்த படத்தில் அஜித்தின் பெயர் அர்ஜுன், த்ரிஷாவின் பெயர் கயல்.
விடாமுயற்சி படத்தில், அர்ஜுன் ரெஜினா ஆகியோர் வில்லன்களாக நடித்திருக்கின்றனர். இவர்களுடன் ஆரவ், ரம்யா உள்ளிட்டோரும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
விடாமுயற்சி படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களே எழுந்துள்ளது. ஆனால், ஒரு சிலர் படம் நன்றாக இருப்பதாக கூறியிருக்கின்றனர்.
விடாமுயற்சி உள்பட பல படங்கள் தியேட்டரில் வெளியாகும் போதே அதன் டிஜிட்டல் உரிமையை பெற்றுள்ள நிறுவனம் எது என்கிற விவரம் வெளியாகிவிடும். அந்த வகையில் அஜித்தின் விடாமுயற்சி படத்தின் உரிமை குறித்த விவரமும் வெளியாகியிருக்கிறது.
அஜித்தின் விடாமுயற்சி படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது.
இது குறித்து நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் வெளியிட்டிருக்கும் பதிவில், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழி படங்களில் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.