7 Self Discipline Habits : நாம், வாழ்க்கையில் முன்னேற மட்டுமல்ல, நிம்மதியாக இருக்கவும் சில சுய ஒழுக்க பழக்கங்களை கடைப்பிடிக்க வேண்டும். அவை என்னென்ன தெரியுமா?
7 Self Discipline Habits : சுய ஒழுக்கம் என்பது வாழ்வில் அனைவருக்கும் தேவையான ஒரு விஷயமாகும். இது, நம் வாழ்க்கையை மாற்றுவதோடு, பல்வேறு சிக்கல்களில் இருந்தும் நம்மை விடுவித்துக்கொள்ள உந்துதலை ஏற்படுத்தும். இப்படி, நாம் கண்டிப்பாக வாழ்வில் சில பழக்கங்களை கடைப்பிடிக்கவில்லை என்றால், பின்னர் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அப்படிப்பட்ட சில சுய ஒழுக்க பழக்கங்கள் குறித்து இங்கு பார்ப்போம்.
உங்கள் நாள் எப்படி செல்ல வேண்டும் என்பதற்கான திட்டத்தை வகுத்துக்கொள்ளுங்கள். அந்த பெரிய வேலைகள் அடங்கிய திட்டமாக இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. சிம்பிளாக புத்தகம் படிக்க வேண்டும், பாடல் கேட்க வேண்டும் என்கிற திட்டமாக கூட இருக்கலாம். இப்படி, ஒரு திட்டத்துடன் உங்கள் நாளை ஆரம்பித்தால் கண்டிப்பாக உங்களால் முன்னேற்றத்தை பார்க்க முடியும்.
ஒரு நல்ல வீரனுக்கு அவனிடம் இருக்கும் பலம் என்ன பலவீனம் என்ன என்பது தெரிந்திருக்கும். இதை தெரிந்து வைத்துக்கொள்வது ஒருவித நல்ல சுய ஒழுக்க பழக்கமும் ஆகும். இதை தெரிந்து கொண்டால், உங்கள் பலத்தை வளர்த்துக்கொள்வது எப்படி, பலவீனத்தை பலமாக மாற்றுவது எப்படி என்பது உங்களுக்கு தெரிந்து விடும்.
உங்களின் இலக்குகள், நீங்கள் செல்லும் சாலைக்கான மேப் ஆகும். எனவே, ஒழுக்கத்தை மேம்படுத்திக்கொள்ள உங்களுக்கென்று இருக்கும் இலக்குகளை பிரிப்பது நல்லது. உதாரணத்திற்கு, 10 கிலோ எடை குறைக்க வேண்டும் என நினைத்தால், வாரத்திற்கு 0.5 கிலோ குறைக்க வேண்டும் என்ற இலக்கை நிர்ணயியுங்கள்.
நமது முன்னேற்றத்தை கெடுக்கும் முதல் விஷயம், கவனச்சிதறல். அது போன் ரூபத்தில், சமூக வலைதளங்கள் மூலமாகவும் உணவு ரூபத்தில் துரித உணவுகளாகவும் நம்மை தொடரலாம். இதிலிருந்து தப்பிக்க, உங்களுக்கு கவனச்சிதறலை எதெல்லாம் ஏற்படுத்துகிறது என்பதை தெரிந்துகொண்டு அதிலிருந்து தள்ளியிருப்பது நல்லது.
உங்கள் உடல் நலனை எப்போதும் கருத்தில் கொள்ள வேண்டும். ஒரு நாளில் உடற்பயிற்சி செய்வதற்கோ, தியானம் செய்வதற்கோ 30-40 நிமிடங்களை ஒதுக்குங்கள். இது, உங்களை நீங்கள் வளமாக பார்த்துக்கொள்ள உதவும்.
நம்மில் பலருக்கு இருக்கும் கெட்ட பழக்கம், இல்லை என்று சொல்ல வராததுதான். உங்களால் ஒரு வேலையை செய்ய முடியவில்லை என்றால் அதை செய்ய முடியாது என சொல்லிவிட வேண்டும். யாருக்காவது உதவி செய்ய விருப்பமில்லை என்றால், விருப்பமில்லை என கூறிவிட வேண்டும். நீங்கள் அனைவருக்கும் வளைந்து கொடுத்து போக வேண்டுமென்ற அவசியம் இல்லை.
உங்கள் நேரம் பொண் போன்றது. எனவே அதை வீணடிக்காமல் கொடுத்த வேலையை கொடுத்த நேரத்தில் முடித்து, உங்களின் தனிப்பட்ட வேலைகளை பாருங்கள். இதுதான் உங்களது இலக்குகளை எளிதில் அடையவும் உதவும்.