8வது ஊதியக்குழு: ஊதிய உயர்வு எவ்வளவு? 186%? 20-30%? அட்டகாசமான அப்டேட் இதோ

8th pay commission: மத்திய அரசு ஊழியர்களின் ஊதியம் 8வது ஊதியக்குழுவில் எவ்வளவு அதிகரிக்கப்படும்? இது எதன் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகின்றது. இதன் கணக்கீட்டை இங்கே காணலாம்.

8th pay commission: 2016 முதல் அமலுக்கு வந்த 7வது ஊதியக்குழுவின் கீழ் மத்திய அரசு ஊழியர்கள் தற்போது சம்பளம் மற்றும் ஓய்வூதியம் பெறுகின்றர். பொதுவாக 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய ஊதியக்குழுக்கள் அமைக்கப்படுகின்றன. ஊதிய குழுக்களில் ஊழியர்களின் ஊதியம் மற்றும் ஓய்வூதியம் பணவீக்கத்திற்கு ஏற்ப மாற்றப்படுகின்றது. அரசு ஊழியர்கள் 8வது சம்பள கமிஷனின் மூலமாகவும் மிகப்பெரிய சம்பள உயர்வை எதிர்பார்க்கிறார்கள்.

1 /11

கடந்த மாதம் 8வது ஊதியக்குழுவிற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. அப்போதிருந்து, 8வது சம்பள கமிஷனில் என்னென்ன அம்சங்கள் இருக்கும், மத்திய அரசு ஊழியர்களின் சம்பள உயர்வு எவ்வளவு இருக்கும் என்பது குறித்து ஊகங்கள் எழுந்த வண்ணம் உள்ளன. 

2 /11

குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் 108-186 சதவீதம் அதிகரிக்கும் என்று சில நிபுணர்கள் கூறுகின்றனர். எனினும், முன்னாள் நிதி செயலாளர் சுபாஷ் சந்திர கார்க் ஒரு நேர்காணலில் இந்த உயர்வு 20 முதல் அதிகபட்சம் 30 சதவீதம் வரை மட்டுமே இருக்கக்கூடும் என்று கூறியிருந்தார். இதனால் 1 கோடிக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மொத்த சம்பள உயர்வு குறித்த குழப்பம் நிலவுகிறது.

3 /11

மத்திய அரசு ஊழியர்களின் ஊதிய உயர்வு எவ்வளவு இருக்கும்? ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியம் எவ்வளவு அதிகரிக்கும்? இது குறித்த விரிவான கணக்கீடு மற்று விவரங்களை இந்த பதிவில் காணலாம்.

4 /11

2016 முதல் நடைமுறையில் உள்ள 7வது ஊதியக்குழுவின் கீழ் மத்திய அரசு ஊழியர்கள் தற்போது சம்பளம் பெறுகின்றனர். பொதுவாக 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய ஊதியக்குழுக்கள் அமைக்கப்படுகின்றன. ஊதிய குழுக்களில் ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் பணவீக்கத்திற்கு ஏற்ப திருத்தப்படுகிறது. அரசு ஊழியர்கள் 8வது சம்பள கமிஷனின் மூலமாகவும் மிகப்பெரிய சம்பள உயர்வை எதிர்பார்க்கிறார்கள்.

5 /11

முன்னாள் நிதிச் செயலாளர் சுபாஷ் சந்திர கார்க் 8வது ஊதியக் குழுவில் 1.92 முதல் 2.08 வரையிலான ஃபிட்மென்ட் ஃபாக்டரை அரசாங்கம் அங்கீகரிக்கக்கூடும் என்று கூறினார். இருப்பினும், NC-JCM (தேசிய கவுன்சில் - கூட்டு ஆலோசனை அமைப்பு) செயலாளர் ஷிவ் கோபால் மிஸ்ரா, இந்த ஃபிட்மென்ட் ஃபாக்டர் 2.86 ஆக இருக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார். 

6 /11

ஃபிட்மென்ட் ஃபாக்டர் என்பது குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் எத்தனை மடங்கு அதிகரிக்கும் என்பதைக் காட்டும் ஒரு குணகம் ஆகும். தற்போதுள்ள அடிப்படை ஊதியம் புதிதாக நிர்ணயிக்கப்படும் ஃபிட்மென்ட் ஃபாக்டரால் பெருக்கப்பட்டு புதிய அடிப்படை ஊதியம் தீர்மானிக்கப்படுகின்றது.

7 /11

8வது ஊதியக் குழு ஜனவரி 2026 இல் செயல்படுத்தப்படும் என்று நம்பப்படுகின்றது. அந்த நேரத்தில் அகவிலைப்படி (DA) சுமார் 60 சதவீதமாக இருக்கும் என கூறப்படுகின்றது. தற்போதைய குறைந்தபட்ச சம்பளம் (7வது ஊதியக் குழுவின் கீழ்) = ரூ.18,000. டிஏ சேர்த்த பிறகு சம்பளம் = ரூ.28,800

8 /11

8வது ஊதியக் குழுவின் கீழ், ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 1.92 ஆக இருந்தால், புதிய குறைந்தபட்ச சம்பளம் = ரூ.34,560 (சுமார் 20% அதிகரிப்பு) ஆக இருக்கும். ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 2.08 ஆக இருந்தால், குறைந்தபட்ச சம்பளம் = ரூ.37,440 (சுமார் 30% அதிகரிப்பு) ஆக உயரும். ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 2.86 ஆனால், குறைந்தபட்ச சம்பளம் = ரூ.51,480 (சுமார் 80% அதிகரிப்பு) ஆக அதிகரிக்கும்.

9 /11

டிஏவை விலக்கிவிட்டு பார்த்தால், சம்பள உயர்வின் அதிகரிப்பு இப்படி இருக்கும்? 1.92 ஃபிட்மென்ட் ஃபாக்டரில் 92% அதிகரிப்பு இருக்கும், 2.08 ஃபிட்மென்ட் ஃபாக்டரில் 108% அதிகரிப்பு, 2.86 ஃபிட்மென்ட் ஃபாக்டரில் 186% அதிகரிப்பு.

10 /11

அதாவது 8வது ஊதியக் குழு செயல்படுத்தப்பட்ட பிறகு, ஊதியம் 20 முதல் 30% வரை உயர அதிக வாய்ப்பு உள்ளது. இருப்பினும், இது அரசாங்க முடிவுகள் மற்றும் நாட்டின் பொருளாதார நிலையையும் பெரிதும் சார்ந்திருக்கும். அதன்படி, குறைந்தபட்ச அடிப்படை சம்பளத்தில் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ அதிகரிப்பு இருக்கலாம்.

11 /11

பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் 8வது ஊதியக்குழுவின் கீழ் கிடைக்கக்கூடிய ஊதிய உயர்வு அல்லது ஓய்வூதிய உயர்வுக்கு எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.