Weekly Horoscope: பிப்ரவரி 10ம் தேதியுடன் துவங்கும் வாரத்தில், சில ராசிகளுக்கு, பண வரவு கிடைப்பதுடன் சாதகமான பலன்களைத் தரும் என்றும், அதே சமயம் சில ராசிகள் கவனமாக இருக்க வேண்டும் எனவும் ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.
வார ராசிபலன்: மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிகளுக்கும் பிப்ரவரி 10ம் தேதியுடன் துவங்கும் இந்த வாரம் எப்படி இருக்கும் என்பதை ஜோதிடர்கள் கணித்துள்ளதை அறிந்து கொள்ளலாம். இந்த வாரம் சில ராசிகள் சந்தோஷத்தையும், சில ராசிகள் சில சங்கடத்தையும் சந்திக்கலாம்.
மேஷ ராசிக்கான வார பலன்கள்: நிதிநிலை சிறப்பாக இருக்கும். எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கடின உழைப்பிற்கான பலன் கிடைக்கும்.
ரிஷப ராசிக்கான வார பலன்கள்: நிலைமை சீராகும் வாய்ப்பு கிடைக்கும். எதிர்பாராத பண வரவு இதனை சாத்தியமாக்கும். வேலையில் சவால்கள் இருந்தாலும் திறமையாக சமாளிப்பீர்கள்.
மிதுன ராசிக்கான வார பலன்கள்: எதிர்பாராத செலவுகள் காரணமாக நிதிநிலை பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. செலவுகளை கட்டுப்படுத்துவது பலன் தரும். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளவும்.
கடக ராசிக்கான வார பலன்கள்: செலவுகள் கைக்கு மீறி போகும் வாய்ப்பு உண்டு. எனினும் திட்டமிடல் காரணமாக அதனை எளிதாக சமாளிக்கலாம். வேலை எதிர்பார்க்க வெற்றி கிடைக்கவில்லை என்றாலும், சக ஊழியர்களின் ஆதரவு இருக்கும்.
சிம்ம ராசிக்கான வார பலன்கள்: நிதி இலக்குகளில் கவனம் செலுத்துவதற்கும், முதலீடுகளை அதிகரிப்பதற்கும் ஆன சிறந்த நேரம் ஆக இருக்கும். வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். அதனை சரியாக பயன்படுத்திக் கொண்டால் வெற்றி நிச்சயம்.
கன்னி ராசிக்கான வார பலன்கள்: நிதிநிலை மேம்படும் வகையில் பண வரவு திருப்திகரமாக இருக்கும். முதலீடு செய்யும் போது தீர ஆராய்ந்து ஆலோசித்து முடிவெடுக்கவும். குடும்ப உறுப்பினர்கள் உங்கள் முடிவுகளுக்கு ஆதரவாக இருப்பார்கள்.
துலாம் ராசிக்கான வார பலன்கள்: பணவரவு அதிகரிக்கும் என்றாலும் செலவுகளும் அதனை மீறி இருக்கும். எனவே எச்சரிக்கையாக இருக்கவும். உடல்நிலை சிறிது பாதிக்கப்படலாம்.எனவே எச்சரிக்கையாக இருக்கவும்.
விருச்சிக ராசிக்கான வார பலன்கள்: எதிர்பாராத நிதி வரவு மனதிற்கு மகிழ்ச்சியை தரும். வேலையில் தொழில் வெற்றிகளை காணலாம். ஆடம்பர வசதிக்காக செலவழிப்பீர்கள். வாழ்க்கையின் தரம் மேம்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
தனுசு ராசிக்கான வார பலன்கள்: எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். திட்டமிட்டு செலவு செய்வதால் நிலைமையை சமாளிக்கலாம். இல்லையென்றால் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.
மகர ராசிக்கான வார பலன்கள்: பண வரவு மகிழ்ச்சி கொடுக்கும். முதலீடுகள் அதிகரிக்க வாய்ப்பு உண்டு. எனினும் வேலையில் சவால்களை சந்திக்க கூடும். குடும்பத்தில் சிறிய அளவில் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம்.
கும்ப ராசிக்கான வார பலன்கள்: நிதி விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். இல்லை என்றால் பெரும் இழப்பை சந்திக்க வேண்டி இருக்கும். வேலையில் எச்சரிக்கையாக இருக்கவும். இல்லை என்றால் பிரச்சனைகளை சந்திக்க கூடும். அனாவசிய பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது.
மீன ராசிக்கான வார பலன்கள்: எதிர்பாராத பண வரவு மகிழ்ச்சி கொடுக்கும். இதனால் நிதிநிலை மேம்படும் வாய்ப்பு உண்டு. வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பு உண்டு.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை.பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்ட இந்தத் தகவல்களுக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது.