எச்சரிக்கை... அளவிற்கு அதிகமான முட்டை ஆரோக்கியத்திற்கு பெரும் கேடு

முட்டைகளை உட்கொள்வது பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. ஆனால் இந்த முட்டைகளை தவறான வழியில் உட்கொண்டால், அவை நன்மைகளுக்கு பதிலாக ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.

 

பலர் காலை உணவாக வெறும் வயிற்றில் முட்டைகளை சாப்பிடுவார்கள். இந்நிலையில், அளவிற்கு அதிகமானால், அது  ஆரோக்கியக் கண்ணோட்டத்தில் நல்லதல்ல. இதனால் பல வகைகளில் பாதிப்பு ஏற்படும் என ஆயுர்வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

1 /10

முட்டையில் உயர்தர புரதத்தின் வளமான ஆதாரமாக இருப்பது மட்டுமல்லாமல், முட்டையில் வைட்டமின் ஏ, டி, ஈ, பி 12, ரிபோஃப்ளேவின், ஃபோலேட், இரும்பு மற்றும் செலினியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. ஆனால், முட்டையை காலை வெறும் வயிற்றில் அளவிற்கு அதிகமாக சாப்பிட்டால், ஆரோக்கிய நலன்களை பெறமுடியாது என ஆயுர்வேதத்தில் கூறப்பட்டுள்ளது.

2 /10

முட்டையை வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் சிலருக்கு வாய்வு, வாயு, வயிற்றுப் பிடிப்பு போன்ற செரிமான பிரச்சனைகள் ஏற்படலாம். ஏற்கனவே செரிமான அமைப்பு பலவீனமாக உள்ளவர்களிடம் இந்த பிரச்சனைகள் அதிகம் ஏற்படும்.

3 /10

காலையில் வெறும் வயிற்றில் பச்சையாகவோ அல்லது வேகவைக்காத முட்டைகளையோ சாப்பிடுவதன் மூலம் ஃபுட் பாய்சன் பிரச்சனை ஏற்படலாம். வேக வைக்காத முட்டைகளை சாப்பிடுவது சால்மோனெல்லா பாக்டீரியாவின் அபாயத்தை ஏற்படுத்தும். இந்த பாக்டீரியா வயிற்றுப்போக்கு, காய்ச்சல் மற்றும் வயிற்றுப் பிடிப்பு போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும்.  

4 /10

ஊட்டச்சத்து குறைபாடு: காலை உணவில் முட்டையை மட்டும் உட்கொள்வதால், உடலில் உள்ள மற்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் குறையும். காலையில், புரதத்துடன், ஏராளமான நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் ஆகியவை அடங்கிய சீரான உணவை உட்கொள்ள வேண்டும்.  

5 /10

முட்டையில் உள்ள நல்ல அளவு புரதம் சில நேரங்களில் சில ஆண்டிபயாடிக் மாத்திரைகள் அதாவது, நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் விளைவைக் குறைக்கும். அத்தகைய சூழ்நிலையில், ஏதேனும் ஆன்டிபயாடிக்குகளை எடுத்துக் கொள்ளும்போது, ​​மருத்துவரின் ஆலோசனைக்குப் பிறகே முட்டைகளை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

6 /10

முட்டைகளை அதிகமாக உட்கொள்வது சிறுநீரகத்தை பாதிக்கலாம், முட்டையில் புரோட்டீன் நிறைந்திருப்பதே இதற்குக் காரணம். அளவுக்கு அதிகமான புரதம், சிறுநீரகத்தை பாதிக்கும். எனவே சிறுநீரகம் தொடர்பான பிரச்சனை உள்ளவர்கள் முட்டைகளை உட்கொள்வதை தவிர்ப்பது நல்லது.

7 /10

புரதச்சத்து காரணமாக அதிகம் இருப்பதன் காரணமாக முட்டைகள் கொழுப்பை குறைக்க உதவுகின்றன என்றாலும், அவற்றை அதிகமாக உட்கொள்வது கொழுப்பை சேர்த்து உடல் எடை அதிகரிக்க காரணமாகலாம்.  

8 /10

ஒரு முட்டையில் சுமார் 180 மி.கிராம் கொலஸ்ட்ரால் உள்ளது என்கின்றனர் உணவியல் நிபுணர்கள். எனவே, ஒரு நாளைக்கு இரண்டு முட்டைகளுக்கு மேல் உட்கொள்வதால், உடலில் கொலஸ்ட்ரால் அதிகரிக்கலாம். உங்கள் இதய ஆரோக்கியத்தை பாதிக்கும். 

9 /10

சிலருக்கு முட்டை என்றால் அலர்ஜியாக இருக்கும். அப்படிப்பட்டவர்கள் தவறுதலாக கூட முட்டையை வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது. அப்படி தவறிழைப்பதன் மூலம், சருமத்தில் அரிப்பு, தோலழற்சி, உடலில் வீக்கம், குமட்டல், வாந்தி அல்லது வயிற்றுப்போக்கு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற இரைப்பை குடல் போன்ற பிரச்சனைகளால்பாதிக்கப்படலாம்.

10 /10

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.