ஹெல்மெட் அணிவதால் ஏற்படும் முடி உதிர்வை தவிர்க்க சில டிப்ஸ்.
விபத்துக்கள் அதிகமாக நடப்பதால் இந்தியாவின் முக்கிய நகரங்களில் இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் இருவரும் ஹெல்மெட் அணிவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இது குறித்து அரசு போக்குவரத்து காவல்துறையும் தொடர்ந்து விழிப்புணர்வு செய்து வருகின்றனர்.
கழுத்து வலி, தலை வியர்க்கிறது, முடி கொட்டுகிறது என பல்வேறு காரணங்களுக்காக பலர் ஹெல்மெட் அணிவதை தவிர்க்கிறார்கள். உண்மையில் ஹெல்மெட் அணிவதால் முடி உதிர்கிறதா? கழுத்து வலி ஏற்படுமா? இதற்கு தீர்வுதான் என்ன? என்பது குறித்து இத்தொகுப்பில் பார்க்கலாம்.
ஹெல்மெட்டின் உட்பகுதியை பலரும் சுத்தம் செய்வதே கிடையாது. முதலில் ஹெல்மெட்டின் உட்பகுதியை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். தலைக்கு பொருத்தமான ஹெல்மெட்டை பயன்படுத்த வேண்டும். மாறாக பயன்படுத்தும்பட்சத்தில் கழுத்துவலி ஏற்படும்.
ஹெல்மெட் அணிவதற்கு முன்பாக ஒரு காட்டன் துணியால் ஆண கேப் பயன்படுத்தலாம். இது ஹெல்மெட் விற்கப்படும் கடைகளிலேயே இருக்கும். அதேபோல் தலைமுடி ஈரமாக இருந்தால் ஹெல்மெட் அணிய கூடாது. முடியை நன்கு உலர்ந்துவிட்டு பின்னர் ஹெல்மெட் அணிய வேண்டும். இதன் மூலம் முடி உதிர்வை தடுக்கலாம்.
ஹெல்மெட் அணிவதனால் மட்டுமே தலைமுடி உதிர்வது கிடையாது. தலைமுடியை பராமரிப்பது என்பது மிகவும் அவசியம்.
தலைமுடியை தினமும் நன்கு உலர்த்திக் கொள்ள வேண்டும். அதுமட்டுமல்லாமல் தலைமுடிக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை எடுத்துக்கொள்ள வேண்டும்.
தலைமுடியில் அழுக்குகள் மற்றும் பொடுகு ஆகியவை தேங்காமல் பார்த்துக்கொள்ளவது அவசியம்.
முடக்கத்தான் கீரையை அரைத்துத் தலையில் தேய்த்து சிறுது நேரம் ஊறவைத்து பின் குளித்தால் தலையில் தேங்கியுள்ள அழுக்குகள் நீங்கும்.
இரண்டு ஸ்பூன் வெந்தயத்தை ஊறவைத்து அரைத்து தலையில் தேய்த்து அரைமணி நேரம் கழித்து குளிப்பதன் மூலம் முடி வளர்ச்சியை மேம்படுத்தலாம்.
இது போன்ற சில விஷயங்களை முறையாக பின்பற்றினாலே முடி உதிர்தலை தடுக்க முடியும். முடி உதிரும் பிரச்சனை இருந்தாலும் கூட ஹெல்மெட் அணிவதை தவிர்க்க வேண்டும். தலை கவசம் நமது உயிர் கவசம் என்பதை மறந்து விட வேண்டாம்.