சாம்பியன்ஸ் டிராபி 2025: விளையாடாத நட்சத்திர வீரர்கள்.. முழு பட்டியல் இதோ!

சாம்பியன்ஸ் டிராபி வரும் 19ஆம் தேதி தொடங்க உள்ளது. 

சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரும் 19ஆம் தேதி தொடங் உள்ளது. இந்நிலையில், இதில் பங்கேற்க முடியாத நிலையில், நட்சத்திர வீரர்கள் பலர் உள்ளனர். அவர்கள் யார் யார் என்பதை இங்கு பார்க்கலாம். 

1 /8

இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஜஸ்பிரித் பும்ரா முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக தற்போது ஓய்வில் உள்ளார். இவரது காயம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வர உள்ளது. அதை பொருத்தே அவர் சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடுவாரா என்பது தெரியவரும். 

2 /8

ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் கனுக்காலில் காயம் ஏற்பட்ட காயம் காரணமாக ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து அதிகாரப்பூர்வமாக விலகி உள்ளார். இவர் அந்த அணியின் முக்கிய வீரர் என்பதால் ஆஸ்திரேலிய அணிக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. 

3 /8

ஆஸ்திரேலிய அணியின் மற்றொரு வீரர் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து விளகியுள்ளார். அந்த அணியின் நட்சத்திர பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் இடுப்பில் ஏற்பட்ட காயம் காரணமாக சமீபத்தில் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இருந்து விலகினார். அதையடுத்து ஓய்வு பெற்று வரும் அவர் அதிகாரப்பூர்வமாக இத்தொடரில் இருந்து விலகியுள்ளார். 

4 /8

ஆஸ்திரேலியா அணியின் ஆல் ரவுண்டர் மிட்செல் மார்ஷ் முதுகு காயம் காரணமாக சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து விலக உள்ளார். 

5 /8

இங்கிலாந்து அணியின் இளம் வீரர் ஜேமி ஸ்மித் காயம் காரணமாக ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து விலக வாய்ப்புள்ளது. 

6 /8

தென்னாப்பிரிக்கா அணியின் மற்றொரு பந்து வீச்சாளரான அன்ரிச் நார்ட்ஜே-வும் இத்தொடரில் இருந்து விலக உள்ளார். இரண்டு நட்சத்திர பந்து வீச்சாளர்கள் விலக இருப்பதால் தென்னாப்பிரிக்கா அணி சறுக்கல்களைச் சந்திக்க வாய்ப்புள்ளது. 

7 /8

தென்னாப்பிரிக்காவின் நட்சத்திர பந்து வீச்சாளரான ஜெரால்ட் கோட்ஸி இடுப்பு இறக்கம் மற்றும் எலும்பு காயம் காரணமாக சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து விலகுகிறார். 

8 /8

கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக பாகிஸ்தான் வீரர் சைம் அயூப் சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து விலக வாய்ப்புள்ளது.