லவ் ஹார்மோன்களை அதிகரிக்கும் 7 பழக்கங்கள்! படுக்கையறை சுகமும் நிச்சயம்..

Daily Habits That Improve Love Hormones: உங்கள் பாலியல் ஹார்மோன்களை அதிகரிக்க, சில பழக்கங்கள் உதவும். அவை என்ன தெரியுமா?

 

Daily Habits That Improve Love Hormones: மனிதர்களாக பிறந்த அனைவருக்கும், தேவைப்படுபவையாக இருக்கிறது, பாலியல் உணர்ச்சிகள். ஆனால், சமீப சில ஆண்டுகளாக மாறி வரும் வாழ்க்கை பழக்கங்களினால் பலர், அந்த உணர்ச்சிகளை வராமல் அவதிப்படுகின்றனர். இதை மாற்ற, சில தினசரி பழக்கங்கள் இருக்கின்றன. அவை என்னென்ன பழக்கங்கள் தெரியுமா?

 

1 /7

அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும். பதப்படுத்தப்பட்ட உணவுகள், ஆல்கஹால் உள்ளிட்டவற்றை தவிர்க்க வேண்டும்.  பிளாஸ்டிக் அல்லது பிற கெமிக்கல்களை உபயோகிப்பதையும் தவிர்க்க வேண்டும்.

2 /7

சூரிய ஒளியில் கிடைக்கும் வைட்டமின் D உடலுக்கு நல்லது. தினமும், காலை ஒளியில் 15-30 நிமிடம் வரை இருக்கலாம்.  

3 /7

அதிகளவிலான கொழுப்பு இருந்தால் அதனை குறைக்கும் முயற்சியில் இறங்க வேண்டும். உடலை ஆக்டிவாக வைத்துக்கொண்டு, பாலன்ஸ் ஆன டயட்டை பராமறிக்க வேண்டும். மனதையும் உடலையும் திடமாக வைத்துக்கொண்டா, மன அழுத்தத்தை சமாளிக்கலாம். இதனால் படுக்கையறை சுகமும் அதிகரிக்கும்.  

4 /7

தினமும் மனதை ஒருநிலைப்படுத்தி தியானம் செய்யலாம். இதனால், நீங்கள் நிகழ்காலத்தில் இருக்கும் உணர்வை தக்க வைப்பதோடு உடலில் இருக்கும் மகிழ்ச்சிக்கான ஹார்மோன்கள் அதிகரித்து, மன அமைதியை ஏற்படுத்தும். இதனால் இல்லற சுகமும் அதிகரிக்கும்.    

5 /7

ஸ்ட்ரெந்த் ட்ரெயினிங் செய்தும், HIIT வர்க்-அவுட் செய்து உங்கள் ஹார்மோன்களை அதிகரிக்கும். முடிந்த வரை யோகா, கார்டியோ ஆகிய உடற்பயிற்சிகளை செய்யலாம்.  

6 /7

தினமும் 7-9 மணி நேரமாவது உறங்க வேண்டும். இது, Testosterone ஹார்மோன்களை அதிகரிக்கும். நல்ல உறக்கம், உங்கள் உடலில் சரியான பாலியல் ஹார்மோன்கள் அதிகரிக்க செய்யும்.  

7 /7

Testosterone என்ற ஹார்மோன்களை அதிகரிக்க முட்டை, நட்ஸ், கீரை மற்றும் வாழைப்பழம் ஆகிய உணவுகளை சாப்பிடலா. Estrogen எனும் ஹார்மோனை அதிகரிக்க ஃப்லேக்ஸ் சீட்ஸ், சோயா, பெர்ரி பழங்கள் ஆகியவற்றை சாப்பிடலாம்