மெட்ரோ, பஸ் இரண்டுக்கும் அதிகம் செலவாகுதா?..குறைந்த விலையில் இந்த மைலேஜ் பைக் வாங்குங்க!

low price with features: மைலேஜ் பைக்குகளின் பலன்கள் இவை: மிகவும் குறைந்த பராமரிப்பு செலவுகள், அதிக மைலேஜ், எளிதான வாகன பராமரிப்பு, மற்றும் காலநிலைக்கு ஏற்ப சுலபமாக ஓட்ட முடியும் என்பவை. இந்த பைக்குகள் குறைந்த விலையில் புதிய மற்றும் கவர்ச்சியான அனுபவத்தை வழங்குகின்றன. அதேபோல், தினசரி பயணங்களின் போது மெட்ரோ அல்லது பஸ் செலவுகளை மாற்றி எளிதாகக் கடந்து செல்லவும் இது உதவியாக இருக்கும்.

mileage bikes: மெட்ரோ மற்றும் பஸ் போக்குவரத்து முறைகள் பெரும்பாலும் நகரத்தில் பயணிக்கச் சிறந்த மற்றும் வசதியான வழிகள் ஆக இருக்கின்றன. ஆனால், அவற்றின் செலவு அதிகமாக இருப்பதால், வாரத்திற்கு அல்லது மாதத்திற்குப் பயணிக்கும் நபர்களுக்கு அது பொருளாதார ரீதியில் ஏன் பயன்படுத்துவது என்பது ஒரு கேள்வியாக வரும். அப்போ, குறைந்த விலையில் ஒரு மைலேஜ் பைக் வாங்குவது மிகவும் பயனுள்ளதாக இருக்க முடியும். இது நீங்கள் செலவிடும் பணத்தைக் குறைக்கும் வகையில் எவ்வளவு காலமும் பயணிக்க உதவும் சிறந்த மலிவான பைக்குகள் உங்களுக்காகக் கொடுக்கப்பட்டுள்ளது. 

1 /8

Economic crisis: பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் மக்கள் அன்றாட பயணச் செலவுகள் அதிகரித்துவிட்டன. இதன் மூலம் பெரிதும் நிதி பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

2 /8

Good cheap bikes: இந்த சிக்கலை எளிதில் தீர்க்க, இந்த மைலேஜ் பைக்குகள் பரிந்துரைக்கப்படுகின்றன.

3 /8

ஹீரோ ஸ்ப்லெண்டர் பிளஸ்(Hero Splendor Plus): நாட்டில் அதிகம் தேடப்படும் வண்டிகளில் இந்த பைக் முதலிடத்தில் உள்ளது. சந்தையில் இதன் விலை ரூ.77,026 முதல் தொடங்குகிறது. இது லிட்டருக்கு 70-80.6 கிமீ மைலேஜ் தருவதாக நிறுவனம் கூறுகிறது.

4 /8

பஜாஜ் பிளாடினா(Bajaj Platina): இந்தியாவில் புகழ்பெற்ற பஜாஜ் நிறுவனத்தின் பஜாஜ் பிளாடினா 100, சந்தையில் ரூ.68,890 விலையில் விற்கப்படுகிறது. இந்த பைக் 70 கிமீ தூரம் வரை செல்லும் திறன் கொண்டதாக நிறுவனம் கூறுகிறது.

5 /8

டிவிஸ் ரேடியன்(TVS Radeon): இந்தியாவில் புகழ்பெற்ற நிறுவனமான டிவிஸ் இந்த பைக்கை ரூ.69,429 விலையுடன் தொடங்குகிறது. இது 74 கிமீ மைலேஜ் தரும் என்று நிறுவனம் கூறுகிறது.

6 /8

யமஹா ரே-இசட் ஆர்(Yamaha Ray ZR): இளைஞர்களுக்கு மிகவும் பிடித்த வண்டி இது. இளம் பெண்கள் முதல் வயதானவர்கள் வரை இதைச் சுலபமாகப் பயன்படுத்த முடியும். இதன் தொடக்க விலையாக ரூ.87,888 உள்ளது. இது மணிக்கு 71.33 கிமீ தூரம் வரை செல்லும் என்று கூறப்படுகிறது.

7 /8

பஜாஜ் சிடி 110X(Bajaj CT 110 X): மலிவான விலையில் பஜாஜின் மற்றொரு பைக். இந்த பைக் சந்தையில் ரூ.68,328 விலையுடன் தொடங்குகிறது. சுமார் 70 கிமீ வரை மைலேஜ் தரும் என்று கூறப்படுகிறது.

8 /8

இந்த வண்டிகள் அனைத்தும் கிடைத்த தகவலின் அடிப்படையில் உங்களுக்காகப் பரிந்துரைக்கப்படுகின்றன. நீங்கள் இதுபற்றி மேலும் அறிய விரும்பினால் பைக் ஷோரூம் சென்று இதுகுறித்து தெளிவாகக் கேட்டு தெரிந்துகொள்ளலாம்.