தினமும் நீங்கள் சாப்பிட வேண்டிய முக்கிய உணவுகள் குறித்து இங்கு பார்க்கலாம்.
புரத சத்து என்பது நமது உடலுக்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும். பசி ஹார்மோன்களின் அளவை குறைக்கவும் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் உதவுகிறது. எனவே நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவில் கட்டாயம் புரத சத்து இருக்க வேண்டியது அவசியம்.
பருப்பு வகைகள் நாம் சாதம், குழப்பு போன்ற உணவுகளுடன் எடுத்துக்கொள்ளலாம் அல்லது தனியாக சாப்பிடலாம். பருப்பு வகைகள் புரத சத்துக்கள் நிறைந்துள்ளதால் நம் உணவில் கட்டாயம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
பால் மற்றும் பாலால் தயாரிக்கப்பட்ட பொருட்களில் புரதம் மற்றும் கால்சியம் உள்ளது. கால்சியம் உங்கள் உடம்பில் சேர்ப்பதால் உங்கள் எலும்புகள் வலுவடையும். புரதம் தசைகளை வளர்க்க உதவுகிறது.
பாதாம் உள்ளிட்ட நட்ஸ் வகைகளில் வைட்டமின் ஈ, நார்ச்சத்து, மெக்னீசியம், புரதம் போன்ற உட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. இதனை நீங்கள் தினமும் சாப்பிடுவதால் அதிக எல்டிஎல் (கெட்ட) கொழுப்பு மற்றும் இரத்த அழுத்தம் போன்ற இதய நோய் ஆபத்து காரணிகளை குறைக்கும்.
அதிகம் புரதம் நிறைந்த உணவுகளில் முட்டையும் அடங்கும். உடலை வளர்க்க நினைப்பவர்கள் இதனை அதிகம் எடுத்துக்கொள்ளலாம். வளர்ச்சிதை மற்றும் நோய் எதிர்ப்பு செயல்பாடு போன்ற முக்கிய அமைப்புகளை ஒழுங்குபடுத்த முட்டை உதவுகிறது.
சிக்கன், மட்டன் மற்றும் மீன் ஆகியவற்றில் அதிகமான புரத சத்துக்கள் உள்ளன. அசைவ உணவை சாப்பிடுபவர்கள் எளிதாக புரத சத்துக்களை பெற முடியும். சைவ உணவுகள் சாப்பிடுபவர்கள் கொண்டை கடலை உள்ளிட்டவைகளை எடுத்துக்கொள்ளலாம்.
(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான கருத்துகள். இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிப்படுத்தவில்லை. இக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ளதை கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக்கொள்கிறோம்.)